Cinema News Specials Stories

Aging Like Wine ‘ஜோதிகா’

என்னதான் கத்தி-ஜா காலம் வந்தாலும் இன்னைக்கும் 90 ‘ஸ் கிட்ஸ் கத்தி-“ஜோ”னு சொல்லும்போது கேக்கறதுக்கு சந்தோஷமாதான் இருக்கும்.

“சோனா”வா வாலி படத்துல தமிழ்ல அறிமுகம் ஆனவங்க, அடுத்ததா ஒரு Solo Song தான் பண்ணிருப்பாங்க. அட யாருப்பா இந்த பொண்ணு? இவ்ளோ உற்சாகத்தோட இவ்ளோ அழகா பாடல் வரிகள்-ல வர ஒவ்வொரு எழுத்துக்கும் Expression-அ அள்ளி கொடுக்குறதுன்னு தமிழ் ரசிகர்களையும், தமிழ் பட இயக்குனர்களையும் திரும்பி பார்க்க வச்சாங்க. அது தான் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துல வர ‘பூவ பூவ பூவ பூவ பூவே’ பாடல்.

மத்தத வரலாறு சொல்லும் என்பது போல அடுத்தடுத்து அவங்க செலக்ட் பண்ண திரைக்கதைகள், கதாபாத்திரங்கள் மூலமா மக்களோட மனசுல ஆணித்தரமா பதிஞ்சுட்டாங்க. பல இளைஞர்களோட மனசுல கனவுக் கன்னியா பல வருடங்கள் இருந்தாலும் எத்தனையோ திரைப்படங்கள் பண்ணாலும் ஜோ ஓட மனசுல நின்னது முதல் படத்தோட கதாநாயகன். அட நம்ம சூர்யா தான்பா.

Suriya_Jyothika

திருமணம் ஆகி வருடங்கள் ஓடினாலும் அவங்களுக்குள்ள இருக்க காதலும் மாறல… அவங்களோட காதலை காதலிக்கறவங்களும் இன்னும் மாறல-னு சொல்லலாம். இன்னைக்கு இருக்கக் கூடிய பல தம்பதிகளுக்கு Couple Goals செட் பண்ணிட்ருக்காங்கன்றதுல எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்ல. சூர்யா அவர்கள் ஜோதிகா அவங்களுடைய வாழ்க்கைல வந்ததுக்கு பிறகு அவங்களுடைய வாழ்க்கை பயணம் எப்படி இருக்குனு ஒரு சில மேடைகளில் அவங்களே சொல்றதுலயும் அது நமக்கு தெரிஞ்சிருக்கும்.

இப்போ அப்டியே திரும்பவும் ஜோதிகாவுடைய திரை பயணம் பக்கம் வந்தோம்னா தொட்டதெல்லாம் “தூள்”ன்ற மாதிரி நிறைய திரைப்படங்கள் பண்ணினாலும் ஒரே மாதிரி கதாபாத்திரங்கள் செலக்ட் பண்றங்களோனு நமக்கு யோசனை வரற்துக்குள்ள வித்தியாசமான கதாபாத்திரங்களை பண்ண ஆரமிச்சுட்டாங்க. அதுல சந்திரமுகியும், மொழியும் ஜோதிகாவுடைய திரைப்பயணத்துல தவிர்க்கவே முடியாது.

2007 இல் திருமணம் செய்றதா முடிவு பண்ணதும் வந்த விமர்சனங்கள்… அவ்ளோதான்ப்பா… இனி ஜோதிகாவ நம்மளால சினிமால பாக்க முடியாதுன்னு சொன்னவங்களுடைய எண்ணத்தையும் சரி, திருமணம் ஆன பிறகு வந்தாலும் கதாநாயகியா நடிக்க முடியாது, ஏதாவது குணச்சித்திர கதாபாத்திரங்கள் தான் நடிக்க முடியும்ன்ற இத்தனை வருட தமிழ் சினிமா வரலாற்றையும் சரி, 8 வருட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா வந்தவுடனே மாத்திட்டாங்கன்னு சொல்லலாம் .

பெண்கள் பொதுவாகவே தன்னுடைய வயதை வெளிய சொல்றதுக்கு ரொம்பவே யோசிக்கும் பட்சத்தில் தன்னுடைய வயதையே Re Entry கொடுத்த திரைப்படத்தின் தலைப்பா வச்சாங்க ஜோதிகா (36 வயதினிலே ). Heroine Centric திரைப்படங்கள் திருமணம் ஆன பிறகும் பண்ண முடியும்னு சினிமாவில் இருக்க கூடிய பெண்களுக்கு மட்டுமில்ல தன்னோட படங்கள் வாயிலாக சாதாரண பல பெண்களுக்கும் நம்பிக்கை கொடுத்துட்டு இருக்காங்க.

வயதே ஆக கூடாதுனு பல பெண்கள் யோசிக்கும் நேரத்தில் Aging Like Wine-னு சொல்ற மாதிரி ஜோதிகாவ பாக்கும்போது ஒவ்வொரு வருசம் போக போக ரசிக்கும் விதமா வயசு ஏறனும்னு யோசிக்க தோணும். இப்படி எவ்வளவு ஆண்டுகள் போனாலும் என்றும் எங்கள் நெஞ்சில் Evergreen கதாநாயகியாய் இருக்கும் ஜோதிகா சாதனா அவர்கள் தேசிய விருதுகள் போல இன்னும் பற்பல விருதுகள் திரை பயணத்தில் பெற்று வாழ்க்கை பயணத்தில் இன்னும் பல மகிழ்ச்சிகளை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஜோதிகா அவர்களுடைய பிறந்த நாள் அன்று மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கறது சூரியன் FM.

Article By RJ VEDHA