Specials Stories

2021-ஆம் ஆண்டின் மக்கள் கொண்டாடிய சிறந்த 10 பாடல்கள் !!!

2021-ஆம் ஆண்டில் எண்ணற்ற பாடலைகள் வெளிவந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த வருடத்தில் வெளியான பாடல்களுள் சிறந்த 10 பாடல்களை பற்றிய சிறப்பு தொகுப்பு தான் இது.

அண்ணாத்தே அண்ணாத்தே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தின் டைட்டில் பாடலான “அண்ணாத்தே அண்ணாத்தே” பாடல்,  ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி விருந்தாய் அமைந்தது. இந்த பாடலை பத்மஸ்ரீ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியுள்ளார். தனது வாழ்நாளில் அவர் பாடிய கடைசி பாடல் இந்த அண்ணாத்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடலுக்கு பிரபல பாடலாசிரியர் விவேகா வரிகளை தீட்டியுள்ளார். “காந்தம் கணக்கா கண்ண பாரு கண்ண பாரு” என தொடங்கும் இப்பாடல் ரஜினியின் Mass-ஐ மேலும் ஒரு படி ஏற்றிவைத்த பாடலாக அமைந்தது. “அண்ணாத்த பேசினா ஸ்டைலு, அண்ணாத்த பாடினா ஸ்டைலு” என்ற வரிகள் திரையில் தோன்றி அதற்கு சூப்பர் ஸ்டார் ஆடும்போது ஒட்டுமொத்த ரசிகர்களும் திரையரங்குகளில் துள்ளாட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.

டும் டும்

பொதுவாக கல்யாண vibe-ல் உள்ள பாடல்கள், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுவது மட்டுமின்றி திருமண விழாக்களில் ஒலிப்பதும் வழக்கம். அந்த வகையில் ENEMY திரைப்படத்தில் தமன் இசையில் அமைந்த டும் டும் பாடல் இந்த வருடத்தில் திருமண விழாக்களில் அதிகம் ஒலித்த பாடலாக திகழ்கிறது.

இப்பாடலுக்கு இன்ஸ்டாகிராம் Reel-களில் பயங்கர வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. பாடலாசிரியர் விவேக்கின் அழகான வரிகள், இப்பாடலுக்கு அதிக பலம் சேர்க்கிறது. இப்பாடலின் இசை, வரிகள் மட்டுமின்றி இப்பாடலின் வீடியோவில் மிர்னாலினி ரவியின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நாங்க வேற மாரி

வருடக்கணக்கில் வலிமை Update-க்காக ஏங்கியிருந்த அஜித் ரசிகர்களுக்கு. இனிவரும் “எல்லா நாளுமே நல்ல நாளு தான்” என Positivity-ஐ கொடுக்கும் விதத்தில் அமைந்தது நாங்க வேற மாரி பாடல். யுவன் சங்கர் ராஜாவும் அஜித்தும் இணைந்தாலே அப்படத்தின் பாடல்கள் இமாலய வெற்றியை பெறும் என்பது அனைவரும் அறிந்ததே.

அந்தவகையில் யுவனின் இசையில் வெளியான நாங்க வேற மாரி பாடல் யூடியூபில் பல Record-களை தகர்த்து சாதனை புரிந்துள்ளது. பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்பாடலுக்கு ஒரு அஜித் ரசிகனாகவே உருமாறி வரிகளை எழுதியுள்ளார்.

மெஹரசைலா

யுவன் இசையமைக்கும் பாடல்களை தாண்டி, யுவன் பாடும் பாடல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் சிம்புவின் Mass-ஆன comeback படமாக வெளியான மாநாடு திரைப்படத்தில் யுவன் இசையமைத்து பாடியுள்ள மெஹரசைலா பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

இந்தப் பாடலுக்கு ரசிகர்களால் “லிரிக் இஞ்சினியர்” என்று அன்போடு அழைக்கப்படும் மதன் கார்க்கி வரிகளை எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து அவரது சகோதரியான பவதாரணியும்  இப்பாடலை பாடியுள்ளார். மாநாடு திரைப்படத்தின் கதை நகர்வுக்கு ஏற்ப இப்பாடல் அமைந்து படத்தின் திரைக்கதைக்கு வலு சேர்த்தது.

வா சுல்தான் வா சுல்தான்

ஹீரோவின் Intro பாடல்களுக்கு என தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு. இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியான சுல்தான் திரைப்படத்தின் டைட்டில் பாடலான “ஜெய் சுல்தான்” பாடல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குத்தாட்டம் போட வைத்த சூப்பர் ஹிட் intro பாடலாக அமைந்தது.

இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையில், அனிருத்தின் அதிரடி குரலில், விவேகாவின் வெளுத்து வாங்கும் வரிகளில் அமைந்த இப்பாடல் பல இளைஞர்களின் காலர் டியூனாக அமைந்தது. இப்பாடலின் வீடியோ யூடியூபில் 75 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

பேர் வச்சாலும் வைக்காம போனாலும்

மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் அமைந்த பேர் வச்சாலும் வைக்காம போனாலும் பாடலின் ரீமிக்ஸ் version, சந்தானம் நடித்து வெளிவந்த டிக்கிலோனா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே சூப்பர் ஹிட்டான இப்பாடலை 2K  கிட்ஸ் மத்தியிலும் மெகாஹிட் ஆக்கிய பெருமை இளையராஜாவின் புதல்வனான யுவன் சங்கர் ராஜாவுக்கே சேரும்.

பொதுவாக யுவன் கொடுக்கும் ரீமிக்ஸ் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இந்த “பேர் வச்சாலும் வைக்காம போனாலும்” பாடலும் இவனின் ரீமிக்ஸ் drugs list-ல் ஒரு முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. வாலியின் வாலிப வரிகள் இந்த காலத்து இசை ரசிகர்களுக்கும் ஏற்றபடி அமைந்துள்ளதே, இப்பாடல் இன்றும் கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம்.

மாங்கல்யம்

சிம்பு-தமன் கூட்டணியின் வெற்றி பாடல்கள் வரிசையில் இந்த வருடம் ஈஸ்வரன் திரைப்படத்தில் அமைந்த மாங்கல்யம் பாடலும் மற்றொரு மெகா ஹிட்டாக அமைந்தது. தமனின் துள்ளலான இசைக்கு சிம்புவின் துடிப்பான நடனம் இப்பாடலை உலகளவில் பிரபலமாக்கியது.

தமனின் peppy beat-க்கு ஏற்ப யுகபாரதியின் இளமையான வரிகள் இப்பாடலுக்கு பக்கபலமாக அமைந்தது. கதையின் நாயகனான ‘ஆத்மன்’ சிலம்பரசனே இப்பாடலை ரோஷினியுடன் இணைந்து பாடியுள்ளார். இப்பாடல் 185 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது. சிம்புவின் பாடல்களில் 100 மில்லியன் பார்வைகளை கடந்த முதல் பாடல் “மாங்கல்யம்” என்பது குறிப்பிடத்தக்கது.

தல கோதும் இளங்காத்து

பிரதீப் குமாரின் காந்தக் குரலின்றி 2K கிட்ஸ்-களின் Playlist நிறைவு பெறாது. ஜெய்பீம் திரைப்படத்தில் ஷான் ரோல்டன் இசையில் பிரதீப்குமார் பாடி வெளிவந்த “தல கோதும் இளங்காத்து” பாடல், இந்த வருடத்தின் ஒரு சிறந்த நம்பிக்கையூட்டும் பாடலாக அமைந்தது.

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜூமுருகன் அவர்களே இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார். ஏற்கனவே “தீரன்” படத்தின் ‘லாலி லாலி’, “வெள்ளையானை” திரைப்படத்தின் ஆற  தேடும், நெல்லு வாசம் ஆகிய பாடல்களை இவர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. வாழ்வில் ஊக்கம் தேடி அலைபவர்களுக்கு ஒரு தாக்கம் ஏற்படுத்திய பாடலாக  தல கோதும் இளங்காத்து பாடல் அமைந்துள்ளது.

எதோ சொல்ல

தரன் குமார் இசையில் சித் ஸ்ரீராம்-ன் காதல் பொங்கும் குரலில் அமைந்த “ஏதோ சொல்ல” பாடல் காதல் செய்யாதவர்களுக்கு கூட காதலை வரவழைக்கும் ஒரு காதல் கீதமாய் அமைந்துள்ளது. “முருங்கக்காய் சிப்ஸ்” திரைப்படத்தில் அமைந்துள்ள இப்பாடலின் visuals-ம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன் அவர்களே இப்பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். இந்த வருடம் வெளியான மெலடிகளில் ஒரு சிறந்த மெலடியாக இப்பாடல் வலம் வருகிறது.

கண்டா வர சொல்லுங்க

கர்ணன் திரைப்படத்தில் “கர்ணன் அழைப்பு” பாடலாக வெளிவந்த “கண்டா வர சொல்லுங்க” பாடல் அப்படத்தின் கதையோட்டத்திற்கு உயிரோட்டம் கொடுத்த பாடலாக திகழ்ந்தது. 2021-ஆம் ஆண்டில் ஒரு சிறந்த எழுச்சி பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் அவர்களின் “கண்டா வர சொல்லுங்க” பாடலிலிருந்து தழுவப்பட்டு சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்த இப்பாடலுக்கு கர்ணனின் இயக்குனரான மாரி செல்வராஜ் அவர்களே எழுச்சிமிகு வரிகளை எழுதியுள்ளார். இப்பாடல் திரையில் தோன்றும்போது, படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மெய்யான மெய்சிலிர்ப்பை உருவாக்கியது.