Cinema News Specials Stories

All Rounder ‘Jayam Ravi’

தன் அப்பாவின் அடையாளத்தாலும் தன் அண்ணனின் துணையாலும் சினிமாவில் நுழைந்தவர் இன்று தனக்கென்று ஒரு அடையாளத்தை மட்டுமில்லாமல் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார்.

ஜெயம் படத்துல கதாநாயகனா விஜயம் செய்தவர் தான் நடிக்கிற எல்லா படங்களாலயும் மக்கள் மனசுல ஜெயம் கொண்டாருனு சொல்லலாம். அட நம்ம ஜெயம் ரவி தாங்க.

ஜெயம் படத்துக்கு முன்னாடி தெலுகு படத்துல சின்ன வயசுல நடிச்சிருக்காரு. அதற்கு பிறகு 2003-ல எம்.குமரன் S/O மஹாலக்ஷ்மி படத்துல நடிச்சு தமிழ்நாடு State Film விருது வாங்குனாரு. அத தொடர்ந்து 2005-ல தாஸ் படத்துக்காக Football கத்துக்கிட்டு படத்துல நடிச்சிருப்பாரு.

எந்த ஒரு செயல் செய்தாலும் சிறப்பா செய்யணும்னு அதுக்காக கடுமையா உழைக்கும் குணமே இவருக்கு இந்த விருதை வாங்கி கொடுத்துருக்குது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதை தொடர்ந்து மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி என்று வெற்றி திரைப்படங்கள் கொடுத்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து காதல் திரைப்படங்களில் நடித்து ஒரு சாக்லேட் BOY ஆக வலம் வர தொடங்கினார்.

இப்படியே போய்ட்டு இருந்த சமயத்துல திடீர்னு ஒரு Adventure படம்… 2010-ல பேராண்மை படம் நடிச்சு Best Actor Award வாங்கினார். அதுக்கு அடுத்தகட்டமா திருநங்கையா நடிச்சு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தின படம் தான் ஆதி பகவன்.

சமூகத்தின் பொறுப்பை உணர்த்தும் திரைப்படமாக நிமிர்ந்து நில் படத்துல நடிச்சிருப்பார், மீண்டும் ஊரு எதார்த்தமான காதை காதல் கதையாக ரோமியோ ஜூலியட் படத்துல நடிச்சு Most Romantic Star of South Indian Cinema Award வாங்கினார். அவருடைய அண்ணன் Mohan Raja இயக்கத்துல தனி ஒருவன் படம் நடிச்சு Best Actor மற்றும் Best Performance In Leading Role என்ற விருதும் வாங்கினார்.

Romantic, Action-லாம் நடிச்சு முடிச்சாச்சு, அடுத்து Sports தான் அப்படினு பூலோகம் படத்துல நடிச்சு அதுலயும் தன்னுடைய திறமைய வெளிக்காட்டி Best Actor Award வாங்கினார். 2018-ல் சற்றே வித்தியாசமான கதைக்களமாக Space கதைக்களத்துல உருவான ‘டிக் டிக் டிக்’ படத்துல தன்னுடைய மகன் கூட நடிச்சு அசத்திருப்பாரு.

பிறகு அடங்க மறு என்கிற Action Thriller படம் மூலமா சமூக கருத்தை சொல்லி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். 2021-ல் இவருடைய 25வது படம் பூமி வெளிவந்துச்சு, அதுக்கு முன்னாடி 2019-ல வெளிவந்த Comali திரைப்படம் மூலமா 90’s Kids-அ திரும்பி பாக்க வெச்சதோட அவங்க மனசுல தனி இடத்தையும் பிடிச்சிருக்காரு.

Last But Not Least… மணிரத்னம் இயக்கத்துல பொன்னியின் செல்வன் படம் நடிச்சுருக்காரு. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்ப ஏற்படுத்தியிருக்கு. அந்த படம் மட்டுமில்லாம, அடுத்தடுத்து அவர் நடிக்கப் போற எல்லா படமும் வெற்றி வாகை சூடனும்னு சொல்லி நம்ம Romantic & All Rounder Hero ஜெயம் ரவிக்கு சூரியன் FM சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

RJ SUBA, Vellore.

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.