Specials Stories

கே.வி.ஆனந்த் எனும் வெற்றிப் படைப்பாளி !!!

கே.வி. ஆனந்த் தன்னுடைய திரைப்பயணத்தை ஒளிப்பதிவாளராக 1994 இல் “தேன்மாவின் கொம்பத்து” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். அந்த படத்துக்காக தேசிய விருதும் வாங்கினார். தமிழ் சினிமாவில் “நேருக்கு நேர்”, “பாய்ஸ்” போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக வேலை செய்தார். ஆனால் இவர் இயக்குனராக அவதாரம் எடுத்த முதல் படம் “கனா கண்டேன்”.

இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, இப்படத்தில் “ஸ்ரீகாந்த்” மற்றும் “கோபிகா” நடித்துள்ளனர். ஆனால் நம் எல்லோருக்கும் கே.வி. ஆனந்த் என்றாலே “அயன்”, “கோ” போன்ற படங்கள் தான் ஞாபகம் வரும். இன்றைக்கு வரை “அயன்” படத்தைப் பற்றி பிரபலமாக எல்லோரும் பேசி வருகிறார்கள். சூர்யாவின் திரைப்பட வரலாற்றிலேயே இது மிக முக்கியமான படமாக அமைந்தது.

Director KV Anand's body not handed over to family as he tests COVID +ve | KV  Anand| Celebrity death| Coronavirus

சூர்யாவுடன் மீண்டும் இணைந்தார் கே.வி. ஆனந்த். ஆம், “மாற்றான்” படத்தில் மீண்டும் இணைந்தார். எப்போதும் இவருடைய அடுத்தடுத்த படங்களுக்கிடையேயான இடைவெளி அதிகமாக இருக்கும். அதற்கு அவர் சொன்ன காரணம், “திரைப்பட கதைகள் Readymade-ஆக எங்கேயும் கிடைக்காது, ஒரு படத்திற்கு மிக முக்கியம் ‘pre-production’ மற்றும் ‘post-production’ அதை தெளிவாக செய்வது மிக மிக முக்கியம். நான் ஒரு ஒளிப்பதிவாளர் தான். நல்ல கதை கிடைத்தால் தான் நான் இயக்குனராக பணியாற்றுவேன்”, என்று கூறியுள்ளார்.

வெற்றிப்படங்கின் இயக்குனரான கே.வி.ஆனந்த் அவர்களை அவரது பிறந்தநாளன்று நினைவு கூறுகிறது சூரியன் FM.

Article by RJ Suba