நிறைய பேருக்கு ADVICE பண்ணாலே புடிக்காது. அட்வைஸ் பண்றவங்கள பாத்தாலே தெறிச்சு ஓடிருவோம். ஆனா இவரு பண்ற அட்வைஸ மட்டும் காது குடுத்து கேக்கணும்னு தோணும்.
அட்வைஸ்னு சொன்னதும் GUESS பண்ணிருப்பீங்க… Yes, ‘SAMUTHIRAKANI’ தான். சமுத்திரக்கனி ஒரு நல்ல டைரக்டர், நல்ல நடிகர் National Award வாங்கிருக்காரு, அப்படி தான் நமக்கு தெரியும். ஆனா இதே சமுத்திரக்கனி 1992ல இருந்தே கஷ்டப்பட்டு வந்த ஒருத்தரு.
உதவி இயக்குநரா, துணை இயக்குநரா டிவி serials-ல வேலை பார்த்து, துணை கதாபாத்திரமா Reality shows-ல நடிச்சு எல்லாமே Failure ஆகி ஊருக்கே திரும்பி போய்டலாம்னு நினைக்கும்போது தான் ஒரு Turning point அவரு வாழ்க்கைல வந்துச்சு. அதான் ‘SUBRAMANIYAPURAM’.
சசிகுமார் சொன்ன ஒரே வார்த்தைய நம்பி வேலையே இல்லாம பல நாள் சென்னைல இருந்தாரு. சும்மா சொல்லக்கூடாது கதாநாயகிக்கு சித்தப்பா ஆனாரோ இல்லையோ பல காதலர்களுக்கு எதிரி ஆயிட்டாரு.
சமுத்திரக்கனி சினிமாக்கு வந்த புதுசுல துணை கதாபாத்திரங்கள்ல நடிச்சுட்டு இருக்கும் போது ஒரு DIALOGUE பேச வாய்ப்பு கிடைக்குமானு ரொம்ப ஆசையா இருக்குமாம். அப்போ இவர் நடிச்சுட்டு இருந்த படத்துல ஒரு நாள், படத்தோட இயக்குநர் ஒரு வசனத்த உதவி இயக்குநர் கிட்ட கொடுத்து யாரையாவது இந்த வசனத்த பேச வைனு சொல்லிட்டு போய்டுறாரு.
இவரு அந்த வாய்ப்புக்காக உதவி இயக்குநரோட பிஞ்ச செருப்ப தெச்சு குடுத்து வாய்ப்ப வாங்கிருக்காரு. இத கேள்வி பட்ட செருப்பு கடைக்காரர் இலவசமா தெச்சு குடுத்துருக்காரு.
இப்படி வாய்ப்புகள உருவாக்கி SERIAL இயக்குநர் ஆன பின்னாடி 2004-ல விஜயகாந்த் உடன் இணைந்து ‘நெறஞ்ச மனசு’ படம் பண்ணாரு, பயங்கர FLOP. என்ன பண்றதுனே தெரியாம பருத்திவீரன் அமீர்கிட்ட உதவி இயக்குநரா சேர்றாரு. கேட்டதுக்கு என்கிட்ட ஏதோ ஒரு குறை இருக்கு, அத நிவர்த்தி பண்ணாம Field-அ விட்டு போகமாட்டேன்னு சொல்லிருக்காரு.
இப்போ வந்த RRR படத்தில கூட சமுத்திரக்கனிய பாத்து தமிழ் மக்களுக்கு நம்ப ஆளு இருக்காருப்பா அப்படிங்குற மாறி ஒரு நிம்மதி. அவரு படத்தில வர்ற எல்லா வசனமுமே நாடோடிகளாகட்டும், விநோதய சித்தமாகட்டும், அப்பாவாகட்டும் எல்லாமே வாழ்க்கையோட ஒன்றி போகும்.
ஹலீதா ஷமீம் எடுத்த சில்லு கருப்பட்டில கணவன் கதாபாத்திரம் பண்ணிருப்பாரு. அந்த கதாபாத்திரத்த அவரை விட நிறைவா யாருமே பண்ண முடியாது அப்டினு Prove பண்ணிருப்பாரு. THAT IS SAMUTHIRAKANI.