Cinema News Specials Stories

அர்த்தம் இல்லாத வார்த்தைகளின் அர்த்தம் ஹாரிஸ் ஜெயராஜ்!

நாம எங்கயாது பயணம் பண்ணும் போது யதேச்சையா ஒரு புது பாடலை கேட்குறோம் , அந்த பாடலும் ரொம்ப நல்லா இருக்கு, அதோட இசையும் நம்மல போட்டு தாக்குது ஆனா எந்த படம்னு தெரியல, யாரு இசையமைப்பாளர்னு தெரியல, அப்படி இருக்கப்போ உடனே Netல போய் பாப்போம்.

அதே போல யதேச்சையா ஒரு புது பாடல் கேக்குறீங்க, ஆனா இந்த முறை அந்த இசைய வச்சே,உங்களால அந்த பாட்ட கண்டு பிடிக்க முடியுதுனா கண்டிப்பா அது ஹாரிஸ் ஜெயராஜ் பாடலா தான் இருக்கும். அவரோட Sound Mixing-லயே தெரியும் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் எதுனு… இத நானா சொல்லலங்க, வாலி ஐயாவே ஒரு பேட்டில சொல்லியிருக்காரு.

Shankar Ganesh முதல் Yuvan Shankar Raja வரை நமக்கு தெரிஞ்ச, இன்னும் தெரியாத ஒவ்வொரு Music Directors கிட்டயும், தமிழ், தெலுங்கு, கன்னடம், Marathi-னு இப்படி ஒவ்வொரு மொழிகள்லையும் Guitarist ah, Keyboard Player-ரா பல படங்கள்ல Work பண்ணிருக்காரு ஹாரிஸ் ஜெயராஜ்.

தமிழ் சினிமால இசைஞானியோடு இசை மழைல நனைஞ்சிட்டு இருந்த நம்மல, புத்தம் புது Tune-களால புயலா வந்து தாக்கினவர் இசை புயல். இப்படி மழையும் புயலுமா இருந்த நம்ம தமிழ் சினிமால, “மின்னலே” படத்தின் மூலமா இசை மின்னலாய் வந்து நம்மல தாக்கினவர் தான் ஹாரிஸ் ஜெயராஜ்.

மின்னலே-ல வர ஒவ்வொரு பாடலும், ஹாரிஸ் இசைய ஒட்டுமொத்த இளைஞர்களையும் அசை போட வச்சது, குறிப்பா “வசீகரா பாடல்” 22 வருடங்கள தாண்டியும் நம்ம இதயத்துல இசைத் துடிப்பா இருக்கு…
மின்னலே Album-காக ஹாரிஸ் ஜெயராஜ்-க்கு Filmfare விருதும் கிடைச்சது.

2001ல மின்னலே-ல ஆரம்பமான கெளதம் வாசுதேவ் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் , வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால், விரைவில் வெளியாக இருக்க துருவ நட்சத்திரம் வரை தொடர்ந்து ஹிட் பாடல்கள இசை ரசிகர்களுக்காக கொடுத்துட்டு இருக்காங்க.

கெளதம் மேனன் போலவே ஹாரிஸ் ஜெயராஜ் அமைச்ச இன்னொரு கூட்டணி, ஹாரிஸ் + கே.வி.ஆனந்த்… அயன், கோ, மாற்றான், அனேகன், காப்பான்னு சூப்பர் ஹிட் பாடல்களை நம்ம கோலிவுட்க்கு கொடுத்து இருக்காங்க.

ஹாரிஸ் ஜெயராஜ் அதிகம் இசையமைத்த ஒரு நடிகர் “சூர்யா”, சூர்யாவோட சினிமா பயணத்துல மிக முக்கிய பங்கு ஹாரிஸ் இசைக்கு இருக்கு. குறிப்பா கஜினி, ஆதவன், வாரணம் ஆயிரம் பாடல்கள், பின்னணி இசை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தாண்டினாலும் மறையாது, மறக்காது.

ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள்ல அவரோட Sound Mixing, Singers ஓட உச்சரிப்பு , ஒரே பாடல்ல பல ட்ராக்ஸ்னு எல்லாமே High Quality-ல இருக்கும்.

ஹாரிஸ் ஜெயராஜோட பாடல்கள்ல தனித்துவமா இருக்குறது அர்த்தம் இல்லாத வார்த்தைகள். புரியாத வரிகளை எல்லாம் பாட்டுல போட்டு நம்ம எல்லாரையும் ரிப்பீட் மோட்ல பாட வச்சது தான் தனித்துவம்.

மொத படத்துல இருந்து சமீபத்துல வந்த லெஜண்ட் வரை ஒவ்வொரு படத்திற்கும், ஒவ்வொரு பாடலுக்கும், அந்த படத்தோட பின்னணி இசைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆறு மாசத்துல இருந்து ஒரு வருஷம் வரை டைம் எடுத்து தான் வேலை செய்றாரு.

ஏ.ஆர்.ரஹ்மான் கூட அதிகமான படங்கள் Work பண்ணதாலையோ என்னவோ ஹாரிஸ் பாடல்களில் ரஹ்மான் சாயல் சில இடங்கள்ல இருக்கும். இது போல பல விமர்சனங்கள் வந்தாலும் ஹாரிஸ் பாடல் ரிலீஸ் ஆனா அத இசை ரசிகர்கள் பிரம்மாண்டமா கொண்டாடிட்டு தான் இருக்காங்க.

ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கு நிகர், அவரோட பாடல்கள் மட்டும் தான். ஆனா சில ஆண்டுகளா ஹாரிஸின் இசைப் பயணத்துல அதிகமான படங்கள் அவருக்கு கிடைக்கல.

ஒரு ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகனா நாம எதிர் பாக்குறது இன்னும் நிறைய படங்கள் அவர் பண்ணணும். 80s,90s Kids நாம விரும்பி கேட்ட ஹாரிஸ் Melody Songs போல இப்ப இருக்க 2K kids-ம் அவர் பாடல்களை கேட்கனும்.

நம்ம Melody King, மீண்டும் இசை அரசனா கோலிவுட் சினிமால தடம் பதிக்க சூரியன் FM-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article By RJ SRINI

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.