Cinema News Stories

Boxing-ல் வெல்லுமா சார்பட்டா பரம்பரை ???

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் டிரைலர் தற்போது Youtube-ல் வெளியாகியுள்ளது. பல நட்சத்திரங்களின் கடின உழைப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூலை 22-ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகிறது.

வெள்ளைக்கார குத்துசண்டையான Boxing விளையாட்டில் இரு அணிகளுக்கு நடுவில் நடக்கும் யுத்தமே சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் கதையாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் Trailer-ஐ பார்க்கும் போது நமக்கு ஏற்படுகிறது. இப்படத்திற்காக ஆர்யா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கன் ஆகியோர் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு கதைக்கு ஏற்ப தங்களின் உடற்கட்டை மெருகேற்றி உள்ளனர்.

Image

மேலும் இப்படத்தில் பசுபதி, துஷாரா விஜயன், சபீர், ஜான் விஜய், காளி வெங்கட், முத்துக்குமார் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பொதுவாக பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு சமூக கருத்தை ஆழமாக சொல்லும்படி அமைந்திருக்கும். அந்த வகையில் சார்பட்டா பரம்பரையிலும் ஏதாவது ஒரு சமூகத்திற்கு தேவையான கருத்து அடங்கி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பா.ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்தாலே படமும் பாடல்களும் சூப்பர்ஹிட் என்பது எழுதப்படாத விதியாகவே தற்போது வரை இருந்து வருகிறது. சார்பட்டா பரம்பரை திரைப்படத்திலும் இந்த வெற்றிக் கூட்டணி கை கோர்த்துள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை தற்போது வெளியாகியுள்ள Trailer மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்றே கூறலாம். இந்த trailer வீடியோவை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் பதிவில் இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யா, மற்றும் இப்படம் உருவாக காரணமான அனைவருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் சூர்யா தெரிவித்தார்.

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் Trailer-ஐ கீழே காணுங்கள்.

About the author

alex lew