காவேரிக் கரையான திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் உருவாகியிருக்கிறார்.
பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சியில் தான். தமிழ் சினிமாவில் Engineering படிச்ச ஒரே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மட்டும் தான். நடிகர் சிவகார்த்திகேயன் ,நடிகர் மற்றும் இயக்குனர் அருண் ராஜ் காமராஜ், படிச்ச அதே JJ Engineering காலேஜ்-ல் தான் சந்தோஷ் நாராயணனும் Engineering படிச்சாரு.
சின்ன வயசுல இருந்தே Music மேல அதிக ஆர்வமா இருந்த சந்தோஷ் நாராயணன் பெரிய இசையமைப்பாளர் ஆகனும்னு கனவோட சென்னைக்கு வந்தாரு .
சென்னைக்கு வந்து 9வருஷம் பல பேரிடம் Assistant-ஆ இருந்தாரு, பல Independent Album இவரே Compose பண்ணினாரு. அப்படி இவரு Compose பண்ணின ஒரு Album song-க்கு இசை புயல் AR Rahman கிட்ட இருந்து பாராட்டு கிடைத்தது.
Electronic music-ல் சந்தோஷ் நாராயணன் ரொம்ப Strong, அவருக்கு Electronic music வச்சு ஒரு படத்துக்கு Compose செய்வது தான் கனவா இருந்துச்சு. அப்படி தான் தமிழ் சினிமால அறிமுகம் ஆகனும்னு நினைத்தார், ஆனா சந்தோஷ் நாராயணனின் அறிமுகம் கானா பாடல் மூலமா இருக்கும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டாரு.
கானா பாடல் என்றாலே தேனிசைத் தென்றல் தேவா தான் நமக்கு ஞாபத்துக்கு வருவாங்க, அவருக்கு பின் தற்போது தமிழ் சினிமாவில் கானா பாடல் என்றாலே சந்தோஷ் நாராயணன் தான் என சொல்லும் அளவுக்கு இவரது பாடல்கள் இருக்கும். 2012-ல் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்துல தான் சந்தோஷ் அறிமுகம் ஆனாரு, அப்போ பா.ரஞ்சித் இந்த படத்துல Electronic musics இருக்க கூடாது,வெறும் Live ஆன கானா Songs தான் இருக்கனும்னு சொல்லிடாரு .கானா இசையே தெரியாம அத கத்துகிட்டு சந்தோஷ் நாராயணன் போட்ட “ஆடி போனா ஆவணி” பாட்டு பட்டி தொட்டியெல்லாம் சந்தோஷ் நாராயணன் பெயரை உச்சரிக்க செய்தது.
அதற்கு பிறகு சந்தோஷ் நாராயணன் இசையில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆன பீட்சா, சூது கவ்வும், மெட்ராஸ், ஜிகர்தண்டா என பல படங்கள் தமிழ் சினிமாவில் புது விதமான பிண்ணனி இசையை கொடுத்தது. எடுத்துக்காட்டாக சூதுகவ்வும் படத்துல விஜய் சேதுபதி வங்கியில் போய் பணம் வாங்கிட்டு திரும்ப வரும் போது சந்தோஷ் நாராயணன் போட்ட அந்த பிண்ணனி இசை தாறுமாறு. 2011க்கு பிறகு பா. ரஞ்சித், கார்திக் சுப்புராஜ், நளன் குமாரசாமி, சுதா கொங்காரா, மாரி செல்வராஜ்-னு பல புது இயக்குனர்கள் புதுவிதமான கதைகளோட தமிழ் சினிமாவுக்குள் வந்தாங்க. அவங்க எல்லாரோட படங்களும் மக்கள்கிட்ட போய் சேர சந்தோஷ் நாராயணனோட இசை மிகப்பெரிய உதவியா இருந்துச்சு.
2016-ல் தமிழ் சினிமாவின் இசை ரசிகர்கள் அனைவருடைய கவனமும் சந்தோஷ் நாராயணன் பக்கம் திரும்புச்சு, அதுக்கு காரணம் பா. ரஞ்சித் இயக்கத்துல நம்ம Superstar நடிச்ச கபாலி படம், அந்த படத்துல சந்தோஷ் நாராயணன் Superstar intro song-னாலே SPB குரல்தான்னு இருந்தத மாத்தி கானா பாலாவ பாட வச்சிருப்பாரு. அதே பாட்டுல Superstar விசில் அடிச்சுட்டே வர மாறி ஒரு track பண்ணி இருப்பாரு, அதெல்லாம் வேற லெவல். அதே படத்துல இருக்க நெருப்புடா பாட்டு நெருப்பு மாறி எல்லா இடமும் பரவுச்சு. அந்த படத்துல இருந்து சந்தோஷ் மேல இன்னும் எதிர்பார்புகள் அதிகமாச்சு. சந்தோஷ் நாராயணன் என்றாலே கானா பாட்டு, பிண்ணனி இசை அப்படினு மட்டும் கிடையாது, மெலடிலயும் நான் ராஜானு இவரே பதில் சொல்ற மாதிரி இருக்கும் இவரோட மெலடி பாடல்கள். மோகதிரை,கண்ணம்மா,மாயநதி-னு சொல்லிட்டே போகலாம்.
இளையராஜா, Ar Rahman-க்கு பிறகு பாடல்களில், பிண்ணனியில் Violin அதிகமா Use பண்றது சந்தோஷ் நாராயணன் தான். இறைவி படத்துல வரும் மனிதி வெளியே வா பாடலை ஒவ்வொரு முறையும் பெண்கள் கேட்கும் போது ஒரு புத்துணர்ச்சி வரும், அதுபோல சோர்வா இருக்க நேரங்கள்ல மனிதன் படத்துல வர முன் செல்லடா பாட்ட கேட்டா போதும் எதையும் சாதிக்கலாம் என்கிற நம்பிக்கை வரும்… இப்படி பட்ட தரமான இசையோட ஆடிபோனா ஆவணில ஆரம்பிச்சு – குக்கூ குக்கூ வரை தொடரும் சந்தோஷ் நாராயணனின் இசைப் பயணம் இன்னும் பல உயரங்களை தொட சூரியன் FMன் வாழ்த்துக்கள்.