Cinema News Specials Stories

“8 Years of Demontee Colony”

நாம பலபேர்கிட்ட பல கோடி முறை கேட்ட, கேட்டுட்டு இருக்க ஒரு கேள்வி சந்திரமுகி படத்துல வசனமா வரும் “பேய் இருக்கா இல்லையா..? நம்பலாமா நம்பக்கூடாதா..? பார்த்து இருக்காங்களா பாக்கலையா..? இதுக்கான பதில் ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் ஒவ்வொரு மாரி வரும்.

ஆனா பேய் படம்னு வரும்போது பேய்க்கு பயப்புடுரவங்க, பேயே இல்லனு சொல்றவங்க எல்லாரும் ஒன்னு கூடி பாப்பாங்க. தியேட்டர்ல பேய் படம் பாக்குறதே ஒரு தனி Feel, சிலர் Screen-ல வர பேய கலாய்ச்சி பாப்பாங்க, சிலர் Screen-அ பாக்காம பயந்துட்டு இருப்பாங்க, இப்படி தியேட்டர்க்குள்ள இருந்த மொத்த பேரையும், அடுத்தென்ன அடுத்தென்னனு பயம் கலந்த எதிர்பார்ப்போட பாக்க வச்ச படம் தான் Demontee Colony.

ஸ்ரீனி, ராகவன் , விமல், சஜித் இந்த 4 பேரையும் பேயோட போராட வைக்குறது என்ன தெரியுமா? ராகவன் எடுத்துட்டு வந்த ’John Demontee’ மனைவியோட நகை. படம் ஆரம்பிச்ச 15 நிமிஷத்துல இந்த 4 பேரும், சென்னைல இருக்க Demontee பங்களாக்கு போறாங்க.

உள்ள போன உடனே சஜீத்த பயமுறுத்த எல்லாரும் தனித்தனியா போய் விளையாடுறாங்க, அப்பறம் சில நொடிகள்ல ஏதோ ஒரு அமானுஷ்யத்த ஒவ்வொருத்தரும் உணர ஆரம்பிச்ச அப்பறம் ஒன்னா வீட்டுக்கு கிளம்பி போறாங்க. மறுநாள் 4 பேரும் ஒரு கைரேகை ஜோசியர பாக்கைல, அதுல சஜித்-க்கான ஓலைச்சுவடி மட்டும் இல்லனு சொல்லவும்… இன்னொரு நாள் வரேனு கிளம்புராங்க.

Image

கிளம்பி போன சில நிமிஷத்துல ஸ்ரீனிக்கு ஜோசியர் கிட்ட இருந்து போன் வருது அவசரமா பேசனும்னு ஆனா சரியா பேச முடியல, உடனே திரும்ப ஜோசியர பாக்க ஸ்ரீனி போனா அங்க அவரு இறந்திருக்காரு. அப்பறம் வீட்டுக்கு வந்த பின்ன ராகவன் எல்லார் கிட்டயும் Demontee Colony பத்தி கதைய சொல்றான், அதுல John Demontee பத்தி சொல்லைல அவரு மனைவிக்கு அவர் பரிசா கொடுத்த விலைமதிப்பற்ற செயின் பத்தி தெரிய வருது.

John Demontee தன்னோட மகன இழந்து, மனைவி கற்பழிக்கபட்டது தெரிஞ்சு மனதளவுல பாதிக்கப்பட்டு அந்த பங்களால இருந்த எல்லாரையும் கொல்லுறாரு, அதனால ஊர் மக்களும் அவரோட பங்களாவையே எரிக்குறாங்க. இதோட Demontee பத்தின கதைய ராகவன் சொல்லி முடிக்க, அந்த செயின எடுத்துட்டு வந்தத தன்னோட Friends கிட்ட காட்டுறான்.

