இந்த உலகமே, வானத்த அண்ணாந்து பார்த்த ஒரு நாள் தான் பிப்ரவரி 1, 2003.
வரலாற்றில் கொஞ்சம் பின்னாடி போய் பார்க்கலாமா?. 17ஆம் தேதி மார்ச் மாதம் 1962-ல் இந்தியாவில் உள்ள கர்னல் பகுதியில் பிறந்தவங்கதான் கல்பனா சாவ்லா. நம்ம எல்லாருக்குமே சின்ன வயசுல டீச்சர் ஆகணும், இன்ஜினியர் ஆகணும், டாக்டர் ஆகணும்னு கனவு இருந்திருக்கும்.
இப்ப நாம ஆசைப்பட்ட வாழ்க்கைய தான் வாழ்ந்துட்டு இருக்கோம்-னு கொஞ்சம் தயக்கத்தோடு தான் ஒரு சிலர் பதில் சொல்வாங்க. ஆனா சின்ன வயசுல இருந்து வானத்தை பார்த்து விண்வெளியில் என்ன இருக்குனு கனவு கண்டவங்க கல்பனா சாவ்லா. தான் ஆசைப்பட்ட விஷயத்துக்காக உயிர் தியாகம் பண்ண கூட தயாரா இருந்தவங்க தான் கல்பனா சாவ்லா.
பஞ்சாப் பொறியியல் கல்லூரி-ல ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிச்சு, 2 மாஸ்டர்ஸ் டிகிரி வாங்கி, 1988-ல PHD வாங்கினாங்க. சொல்லப்போனா 1999-ல, அமெரிக்காவோட குடியுரிமையை அந்த நாட்டு அரசு கல்பனா சாவ்லாவுக்கு கொடுத்துச்சு. கல்பனா சாவ்லாவோட முதல் விண்வெளி பயணம் வெற்றிகரமாய் இருந்ததால, 2003-ல அடுத்த விண்வெளிப்பயணத்துக்கு தயாரானாங்க.
பிப்ரவரி மாதம் பூமில தரையிறங்க இருக்காங்கன்னு அறிவிப்பு வந்ததும், எல்லாரும் தனது குடும்பத்தினரை சந்திக்க போறோம் அப்படின்னு சொல்லி காத்துட்டு இருந்தாங்க. அதுல ஒரு இந்திய குடும்பமும் இருந்துச்சு. தரையிறங்குறதுக்கு 16 நிமிஷத்துக்கு முன்னாடி space shuttle வெடிக்கும்-னு யாரும் எதிர்பார்க்கல. ஆனா இது நடக்கும்னு ஜனவரி மாதமே NASA-வுக்கு தெரியும்.
பூமியில் இருந்து போகும் போது விண்வெளியில் உள்ள debris-ல மோதி பழுதாகி இருந்திருக்கு. இதுதான் இந்த விபத்துக்கான காரணம்-னு சொல்றாங்க. இந்தியாவில் பிறந்து விண்வெளியில கால் தடம் பதித்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமைக்கு உரித்தானவர் கல்பனா சாவ்லா.