Cinema News Specials Stories

நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன்!

சிலரோட வெற்றி மட்டும் தான் எப்பவுமே எல்லாருக்கும் ஸ்பெஷலா இருக்கும். நம்மளே ஜெயிச்ச மாதிரியான ஒரு உணர்வை தரும். அந்த உணர்வு அந்த சந்தோசம் எப்பவுமே இவரு ஜெயிக்கும் தருணங்கள்ல நமக்கு ஏற்படும்.

Yes… சி.கா எனும் இரண்டெழுத்து வெற்றி மந்திரம் சொல்வது என்னவென்றால்… மனதில் ஆசை இருந்தால் அதற்காக உழை, அந்த ஆசையோடு சேர்ந்த உழைப்பு உன்னை ஒரு நாள் வெற்றிக்கான சிம்மாசனத்தில் அமர வைக்கும் என்பதுதான்.

திருச்சில கல்லூரி காலங்கள்ல சினிமா கனவை கண்களில் சுமந்து அதற்காக பயணிக்க ஆரம்பித்தவர். ஒரு தனியார் தொலைக்காட்சியில் Stand-up Comedian ஆக மக்கள் முன் அறிமுகமாகி மெல்ல மெல்ல தொலைக்காட்சி ரசிகர்களை தன் நகைச்சுவையால் தொல்லை செய்து அப்பொழுதே நம்ம வீட்ல ஒரு பையன் இருந்தா இப்படி தான காமெடி பண்ணுவான் என பல தமிழ் நெஞ்சங்களை எண்ண வைத்தவர்.

சலிக்காத முகம், அசராத காமெடி கவுண்டர்கள், யாரையும் முகம் சுளிக்க வைக்காத வார்த்தை பிரயோகம், இவையே இவரது பலம். 2012 ஆம் வருடம் மெரினா படத்துல செந்தில் நாதனா தன்னோட திரை பிரவேசத்தை தொடங்கின SK, 3 , மனம் கொத்தி பறவை , KD பில்லா கில்லாடி ரங்கா என வெள்ளித்திரை ரசிகர்கள் மனசுல மெது மெதுவா நுழைஞ்சு பல இடங்கள்ல எதிர்நீச்சல் போட்டு இன்னைக்கு ஒரு டானா உருவாயிருக்காரு.

மக்கள் எத ரசிக்கிறாங்களோ அத மட்டுமே குடுக்க தெரிஞ்ச ஒரு நடிகர். எந்த நடிகரை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிடிச்சுருக்கோ அவங்க தான் அடுத்த 30 வருடங்கள் திரை துறையை ஆளுவாங்கனு ஒரு STRATEGY சொல்லுது. அப்படி பார்த்தா சிவகார்த்திகேயனுக்காக இனி வரும் 30 வருட தமிழ் சினிமா எதிர்காலம் காத்துட்டு இருக்கு.

இளைஞர்கள், பெரியவர்கள், சிறியவர்கள்ன்னு எல்லாருக்குமே பிடிச்ச ஜனரஞ்சகமான கலைஞர் அப்படினா அது SK தான். நடிகரா மட்டும் இல்லாம பாடலாசிரியரா, பாடகரா முத்திரை பதிச்சுருக்காரு. எப்படி ரஜினி, கமல் பஞ்ச் Dialogue-க்கு ஒரு மாஸ் வரவேற்பு தியேட்டர்கள்ல இருந்துச்சோ அதே அளவுக்கு சிவா Dialogue-க்கும் இப்ப தியேட்டர்ல விசில் பறக்குது.

இவரோட எங்களுக்கு திண்டுக்கல் ரீட்டா டான்ஸ் வேணும் , ஒரு கோடி அப்பு , ஹான்ப்பா Dialogues எல்லாம் ஒரு ரகம்னா… அதே போல இந்த உலகம் ஜெயிச்சுருவேன்னு சொன்னா கேக்காது, ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேக்கும்-Dialogue-லாம் வேற லெவல்.

சினிமா கதாபாத்திரமா இருந்தாலும் சரி, மேடையா இருந்தாலும் சரி எந்த பந்தாவும் இல்லாம நம்ம வீட்டுல இருக்குற பிள்ளை மாதிரி பாக்கும் போதும் பேசும் போதும் எல்லார் மனசுலயும் பாந்தமா ஒட்டிக்குற சிவகார்த்திகேயன் என்னைக்குமே நம்ம வீட்டு பிள்ளைதான்.

Article By RJ Dharshini