பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கியுள்ள RRR திரைப்படத்தை குறித்த மிகப்பெரிய Update வெளியாகியுள்ளது. இப்படத்தை குறித்த அறிவிப்பு வந்ததிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை குறித்த Update தற்போது வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகும் RRR படத்தில் ராம் சரண், ஜூனியர் NTR, அஜய் தேவ்கன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பாகுபலி திரைப்படத்திற்கு இசையமைத்த கீரவாணி தான் RRR திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
பாகுபலியை போல இப்படமும் ரசிகர்கள் கொண்டாடும் பிரம்மாண்ட திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிக்கும் நட்சத்திர பட்டியலே இப்படத்தை விரைவில் திரையில் காண வேண்டும் என்ற எண்ணத்தை ரசிகர்களுக்கு தூண்டுகிறது.
இப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீத்தாராம ராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரை பற்றிய வரலாற்று படமாக எடுக்கப்படுகிறது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜமௌலியின் படங்கள் என்றாலே அதில் விறுவிறுப்பான திரைக்கதைக்கும், பிரமாண்டமான காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது, அதிலும் RRR திரைப்படம் சுதந்திரத்திற்கு முன்னால் உள்ள வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படம் என்பதால் இப்படத்தின் கதையம்சம் அனைவரும் ரசிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.