இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் RRR திரைப்படத்தின் நாட்டுக் கூத்து பாடலின் லிரிக் வீடியோ தற்போது youtube-ல் வெளியாகியுள்ளது. இப்படத்தை குறித்த எந்த Update வெளிவந்தாலும் சமூக வலைதளங்களில் trend ஆவது வழக்கம்.
பாகுபலி-2 திரைப்படத்தைத் தொடர்ந்து இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி இயக்கியுள்ள இந்த RRR படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் என்.டி.ஆர், ராமச்சரன், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான “நட்பு” பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த நாட்டுக் கூத்து பாடலும் கேட்போரை துள்ளாட்டம் போட வைக்கும் வகையில் அமைந்துள்ளது. பாகுபலி புகழ் எம்.எம். கீரவாணி அவர்களே RRR திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இன்று வெளியாகியுள்ள நாட்டுக் கூத்து பாடலை பாடகர்கள் ராகுல் மற்றும் யாசின் பாடியுள்ளனர்.
இப்பாடலை தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். இப்பாடலின் lyric வீடியோவின் நடுவில் ராம்சரண் மற்றும் என்.டி.ஆர் இணைந்து மின்னல் வேகத்தில் நடனமாடும் சிறிய Clip ஒன்று இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
RRR திரைப்படம் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது. இப்படம் மாபெரும் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது வெளியாகியுள்ள நாட்டுக்கூத்து பாடலின் லிரிக் வீடியோவை கீழே காணுங்கள்.