அத பாத்த விமலும் , ஸ்ரீனியும் பயத்துல நடுங்குறாங்க. ஏன்னா அந்த செயின Demontee பங்களால இருந்து யாரு எடுத்துட்டு வந்தாலும் அவங்க உயிர் போயிடும். ஆனா ராகவன் அதெல்லாம் சும்மா கட்டுக்கதைனு சொல்லி Friends-அ கூல் பண்ணாலும் அதான் நிஜம்னு அவங்களுக்கு புரிய வைக்குற மாதிரி சம்பவம் நடக்குது. 3 பேரும் பேய் படம் பாக்கலாம்னு டிவி போட்டா அந்த டிவில இவங்க 3 பேரும் எப்படி இறந்து போவாங்கனு காட்சி வரும்.

அத பாத்து பயந்த ஸ்ரீனி, ராகவன், விமலுக்கு அடுத்த அதிர்ச்சி… ஜோசியரோட கால் Record. அதுல இவங்க கூடவே இப்ப இருக்க சஜித் இறந்து 2 நாள் ஆகுதுனு ஜோசியர் சொல்லியருப்பாரு. இத சொல்ல தான் அப்பவே ஸ்ரீனிய வர சொன்னாரு. ஒரு பக்கம் நம்ம கூடவே இருக்க சஜித் இறந்து போய் அதே Room-ல இருக்கான், இன்னொரு பக்கம் Demontee பங்களால இருந்து எடுத்துட்டு வந்த நகையால தங்களோட உயிர் போகும்னு டிவில பாத்த காட்சி.

Why De Monte Colony Is Chennai's Most Haunted Neighborhood

இப்பிடி Screen-ல இருக்க 3 பேர் மட்டும் இல்லாம தியேட்டர்ல படம் பாத்த நம்மளயும் அதே பயத்துல வச்சிருந்தாரு இந்த படத்தோட டைரக்டர் அஜய் ஞானமுத்து. இந்த பிரச்சனைல இருந்து தப்பிக்க 3 பேரும் எந்த முயற்சி எடுத்தாலும் அது தோல்வில தான் முடியும் அதுக்கு ஏத்த மாதிரி ஒவ்வொருத்தரையும் John Demontee-யே கொல்லுவாரு. அந்த தருணம் டங் டங் டங்னு ஒரு சுத்தியல் சத்தத்த BGM-ஆ போட்டு மொத்த தியேட்டரையும் கதிகலங்க வச்சுட்டாங்க.

ஸ்ரீனிக்கு மட்டும் அவங்க வீட்ல இருந்து ஒரு வழி கிடைச்சு தப்பிச்சுருவாரு. படம் பாத்த எல்லாருக்கும் என்னடா ஹீரோ மட்டும் தப்பிக்குறான்னு தோணுச்சு. ஆனா அதுலையும் ஒரு Twist… ஸ்ரீனி தப்பிச்சு குதிக்கும் போதே உயிர் போயிருக்கும் நாம பார்த்தது ஸ்ரீனியோட ஆவிய தான்… Demontee பங்களால இருந்து எடுத்துட்டு வந்த நகையோட சஜித் லாரில போற மாதிரி ஒரு Frame-ஓட Demontee Colony படத்த முடிச்சிருப்பாங்க.

வதந்தி பேய்:

இந்த படத்தோட மிகப்பெரிய பலமே Screenplay, Correct-ஆன Casting. முக்கியமா படம் முழுக்க நம்மள பயத்துலயே வச்சிருந்த Background Music. இப்பவரை தமிழ் சினிமாவோட Horror Thriller வரிசைல மிக முக்கியமான இடத்த பிடிச்சிருக்க Demontee Colony ரீலிஸ் ஆகி இன்னையோட 8 வருஷங்கள் ஆச்சு.

வெகு விரைவுல இந்த படத்தோட Part-2 ரீலிஸ் ஆக போகுது, நீங்க Demontee Colony Part 2-க்கு எவ்ளோ Eager-ஆ Wait பண்றீங்க? Part 1 யாரோட பாத்தீங்கன்றத Comments ல Share பண்ணுங்க.

Article By RJ SRINI