Specials Stories

இந்த வருடத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய சினிமா Update-கள் !!!

தமிழ் சினிமா ரசிகர்களை குதூகலப்படுத்தும் சினிமா Update-கள் 2021 ஆம் ஆண்டில் நிறைய வந்தது. அவற்றுள் ரசிகர்களை உற்சாகப்படுத்திய பத்து Update-களை பற்றிய பதிவுதான் இது.

கோப்ரா டீஸர்

பொதுவாக சியான் விக்ரம் நடிக்கும் படங்களுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும். அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்த வந்த அப்டேட் தான் கோப்ரா டீஸர் அப்டேட்.

விருவிருப்பான கோப்ரா டீஸர், இப்படத்தை திரையில் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மனதில் ஆழமாகப் விதைத்து வைத்துள்ளது என்று கூறலாம். இந்த teaser-ல் விக்ரம் போட்டிருக்கும் வேடங்கள் அனைத்தும் ஐ படத்தில் வரும் “அதுக்கும் மேல” என்ற வசனத்தை போல, நம் எதிர்பார்ப்புக்கும் மேலே இப்படத்தில் ஏதோ இருக்கிறது என்ற உணர்வை கொடுக்கிறது. இப்படம் விரைவில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை மோஷன் போஸ்டர்

அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தை குறித்து எந்த ஒரு update-ம் வராமல், Update-க்காக ஏங்கி சமூக வலைதளங்களில் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாய் அமைந்தது தான் வலிமை மோஷன் போஸ்டர் அப்டேட். இந்த மோஷன் போஸ்டர் வெளியாகி யூடியூபில் பல ரெக்கார்டுகளை உடைத்து எறிந்தது.

ஸ்டைலான அஜித்தை மேலும் mass-ஆக இந்த மோஷன் போஸ்டரில் காட்ட உதவியது யுவன் சங்கர் ராஜாவின் வெறித்தனமான Background மியூசிக் தான். இந்த அப்டேட் வெளியான பிறகு வலிமை திரைப்படத்தை குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரிசையாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் First Glance வீடியோ

உலக நாயகனின் பிறந்த நாளையொட்டி விக்ரம் படக்குழுவினரால் கொடுக்கப்பட்ட அப்டேட் தான் விக்ரம் The First Glance வீடியோ அப்டேட். விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த First Glance வீடியோவில் ஹாலிவுட் திரைப்படத்தின் சண்டைக்காட்சியை பார்த்தது போன்ற ஒரு உணர்வு நமக்கு ஏற்படுகிறது. மேலும் இந்த வீடியோவில் அனிருத்தின், BGM மேலும் விறுவிறுப்பை சேர்க்கிறது. இந்த அப்டேட்டை லோகேஷ் கனகராஜ் வெளியிடும்போது, உலக நாயகனுக்கு தமது பிறந்த நாள் பரிசு என குறிப்பிட்டு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பீஸ்ட் First Look

தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளன்று பீஸ்ட் திரைப்படத்தை குறித்த ஏதாவது ஒரு அப்டேட் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக பூர்த்தி செய்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அதுவரை தளபதி 65 என்று அழைக்கப்பட்ட இப்படத்தின் டைட்டில் பீஸ்ட் என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் சன் பிக்சர்ஸ் அறிவித்தனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வந்த நிலையில், அதே நாளில் Second லுக் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இந்த இரண்டு போஸ்டர்களுமே சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது குறிப்பிடத்தக்கது.

வேற லெவல் சகோ பாடல் அப்டேட்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் திரைப்படத்தின் முதல் Single பாடலான வேற லெவல் சகோ பாடல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. சிவகார்த்திகேயனும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணையும் முதல் படம் என்பதால், இப்படத்தின் பாடல்கள் மீது ரசிகர்களுக்கு வேற லெவல் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

