இந்த கட்டுரையானது ஹரிணி மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர்களின் வீடியோ உரையாடலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா எடுத்த T-20 Challenge தான் இந்த தொகுப்பு.
உங்களுடைய Last Date எப்பொழுது நடந்தது?
நான் கடந்த இரண்டு வருடங்களாக Single-ஆக இருக்கிறேன். மிகவும் Bore அடிக்கிறது. என்னுடைய கடைசி Date எனக்கு நியாபகமே இல்லை.
நீங்கள் செய்த ஒரு சட்டவிரோதமான செயல் என்ன?
நான் ஒரு முறை ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ஒரு ஆரஞ்சு பலத்தை திருடிவிட்டேன்.
உங்களுடைய முதல் Break UP எப்பொழுது நடந்தது?
எனக்கு நிறைய காதல் கதைகள் உண்டு. ஆனால் அது அனைத்துமே ஒரு தலை காதல் தான். யாரும் என்னை விரும்பவில்லை என்று எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
யாரையாவது பொது இடத்தில் அடித்து இருக்கிறீர்களா?
ஒரு Shooting-ல் ஒருவரை அடிக்கும் காட்சி ஒன்றில் அடித்து உள்ளேன். முதலில் அவரை அடிக்க நான் தயங்கினேன், பிறகு இயக்குனர் நன்றாக அடிக்க சொன்னார். நானும் அவரை ஆக்ரோஷத்துடன் அடித்து விட்டேன்.
நீங்கள் அதிகமாக உபயோகிக்கும் செயலி (App) எது?
எப்பொழுதுமே Instagram தான் அதிகமாக உபயோகிப்பேன்.
நீங்கள் திரும்ப திரும்ப பார்த்து emotion ஆன ஒரு படம் எது?
அருவி படம் பார்த்து நான் மிகவும் Emotion ஆகிவிட்டேன்.
ஒரு படம் அளவுக்கு மீறி கொண்டாடப்பட்டது என்றால், எந்த படத்தை சொல்லுவீங்க?
அதை நான் சொல்லவேமாட்டேன்.
திரையில் ஒரு நடிகருடன் இணைந்து நடிக்க நீங்கள் ஆசை படும் நடிகர் யார்?
இப்பொழுது கார்த்தி சார் கூட ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன், அதனால் கார்த்தியுடன் நடிக்க ஆசை படுகிறேன்.
இந்த படத்தில் நான் நடித்து இருக்கலாம், என்று நீங்கள் நடிக்க ஆசை பட்ட படம் எது?
சூப்பர் Deluxe மற்றும் மெர்சல்.
நீங்கள் விரும்பும் ஆணிடம் இருக்க வேண்டிய சிறப்பம்சங்கள் என்னென்ன?
அவன் எனக்கு மட்டும் நல்லவனாக இல்லாமல் எல்லோருக்கும் நல்லவனாக தெரிய வேண்டும். அவனுடைய நடை, சிரிப்பு, பாவனை அனைத்தும் எனக்கு பிடித்து இருக்க வேண்டும்.
நீங்கள் உங்களிடம் இருந்து மாற்றி கொள்ள வேண்டிய ஒரு விஷயம்?
அடுத்தவர்கள் மீது அக்கறை செலுத்துவது.
உங்களுடைய முன்னாள் காதலரிடம் தோழியாக இருக்கிறீர்களா?
ஆம் இருக்கிறேன், அதில் என்ன இருக்கிறது.
தன்மையுடன் நடிக்க விரும்புகிறீர்களா ? தளபதியுடன் நடிக்க விரும்புகிறீர்களா?
எனக்கு நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அதனால் இந்த கேள்விக்கு நான் பதிலளிக்கமாட்டேன்.
தென்னிந்திய கதாநாயககிகளுள் உங்களுக்கு யாரை பிடிக்கும்?
எனக்கு சமந்தா, சாய் பல்லவி, நயன்தாரா, திரிஷா என அனைவரையும் பிடிக்கும்.
விஜய் தேவர்கோண்டாவிற்கு ஒரு அறிவுரை கூற வேண்டுமெனில், என்ன கூறுவீர்கள்?
‘நீங்கள் நன்றாக நடித்து வருகிறீர்கள், ஒருபோதும் உங்கள் வேலையை கடினமாக்கிக் கொள்ளாதீர்கள். Gym-ற்கு செல்லுங்கள், உடலை பார்த்துக் கொள்ளுங்கள்’, என்று கூறுவேன்.
முழு Interview-யை கீழே கண்டு மகிழுங்கள்.