செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் Update வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களை சினிமா ரசிகர்கள் திருவிழா கோலம் பூண வைத்துள்ளனர். இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிப்பது ரசிகர்களுக்கு Extra சந்தோஷம்.
இப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையும் மற்றொரு படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. தனுஷுடன் தான் மீண்டும் இணைந்து படம் பண்ணவிருப்பதை கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி செல்வராகவன் ரசிகர்களிடம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்தார்.
செல்வராகவன் இயக்கும் 12-வது படமான இப்படத்தில், ரசிகர்கள் கொண்டாடிய கூட்டணியான செல்வா – தனுஷ் – யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி 4-வது முறையாக இணையவுள்ளது. இப்படத்தை குறித்த Announcement வந்தததிலிருந்தே இப்படத்தின் மீது அளவில்லா எதிர்பார்ப்பு ஏற்பட தொடங்கிவிட்டது. ஆயிரத்தில் ஒருவன் 2-ற்கு முன் தனுஷை வைத்து மற்றொரு ஹிட் படம் கொடுக்க செல்வா தயாராகி விட்டது போல தெரிகிறது.
இப்படம் செல்வராகவனும் யுவன்ஷங்கர் ராஜாவும் இணையும் 8-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செல்வா வைத்திருக்கும் Surprise என்னெவென்று தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் நாளுக்கு நாள் கோலிவுட் வட்டாரத்தில் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் Spot ஸ்டில் ஒன்றை செல்வா வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” And Back to my World ” என்று குறிப்பிட்டுள்ளார். செல்வராகவனின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
கலைப்புலி S.தாணு தயாரிப்பில் செல்வா இயக்கும் இந்த #S12 திரைப்படம் வெற்றியடைய சூரியன் Fm சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.