Cinema News Specials Stories

எதிர்பாராத ஆஸ்கர்!

2023ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழால இந்தியாவுக்கு இப்போ 2 ஆஸ்கர் விருது கிடைச்சிருக்கு. அதனால அதுல சம்மந்தப்பட்ட எல்லாருக்கும் சமூகவலைதளங்கள்ல வாழ்த்துக்கள் குவிஞ்சுட்டு இருக்கு.

முதல்ல நாம பாக்க போறது நாட்டு நாட்டு பாட்டுக்கு கிடைச்சுருக்க ஆஸ்கர் பத்தி தான். இந்தியாவோட பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் இணைஞ்சு நடிக்க, உலகப் புகழ்பெற்ற இந்திய இயக்குநர் ராஜமெளலி இயக்கின படம் தான் RRR. அதிக வசூல் சாதனை படைச்ச இந்திய படங்கள்ல இதுவும் ஒன்னு. அந்த படத்துல இடம்பெற்ற பாட்டு தான் ‘நாட்டு நாட்டு’. பாட்டும் ரொம்ப பிரம்மாண்டமா, நம்ம ஆச்சரியப்பட வைக்குற அளவு இருந்துச்சு.

படம் வந்த புதுசுலயே இந்த பாட்ட எல்லாரும் கொண்டாடினாங்க. ரீல்ஸ்ல ஒரு பக்கம் உலகம் முழுக்க இந்த பாட்டும், இந்த பாட்டோட Dance Moves-ம் பிரபலமாச்சு. அதுமட்டுமில்லாம RRR படத்துக்கும், நாட்டு நாட்டு பாட்டுக்கும் வரிசையா விருதுகள் கிடைச்சுது. கண்டிப்பா ஆஸ்கரும் இந்த பாட்டுக்கு கிடைக்கும்னு இந்திய மக்கள் எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருந்தாங்க. அதே மாதிரி இப்போ ஆஸ்கர் விருதும் கிடைச்சுடுச்சு.

ஆனா நாம எதிர்பார்க்காம நமக்கு இன்னொரு விருது கிடைச்சுருக்கு. அதுதான் The Elephant Whisperers ஆவணப்படத்துக்கு கிடைச்சிருக்க விருது. ஒரு சினிமா திரைப்படம் மக்கள் கிட்ட பெருசா போய் சேருறதோ, கொண்டாடப்படுறதோ, விருது வாங்குறதோ எப்போதும் நடக்கக்கூடிய ஒன்னு. ஆனா இந்தியால ஒரு ஆவணப்படம் ஆஸ்கர் விருது வாங்குறது எதிர்பாராத, ஆச்சரியமான விஷயம்.

The Elephant Whisperers – ஆதரவில்லாத யானைக்குட்டிகள தமிழ்நாட்ட சேர்ந்த ஆதிக்குடி தம்பதிகள் எப்படி வளர்க்குறாங்க, அதுக்கு அரசாங்கத்துல இருந்து என்ன உதவிகள் செய்றாங்க, அவங்களுடைய வாழ்க்கை முறை எப்படியிருக்கு, அவங்க வாழ்க்கைல நடந்த சம்பவங்கள், வளர்ந்ததுக்கு அப்பறம் யானைக்குட்டிகள என்ன பண்ணுவாங்க இப்படி அவங்களுடைய வாழ்க்கையோட பல பகுதிகளையும் அழகா ஆவணப்படுத்தியிருப்பாங்க. எப்படியும் படத்த வருஷக் கணக்கா பொறுத்திருந்து எடுத்திருப்பாங்க.

இந்த படத்துக்கு கிடைச்ச ஆஸ்கர், நல்ல ஆவணப்படங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகைல, புதிய ஆவணப்படங்கள் உருவாகுறதுக்கான ஊக்கம் அளிக்குற விதமாவும் இருக்கு. அதுமட்டுமில்ல இந்த படத்துடைய இயக்குநர் Kartiki Gonsalves சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கான நம்பிக்கையா மாறியிருக்காரு. இந்த படம் ஓடிடில வெளியானதால நிறைய பேர் பாத்திருக்க வாய்ப்பில்ல. அதே சமயம் ஓடிடி தளங்கள் இந்த மாதிரியான ஆவணப்படங்களுக்கு நல்ல அடித்தளம் அமைச்சும் கொடுத்திருக்கு.

ஓடிடி தளங்கள் இல்லாம இருந்திருந்தா இந்த அளவுக்கு ஆவணப்படங்கள் மக்கள் கிட்ட ரீச் ஆகுமாங்குறதும் சந்தேகம் தான். இன்னைக்கு இருக்க டிஜிட்டல் உலகத்துல எந்த ஒரு படைப்பும் ரொம்ப ரொம்ப ஈஸியா உலகம் முழுக்க இருக்க மக்கள் கிட்ட போய் சேர்ந்துடும். அதனால நாம தரமான ஒரு படைப்ப, அதுக்கான சமயம் வர வரைக்கும் காத்திருந்து உருவாக்கினா அது நிச்சயம் மக்களால கொண்டாடப்படும். அதுக்கு உதாரணம் தான் இந்த Elephant Whisperers. இத ஆஸ்கர் அங்கீகரிச்சது இன்னும் அழகான ஒரு விஷயம்.

https://fb.watch/jfRDWm-yvl/

இந்த படத்துல இருக்கக்கூடிய முதுமலைய சேர்ந்த தமிழ்ப் பழங்குடி தம்பதிகள் பொம்மன், பெள்ளி தம்பதியும் இந்த விருது அறிவிச்ச செய்திய கேட்டு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. இன்னொரு பக்கம் இது தமிழ் மக்கள் எல்லாருக்கும் கிடைச்ச வெற்றியாவும் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டுட்டு இருக்கு. இந்த படத்த பார்க்காதவங்க நிச்சயம் பாருங்க… படத்த பார்த்தவங்க உங்களுடைய கருத்துகள கமண்ட்ல சொல்லுங்க.

Article By MaNo