Cinema News Specials Stories

“கதாநாயகனுக்குள் வாழும் கதையின் நாயகன் செல்வராகவன்”

நாம நெறைய Biopic படங்கள் பாத்திருப்போம். அந்த ஒரே படத்துலயே கதாநாயகன் எப்படி வளர்ந்தாரு, எங்க படிச்சாரு, என்ன சாதிச்சாருனு எல்லாமே அடங்கிரும், ஆனா நம்ம செல்லவராகவன் மட்டும் கொஞ்சம் வித்தியாசமா அவரோட வாழ்க்கை கதைய Biopic-ஆ இல்லாம ஒவ்வொரு படங்களா எடுத்திருக்காரு.

நாம செல்வராகவன் படங்கள்ல பாத்து ரசிச்ச துள்ளுவதோ இளமை மகேஷ், காதல் கொண்டேன் வினோத், 7G Rainbow Colony கதிர், மயக்கம் என்ன கார்த்திக் இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் செல்வராகவன் வாழ்ந்த, வாழனும்னு ஆசைப்பட்ட வாழ்க்கைய தான் திரைல நாம படமா பாத்திருக்கோம்.

ஒரு இயக்குனருக்கு முதல் படம் ரிலீஸ் முன்னாடி வர விமர்சனங்கள், ரிலீஸ் அப்பறம் விமர்சனங்கள் எல்லாமே முக்கியம், அப்படி செல்வராகவனுக்கு வந்த விமர்சனங்கள், என்ன டைரக்டர் இவரு? இதெல்லாம் யாரு போய் தியேட்டர்ல பாப்பா? ஹீரோவா யார நடிக்க வைக்கனும்னு கூட தெரியல! இப்படி பல விமர்சனங்கள் 2002-ல ரிலீஸ் முன்னாடியே துள்ளுவதோ இளமை படத்துக்கு வந்துச்சு.

ஏன்னா செல்வராகவன் படங்கள் பலரும் மறைமுகமா பேசுற விஷயங்கள இது தான் நிஜம்னு திரைல பேசும், அப்படி துள்ளுவதோ இளமை வந்தப்போ கூட்டம் கூட்டமா இளைஞர்கள் தியேட்டருக்கு போய் அந்த படத்த அமோக வெற்றி அடைய செய்றாங்க.

அந்த வெற்றில யுவன் பங்கு மிகவும் முக்கியம்னு சொல்லாம். அடுத்து காதல் கொண்டேன்… காலேஜ்னா ஜாலியா இருக்கும், லவ் பண்ணாலம், ஊரு சுத்தலாம் இப்படி பல படங்கள்ல பாத்திருப்போம். ஆனா படிக்கலானா திட்டு, அடி, காதல், எல்லாமே இருக்கும்னு நிஜத்த காட்டி அதுலயும் வெற்றி.

அடுத்து 7G ரெயின்போ காலணி கதிர், ஒரு காலணில இருக்க சாதாரண பையன் ஒரு அழகான பொண்ண பாத்தா என்ன பண்ணுவான்? அவளுக்காக என்னலாம் செய்ய தயாராவான்? அந்த காதலால எப்படி ஜெயிக்குறான்னு இயல்பா காட்டி இமாலய வெற்றி பெற்றாரு செல்வராகவன்.

அதே போல ஒரு சாதாரண பையன் எப்படி Gangster ஆகுறான், ஒரு கத்தி அவன எங்க கொண்டு போகுது, அவன் வாழ்க்கைய எப்படி மாத்தும்னு புதுப்பேட்டைல கொக்கி குமார காட்டியிருப்பாரு. வெளியான நேரத்துல சரியா போகலனாலும், சில வருடங்களுக்கு முன்னாடி ரீ ரிலீஸ்ல செம்ம வரவேற்பு, இப்ப வரை புதுப்பேட்டை-2 அப்டேட் கேட்டுட்டு இருக்காங்க ரசிகர்கள்.

