Specials Stories

பாப் உலகத்தின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் !!

பாப் உலகத்தின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன், இவருடைய இடத்தை எவ்வளவு முயற்சி செய்தும் நிரப்ப முடியவில்லை. இவருடைய பாட்டுக்கும், இவருடைய நடனத்திற்கும் இல்லாத ரசிகர்களே கிடையாது, இவர் மறைவுக்குப் பின்னரும் இவரைப்பற்றி நடன உலகமே பேசிக் கொண்டுதான் இருக்கிறது.

புகழின் உச்சியில் பறந்துகொண்டிருந்த மைக்கேல் ஜாக்சன் பெரிய சறுக்கல்களையும் சந்தித்திருக்கிறார். ஜூலை மாதம் 2009-ல் நடக்க இருந்த ஒரு நிகழ்ச்சிக்காக ஜூன் மாதம் 2009 அன்று தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த மைக்கேல் ஜாக்சன் திடீரென்று காலமானார். பாப் உலகத்திற்கே ஒரு கறுப்பு தினமாக மாறியது அந்த நாள், அவருடைய இறப்புக்கு காரணம் என்னவென்று யாருக்கும் இதுவரை தெரியாது.

Michael Jackson - Kids, Thriller & Songs - Biography

கருப்பினத்தவர்களை அடிமைப்படுத்திய காலத்தில் பிறந்தவர் தான் மைக்கேல் ஜோசப் ஜாக்சன், ஆமாம் இவருடைய முழு பெயர் மைக்கில் ஜோசப் ஜாக்சன். அப்பாவிடம் பெல்ட்டில் அடி வாங்கிய சோகங்களை பல இடத்தில் கூறியிருக்கிறார் மைக்கேல் ஜாக்சன், இருப்பினும் தன் தந்தையிடமே இசை ஞானத்தை கற்றுக்கொண்டார்.

வெள்ளை இனத்தவரும் அனைவரும் சமமே என்பதை நிரூபிப்பதற்காக இசையை பயன்படுத்தினார்கள். மைக்கேல் ஜாக்சனுடைய திறமையை எதேச்சையாக கண்டுபிடித்தவர் அவருடைய தாயார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறி நாம் கேட்டிருப்போம், மைக்கேல் ஜாக்சன்னின் வாழ்க்கையில் அவருடைய அம்மா தான் நின்றிருக்கிறார்.

எதேச்சையாக தன்னுடைய படுக்கையை மடித்து வைத்துக் கொண்டிருக்கும் பொழுது மைக்கேல் ஜாக்சன் தன்னை அறியாமல் பாடியிருக்கிறார். அதைக் கண்ட தாயார், தந்தை இடம் சென்று மைக்கேல் ஜாக்சனை நீங்கள் வைத்திருக்கும் “பேண்டில்(band)” முக்கியமான பாடகராக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். மைக்கேல் ஜாக்சன் உடைய தந்தை மிகவும் கடுமையாக நடந்து கொள்ளும் ஒருவர், தன் தாயார் கொடுத்த அழுத்தத்தினால் தன் தந்தை அவரை முக்கியமான பாடகராக முன் நிறுத்தினார்.

Michael Jackson and Donald Trump's Friendship: A Timeline

இயற்கையாகவே குரலில் அற்புதங்களை நிகழ்த்தும் திறனை கொண்டவர் மைக்கேல் ஜாக்சன். தன் தந்தையுடைய ஜாக்சன்-5 என்ற பேண்டில் மக்கள் பார்க்க துடித்தது மைக்கேல் ஜாக்சனை மட்டும் தான். அமெரிக்கா முழுவதும் பிரபலமாக தொடங்கிய மைக்கேல் ஜாக்சனின் புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. மைக்கேல் ஜாக்சனுடைய வெற்றி கருப்பினத்தவரின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது.

இளவரசி டயானா அவர்களை எப்படி மீடியா பின் தொடர்ந்ததோ அதே போலவே மைக்கேல் ஜாக்சனை பின்தொடர்ந்து கிசுகிசுக்கள் உருவாக்கினர். எது உண்மை எது கிசுகிசு என்றே தெரியாத அளவுக்கு அவரைப் பற்றி வதந்திகள் கிளம்ப ஆரம்பித்தன. தன்னுடைய குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது, இருப்பினும் வெற்றியானது அவரை கைவிடவில்லை.

தன் சிறு வயதில் அதிக சந்தோஷம் அனுபவித்ததில்லை என்ற காரணத்தினால் இவர் இறக்கும் முன்பு பொழுதுபோக்கு பூங்கா ஒன்று அமைத்தார், பின் அதில் வாழ்ந்தார். கருப்பு இனத்தவராக இருக்கட்டும், மாநிறத்தவராக இருக்கட்டும், வெள்ளை இனத்தவராக இருக்கட்டும் அனைவரும் சமமே என்று அவருடைய ஐந்து நிமிட பாடலில் உணர்த்தினார் மைக்கேல் ஜாக்சன்.

மைக்கேல் ஜாக்சன் அவர்களை அவரது பிறந்தநாளன்று நினைவு கூறுவதில் பெருமிதம் கொள்கிறது சூரியன் FM.