ரம்யா கிருஷ்ணன் அப்படின்னதும் நமக்கு ஞாபகத்துக்கு வரும் முகம் அம்மன் திருமுகம் தான்.
ஏன் அப்படின்னா 1995-ல வெளியான அம்மன் திரைப்படத்துல அம்மனாவே அவதாரம் எடுத்துருப்பாங்க. மக்களுக்கு எப்படி புடிக்காம இருக்கும்? அவங்கள கை எடுத்து கும்பிட்ட எத்தனையோ தாய்க்குலங்கள் உண்டு.
செப்டம்பர் 15, 1970-ல பிறந்தவங்க இன்னைக்கும் பார்க்குறதுக்கு அப்படியே இருப்பாங்க. ரம்யா கிருஷ்ணன மாதிரி நாமளும் இளமையா இருக்கணும்னு முயற்சி எடுத்த 70’s கிட்ஸ் நிறைய பேர் உண்டு. பதினான்கு வயசுல நடிக்க வந்தாங்க. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் திரைத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்திருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன் குச்சிப்புடி, பரதநாட்டியம் பயிற்சி எடுத்து பல மேடைகள்ல நிகழ்ச்சி நடித்தியுள்ளார். 1983-ல் வெள்ளைமனசு திரைப்படத்தின் மூலமா துவங்குன அவருடைய திரைப்பயணம் 2020-ல் அமிதாப்பச்சன் அவருடன் நடித்த உயர்ந்த மனிதன் வரை தொடர்ந்திருக்கு. இப்போ பல தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் மக்கள் மனசுல இன்னும் அதிகமாகவே இடம்பிடிச்சிருக்காங்கன்னே சொல்லலாம்.
படையப்பாவில் நீலாம்பரி கதாபாத்திரத்தின் மூலமா தன் நடிப்பு திறமைய பல கோணத்தில் வெளிப்படுத்தி இருப்பாங்க. பெண்மையின் நளினம் ஒரு பக்கம், ஆணவம் ஒரு பக்கம், அதுமட்டுமின்றி பெண்மைக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் ஆண்மையின் வேகம் எப்படியிருக்கும் என்பதையும் ரொம்ப அழகா தன்னோட நடிப்பில் வெளிப்படுத்தி இருப்பாங்க.
படையப்பா படத்துல மின்சாரக்கண்ணா பாடலுக்கு ஆடிய பரதம் ஒரு சிறப்புன்னா, கேப்டன் பிரபாகரன் படத்துல ஆடிய ஆட்டமா தேரோட்டமா இன்னொரு சிறப்பு. அதுமட்டுமா நரசிம்மா படத்துல ஆடிய லாலா நந்தலாலா ஒருவகை, குத்து படத்துல ஆடிய போட்டுத்தாக்கு ஒருவகை.
நடிப்பு, நடனம்னு திரைத்துறையில் கலக்கிய ரம்யா கிருஷ்ணன் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்குனாங்க. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்கம் தொடர்ல 2 வேடங்களில் நடித்து மக்கள் இல்லங்களுக்கு போய் அவர்களின் இதயங்களில் இடம் பிடிச்சாங்கனு சொல்லலாம். இன்று அவருக்கு பிறந்த நாள், அவருடைய கலைப்பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் என்று அவரை மனமார வாழ்த்துவோம்.