Cinema News Specials Stories

4 Years of மான்ஸ்டர்!

Monster-ன்ற பெயரை கேட்ட உடனே இந்த படத்துல வில்லனோ அல்லது ஹீரோவோ கொடூரமானவரு, அசுரன் Range-க்கு பயங்கரமானவரா இருப்பாங்கனு நினைச்சா அது தான் தப்பு.

ஏனா இங்க வில்லனும் சரி ஹீரோ வும் சரி ரொம்ப Sweet & Cute. இரண்டாவது படத்துலயே இவ்வளவு நேர்த்தியான கதைக்களமான்னு எல்லாரையும் வியக்க வச்சாரு டைரக்டர் நெல்சன் வெங்கடேசன். அஞ்சனம் அழகிய பிள்ளைங்கற ஒரு Government Employee கல்யாண வயச தாண்டியும் கல்யாணம் ஆகாம கல்யாணத்துக்கு பொண்ணு தேடிட்டு இருப்பாரு.

அப்படிப்பட்ட நாயகன் கதாபாத்திரத்துல ரொம்ப நேர்த்தியா எஸ்.ஜே.சூர்யா வாழ்ந்திருப்பாரு. அந்த அமைதியான ஜீவ காருண்யத்தின் மேல தீராத நம்பிக்கை உடைய இளைஞனோட மிகப்பெரிய எதிரி எது தெரியுமா? ஒரு எலி. அதுதான் Monster. அத சுத்தி தான் மொத்த கதையுமே.

Middle Class கதாநாயகன் ஆசைப்பட்டு ஒரு Sofa வாங்கும்போது அத எலி கடிச்சுடுச்சுனா வரக்கூடிய கோவம்… அதுக்கப்புறம் எடுக்கப்படக்கூடிய முடிவுன்னு ரொம்ப அழகா இருக்கும் படத்தொகுப்பு . ஆயிரம் ஐடியாக்களை Use பண்ணியும் பிடிக்க முடியாத அந்த எலி, கடைசில அதுவாவே கூண்டுல வந்து அடைபட்டு பாவமா பாக்குறதும், அதுக்கு எஸ்.ஜே.சூர்யா குடிக்க தண்ணி வைக்கிறதும் அழகியலின் உச்சம்.

ஓகே எலி Chapter முடிஞ்சுதுனு நினைக்கும்போது, அந்த எலி நிறைய குட்டி போட்டுருக்க விஷயம் தெரிய வரதும், அந்த குட்டிகள எஸ்.ஜே.சூர்யா கொண்டு போய் தாய் எலி கிட்ட சேர்க்குறதும்ன்னு ஒரு சாதாரண மனிதனோட மனச அப்படியே பிரதிபலிச்சுருப்பாரு . குழந்தைகள கவரனும், Family ஓட Enjoy பண்ணணும்ன்றதுக்காக இந்த படத்த கோடை விடுமுறைல ரிலீஸ் பண்ணிருந்தாங்க.

இந்த படம் வந்து இதோட 4 வருஷம் ஆச்சு. இன்னைக்கு பார்த்தாலும் பல இடங்கள்ல மனசு விட்டு சிரிக்க வைக்கும் இந்த Monster.

Article By RJ Dharshini