நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படத்தின் “So Baby” single பாடல் இணையத்தில் வெளியாகி Youtube-ல் டிரெண்ட் ஆகி வருகிறது. டாக்டர் திரைப்படம் வரும் மார்ச் 26-ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் “So Baby” பாடல், படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு இசை விருந்தாய் அமைந்துள்ளது.
ஏற்கனவே இப்படத்தில் ‘செல்லமா’ மற்றும் ‘நெஞ்சமே’ பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘So Baby’ பாடலும் வெளியாகி 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில் Youtube-ல் 30 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.
இப்படத்தின் செல்லம்மா பாடலுக்கு வரிகளை எழுதிய இப்படத்தின் நாயகனான சிவகார்த்திகேயனே So Baby பாடலுக்கும் வரிகளை எழுதியுள்ளார். செல்லம்மா பாடலின் Promo வீடியோவை போலவே So Baby பாடலுக்கும் அனிருத், நெல்சன் மற்றும் சிவா இணைந்து பேசிக்கொள்ளும் ஒரு கலகலப்பான Promo வீடியோவை வெளியிட்டனர்.
அனிருத்தின் அருமையான இசையும், காந்த குரலும் இப்பாடலை Repeat Mode-ல் கேட்க வைக்கிறது என்றே சொல்லலாம். பாடலின் Lyric வீடியோக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு Music வீடியோவை வெளியிட்டு டாக்டர் படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி அளித்தனர். பாடல் Youtube-ல் வெளியான 2 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை பெற்று டிரெண்ட் ஆக தொடங்கிவிட்டது.
So Baby பாடலின் Music வீடியோவை கீழே காணுங்கள்.