Specials Stories Trending

சூப்பர் ஸ்டாரின் 45 ஆண்டு கொண்டாட்டம் !!!

Rajini Kanth

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இப்படம் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 45 ஆண்டுகள் ரஜினியின் திரையுலக வாழ்க்கை வெற்றியுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இப்போது இருந்தே ரஜினியின் 45 ஆண்டு கால வெற்றி பயணத்தை கொண்டாட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் #45YearsOfRajinism என்ற டேகை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினியின் ரசிகர்கள் தலைவரின் 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதத்தில் Common DP ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இந்த Common DP-ஐ ரசிகர்கள் வெளியிடுவதை விட திரையுலக நட்சத்திரங்கள் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனக் கருதி இந்த போஸ்டரை வெளியிடவிருக்கும் நட்சத்திரங்களின் பெயர்களை தற்போது வெளியிட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 5 மணி அளவில் இந்த போஸ்டரை குறிப்பிட்ட நட்சத்திரங்கள் வெளியிடுகின்றனர்.

ரஜினியின் சொந்த மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள், நடிகர் பிரேம்ஜி உள்ளிட்டோர் இந்த Common DP-ஐ வெளியிடுகின்றனர். மேலும் எந்தெந்த பிரபலங்கள் இந்த போஸ்டரை வெளியிடுகின்றனர் எனும் தகவலை சூப்பர் ஸ்டார் அவர்களின் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே ரஜினி ரசிகர்கள் ஆரவாரத்துடன் சூப்பர்ஸ்டாரின் 45 ஆண்டு கால வெற்றிப் பயணத்தை பெருமளவில் கொண்டாடத் தொடங்கி விட்டனர். சூப்பர் ஸ்டார் அவர்கள் தற்போது நடித்து வரும் அண்ணாத்தே திரைப்படத்தின் ஏதாவது ஒரு அப்டேட் வரும் எனவும், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

About the author

alex lew