Cinema News Stories

ரசிக்க வைக்கும் ரசவாச்சியே !!!

சுந்தர்.சி இயக்கி ஆர்யா நடித்து வெளிவரவிருக்கும் அரண்மனை 3 திரைப்படத்தின் “ரசவாச்சியே” பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

அரண்மனை திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மூன்றாம் பக்கத்திற்கும் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. முதல் இரண்டு பாகங்களைப் போலவே மூன்றாம் பாகமும் கமர்ஷியல் கலந்த திகில் படமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கலாம்.

பொதுவாக சித் ஸ்ரீராம் பாடும் பாடல்கள் அனைத்தும் இசை ரசிகர்களின் Playlist-ல் அதிகம் ஒலிக்கும் பாடல்களாக அமையும். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ரசவாச்சியே பாடலும் சித்தின் ஹிட் நம்பர்களில் ஒன்றாக இடம்பெறும் என தெரிகிறது.

இப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். ரசவாச்சியே பாடலுக்கு பாடலாசிரியர் மோகன் ராஜன் வரிகளை எழுதியுள்ளார்.

அரண்மனை 3 திரைப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து சுந்தர்.சி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

அரண்மனை 3 திரைப்படம் வெற்றி அடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

லிரிக் வீடியோவை கீழே காணுங்கள்.

About the author

alex lew