பாடலாசிரியர் விவேக் அவர்களின் வரிகளில் ஏ.ஆர்.ரகுமானின்  இசையிலும், குரலிலும் வெளிவந்த  இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் Reach ஆனது. இப்பாடலின் லிரிக் விடியோ யூடியூபில் 7 மில்லியன் பார்வைகளுக்கும் மேல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் வெளியான பிறகு தான் அயலான் படத்தை திரையில் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி இருக்கிறது. ஏலியன் Concept-ஐ வைத்து உருவாகியுள்ள படம் என்பதால், இப்படம் புதுமையான சிவகார்த்திகேயனை திரையில் காட்டும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

வெந்து தணிந்தது காடு டீஸர்

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு தனது Favorite இயக்குனரான கௌதம் வாசுதேவ மேனனுடன் கைகோர்த்து சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் teaser கடந்த டிசம்பர் 10ஆம் தேதி யூடியூப்பில் வெளியானது.

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படத்தில் சிம்பு வலம் வருகிறார். சிம்புவின் எதார்த்தமான நடிப்பு இப்படத்தை அனைவரையும் ரசிக்க வைக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்பது teaser-ஐ  பார்க்கும் போதே தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்த டீஸரில் ஏ.ஆர்.ரகுமானின் இசையும், குரலும் பார்ப்பவர்களை மெய்மறக்க வைக்கிறது.

எதற்கும் துணிந்தவன் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ

சூர்யா, சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் விவாதித்து வந்த நிலையில், அன்பான Fans-க்கு அழகான அப்டேட்டாக அமைந்தது எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ அப்டேட்.

இந்த வீடியோவில் சூர்யாவின் அதிரடியான தோற்றம் ரசிகர்களை கொண்டாட வைத்தது என்றே கூறலாம். எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயிரத்தில் ஒருவன் 2 அப்டேட்

நீண்ட வருடங்களாக செல்வராகவனிடம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்த கேள்விக்கு விடையாய் அமைந்தது ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்தை குறித்த அவரது tweet. தனது தம்பியும், நடிப்பு அசுரனுமான தனுஷ் தான் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்பதை செல்வராகவன் புத்தாண்டு விருந்தாக இந்த வருடம் ஜனவரி 1ஆம் தேதி அறிவித்தார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில், இப்படம் 2024 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். “இதுவரை கேட்டிருந்த காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்” என்ற caption உடன் இந்த அறிவிப்பை செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.

பீஸ்ட் ஷூட்டிங் ஸ்டில்

பீஸ்ட் திரைப்படத்தின் நூறாவது நாள் shooting அன்று, படக்குழுவினருடன் புகைப்படத்தை வெளியிட்டு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த புகைப்படத்தில் தளபதி விஜய், நெல்சன்,  பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி கணேஷ், Bjorn Surrao ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

“இது ஷூட்டிங்கின் நூறாவது நாள், இந்த 100 நாளுமே இந்த அற்புதமான மனிதர்களுடன் சுவாரஸ்யமாய் இருந்தது” என இந்த புகைப்படத்திற்கு நெல்சன் caption கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் வெளியான சில நாட்களிலேயே பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் தளபதி விஜய்யின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது என்ற அப்டேட்டும் வெளிவந்தது.

Vijay's Beast director Nelson Dilipkumar shares new still to celebrate  100th day of shoot | Tamil Movie News - Times of India

வலிமை மேக்கிங் வீடியோ

அஜித் ரசிகர்களுக்கு அஜித் மீது ஏன் இவ்வளவு மோகம் என்பதை வெளிக்காட்டிய ஒரு வீடியோவாக வலிமை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ அமைந்தது. படம் தொடங்கிய நாள் முதல், எவ்வளவு தடைகளைத் தாண்டி படக்குழுவினர் வலிமை திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளனர் என்பதை இந்த மேக்கிங் வீடியோ ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது.

இந்த வீடியோவில் அஜித் செய்யும் பைக் stunt-கள், ரசிகர்களுக்காக அவர் போடும் கடின உழைப்பை சுட்டிக்காட்டுகிறது. எத்தனை தடைகள் வந்தாலும் வலிமையுடன் அதை எதிர்கொண்டால் சாதிக்கலாம் என்ற Motivation-ஐ அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் கொடுத்தது இந்த மேக்கிங் வீடியோ update.

About the author

alex lew