KGF படத்துல வர History Repeats-ன்ற வசனம் போல புதுப்பேட்டைக்கு என்ன நடந்துச்சோ அதே தான் 2010-ல வந்த ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கும் நடந்துச்சு. கம்மியான பட்ஜெட்ல, கற்பனையும் நிஜமும் கலந்து மிக பிரம்மாண்டமா நம்ம சோழர்கள் வரலாற்ற பத்தி காலத்துக்கும் அழியாத படைப்ப கொடுத்தாரு செல்வராகவன். ஆனா இப்ப இந்த படத்தோட பார்ட்-2 க்கு காத்திருக்க பல கோடி ரசிகர்கள் 2010-ல அவரோட முயற்சிய பாராட்டாம ஏமாத்திட்டோம்.

ஜீவியோட இசை, செல்வராகவன் திரைக்கதை-இயக்கம், கார்த்தி, ரீமா சென், ஆண்டிரியா, பார்த்திபன் இப்படி எல்லாம் சரியா இருந்தும் ஆயிரத்தில் ஒருவன் தோல்விய சந்திச்சுது. ஆனா செல்வா தோல்விய கண்டு துவண்டு போற ஆள் இல்ல அடுத்து மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், NGK, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன்னு படங்கள் பண்ணிட்டு தான் இருக்காரு.

அதுக்கு காரணம் ஆரம்பத்துல இருந்தே செல்வராகவனுக்காகவே உருவான ஒரு ரசிகர் கூட்டம், இப்ப வரை அப்படியே ஜீனியஸ் ஜூனியஸ்னு செல்வாவ கொண்டாடிட்டு இருக்கு. இப்பலாம் செல்வராகவன் படம் ரிலீஸ் ஆனா ரசிகர்களே சிகப்பு, மஞ்சள், பச்சைனு படத்துல வர லைட்ட வச்சு Decode பண்ண ஆரம்பிச்சிடுவாங்க.

இன்னைக்கு பல இளம் இயக்குனர்களுக்கு செல்வராகவன் தான் Inspiration, ஏன்னா செல்வராகவன் படங்கள் சரியான நேரத்துல கொண்டாடப்படமா அவர் நஷ்டப்பட்டாலும், கஷ்டப்பட்டாலும், யாருக்காகவும் எதையும் மாத்தாம இஷ்டப்பட்டத பண்ணிட்டே இருப்பாரு, ஒரு நாள் அதுக்கான பலன் கிடைக்கும்னு.

செல்வராகவன் படங்கள்ல வர ஹீரோக்கள் போலவே திவ்யா, அனிதா, கிருஷ்ணவேணி, செல்வி, யாமினி, போன்ற ஹீரோயின் கதாபாத்திரங்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு. இப்படி தன்னோட படங்களால நம்மள ஈர்த்த இயக்குனர் செல்வராகவன், பாடலாசிரியரா கண் முன்னே எத்தனை நிலவு, ஆயிரத்தில் ஒருவன்ல பாதி பாடல்கள், நான் சொன்னதும் மழை வந்துச்சா, காதல் என் காதல், “பவர் பாண்டி”ல வர வானம் பறந்து, பொதச்சாலும், வீரா சூரா போன்ற பல பாடல்கள் எழுதியிருக்காரு.

“செல்வா நா முத்துக்குமார், தனுஷ் யுவன், செல்வா ஜீவி தனுஷ்” இப்படி எந்த கூட்டணி ஒன்னா சேர்ந்தாலும் ஆல்பம் ஹிட், இவங்க காம்போவ அடிச்சுக்க இப்ப வரை ஆள் இல்ல.

இயக்குனரா, பாடலாசிரியரா இருந்த செல்வராகவன் சாணிக் காகிதம், பீஸ்ட், பகாசூரன் போல சில படங்கள்ல நல்ல கதாபாத்திரங்கள்ல நடிச்சிட்டு இருக்காரு, செல்வராகவனுக்கு நடிப்பு, இயக்கத்துல கிடைச்ச ரசிகர்கள விட இப்ப அவரோட Tweets-க்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிடுச்சு.

90s கிட்ஸ் , Early 2K கிட்ஸோட ஜீனியஸ் செல்வராகவன் இன்னும் நிறைய நல்ல படங்கள் நம்ம தமிழ் சினிமாக்கு தந்து, இப்ப இருக்க ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து Phoenix பறவை போல எந்த நிலையையும் கடந்து ஜெய்ச்சிட்டே இருக்க சூரியன் FM-ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article By RJ SRINI