இந்த கட்டுரையானது ஹரிணி மற்றும் பாடகர் சித் ஸ்ரீராம் இவர்களின் வீடியோ உரையாடலில் இருந்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது. பாடகர் சித் ஸ்ரீராம் எடுத்த T-20 Challenge தான் இந்த தொகுப்பு.
நீங்கள் பாடிய பாடல்களுள் உங்களுக்கு Challenging-ஆக இருந்த பாடல் எது?
தள்ளி போகாதே பாடல் தான். அதன் Melody எனக்கு பாடுவதற்கு கடினமாக இருந்தது.
கிளாசிக்கல் இசை பிடிக்குமா இல்லை வெஸ்டர்ன் இசை பிடிக்குமா?
எனக்கு எப்போதுமே கிளாசிக்கல் இசை தான் பிடிக்கும்.
உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகை?
த்ரிஷா எனக்கு ரொம்ப பிடிக்கும்.
உங்களுடைய Celebrity Crush யாரு?
அப்படி யாருமே கிடையாது.
உங்களுடைய முன்னால் காதலியுடன் நட்பு கொண்டு உள்ளீர்களா?
இல்லவே இல்லை.
இணையத்தில் அதிகமாக எந்த வீடியோக்கள் பார்ப்பீங்க?
நான் அதிகமாக ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோக்கள் தான் பார்ப்பேன்.
உங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம்?
நான் என் சிறு வயதில் ஒரு முறை அஜித் சாரை சந்தித்தேன். அதை மறக்கவே முடியாது.
நீங்கள் பாடகராகவில்லை என்றால் என்னவாக இருந்திருப்பீர்கள்?
எனக்கு அதை பற்றி எந்த ஐடியாவும் இல்லை.
யாரை நீங்கள் அதிகமாக Miss பண்றீங்க?
அப்படி யாருமே இல்லை. நான் விரும்பும் அனைவரும் என்னோடு தான் இருக்கிறார்கள்.
உங்களது முதல் முத்தம் எந்த பருவத்தில் ?
எனக்கு 18 வயது இருக்கும் போது தான்.
உங்களுக்கு இருக்கும் ஒரு வித்யாசமான பழக்கம்?
எனது நகத்தோலை உரிப்பது.
முழு விடியோவை கீழே கண்டு மகிழுங்கள்