நடிகர் சிம்பு தன் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் கூறியதை கீழே காண்போம்.
இந்த கடிதத்தில், மிகத் துயரமான நாட்களாக கடந்த சில நாட்கள் இருந்து வருவதாக சிம்பு தெரிவித்துள்ளார். டாக்டர் சேதுராமன், சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புட் ஆகியோரின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்த அவர் அவர்களின் இறப்பு சிம்புவை கடுமையாக பாதித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மட்டும் அவர்களைத் தேற்றி விடாது என கூறியுள்ள சிம்பு, “இறந்தவர்களின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாற தான் வேண்டுவதாக” குறிப்பிட்டிருக்கிறார்.
இத்துடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களுக்கும், தன் ஆழ்ந்த இரங்கலை சிம்பு தெரிவித்தார். “சுஷாந்த் சிங்கின் ‘தில் பேச்சுரா’ திரைப்படம் அவரின் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, திரையில் வெளியாக வேண்டும்” என தான் விரும்புவதாக தெரிவித்தார்.
சுனாமி, கஜா புயல் என எத்தனையோ பேரிடர்களை நாம் இதற்கு முன் சமாளித்து இருக்கிறோம். அதுபோல கொரோனாவையும் பார்த்து அஞ்சாமல் துணிந்து எதிர்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
“செய்வோம் இந்த இடரை தாண்டி நிலைபெற்று வெல்வோம்” என அக்கடிதத்தில் நம்பிக்கையூட்டும் விதத்தில் சிம்பு தன் கருத்துக்களையும் வேண்டுகோளையும் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். சிம்பு ரசிகர்களுக்காக எழுதிய கடிதத்தை கீழே காணுங்கள்.