Specials Stories Suryan Explains Videos

TV பார்த்துகிட்டே சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா?

டிவி பார்த்துட்டே சாப்பிடுற ஆளா நீங்க… தயவுசெஞ்சு இத மட்டும் பண்ணாதிங்க… ஏன்னு இப்ப நான் உங்களுக்கு சொல்றேன்…

நோயில்லாம வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது… நமக்கு வரக்கூடிய நோய்க்கு காரணமா இருக்கக்கூடியதே நமது உணவுமுறையும், வாழ்க்கைமுறையும்தான். அதே போல நம் எடை அதிகரிப்பு, ஆரோக்கியம் பாதிப்புக்கான முக்கிய காரணம் நம்முடைய அலட்சியம். நாம தினமும் செய்யக்கூடிய சில செயல்கள்தான் நம் ஆரோக்கியத்த பாதிக்குது. அதுல முக்கியமான ஒன்னு சாப்பிடும்போது டிவி பார்த்துட்டு சாப்பிடுறது. கம்ப்யூட்டர், மொபைல், டிவி பார்க்காம நிறைய பேர் சாப்பிடுறது கிடையாது.

லேப்டாப் நோண்டிட்டே சாப்பிடுறவங்களும் இருக்காங்க. அப்படி சாப்பிடும்போது கண் பார்வை முழுக்க ஸ்க்ரீன்ல தான் இருக்கும். உணவின் சுவை, வாசனை எதுவும் தெரியாம இயந்திரத்தனமா சாப்பிடும்போது, சாப்பிடும் அளவு தெரியாது. அந்த சமயத்துலயும் வயிறு நிறையும் போது மூளை நமக்கு Signal கொடுக்கும். ஆனா நம்ம கவனம் முழுக்க அப்பவும் ஸ்க்ரீன்ல தான் இருக்கும். இதோட விளைவு சரியான அளவு சாப்பாடு சாப்பிடாம நமக்கே தெரியாம அதிகமாவோ கம்மியாவோ சாப்ட்டு விட்ருவோம்.

டிவி பார்த்துட்டே அதிகமா சாப்பிடுறவங்க என்ன பண்றாங்கனா அடுத்தடுத்த வேளை உணவுகளையும் அதிகமா எடுத்துக்குறாங்க அப்டினு ஆய்வுகள் சொல்லுது. அதனால சாப்பிடும்போது சாப்பாட்டுல மட்டும் தான் கவனம் இருக்கனும். அதுமட்டுமில்ல சாப்பாட்ட நல்லா மென்னு சாப்பிடாம நிறைய பேர் வேகமா சாப்ட்ருவாங்க. அப்படி சாப்பிடுறது வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும், எடையும் கூடும்.

இந்த மாதிரி நேரத்துல நீங்க எவ்வளவு சாப்பிட்டிருக்கிங்கனு மூளை பதிவு செய்யாது… சாப்பிட்ட திருப்தியும் இருக்காது. அதனால அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ள மறுபடி பசிக்கத் தொடங்கிடும். இந்த சமயத்துல தான் சிப்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம்னு Snacks பக்கம் ஒதுங்கிடுவிங்க. இது மேலும் உடல் எடை அதிகரிப்பதற்கும், உடல்நலம் பாதிக்குறதுக்குமே வழிவகுக்கும்.

சரி அப்ப எப்படிதான் சாப்பிடுறதுனு கேக்குறிங்களா?

எந்த வகை உணவா இருந்தாலும் அதன் சுவை மற்றும் நறுமணத்தை உணர்ந்து நல்லா மென்னு சாப்பிட்டு பழகனும். அடுத்ததா அந்த உணவ எந்தெந்த பொருட்கள கொண்டு செஞ்சிருக்காங்கனு தெரிஞ்சுட்டு நல்ல ஆரோக்கியமான உணவுகள மட்டும் எடுத்துக்கனும்.

அடுத்தது, நீங்க வயிற்றுக்கு போதுமான அளவு சாப்ட்டு முடிச்சுட்டிங்க அப்டிங்குற Signal மூளைக்கு போக சுமார் 20 நிமிடங்கள் ஆகும்னு உணவியல் நிபுணர்கள் சொல்றாங்க. அதுக்கு ஏத்த மாதிரி சாப்பாட்ட நல்லா மென்னு பொறுமையா சாப்பிடும்போது Signal மூளைக்கு போறதுக்கு போதுமான அவகாசம் கிடைக்கும். இதனால நாம அதிகமாக சாப்பிட மாட்டோம். என்ன சாப்பிடுறிங்க அப்படிங்குறத விட எப்படி சாப்பிடுறிங்கங்குறது தான் முக்கியமான விஷயம்.

இன்றைய சூழல்ல லேப்டாப், கம்ப்யூட்டர், டி.வி, மொபைல் இது எல்லாமே நம்ம வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்துவிட்ட ஒரு விஷயமாகிடுச்சு. ஏன்னா வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரப்போ நமக்கு பொழுதுபோக்கா இருக்கக் கூடியது இது எல்லாம் தான்.

இது எல்லாத்தையும் மொத்தமா நம்மளால ஒதுக்க முடியாது. அதனால முடிஞ்ச அளவு, குறிப்பா சாப்பிடுறப்ப நம்மகிட்ட இருந்த இது எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிடுவோம். ஏன்னா இந்த கொஞ்ச நேரத்துல நம்ம உடலுக்கு கிடைக்கப் போற பலன் அப்படிங்குறது ரொம்ப பெருசு.