Specials Stories

எதார்த்த நடிப்பின் சொந்தக்காரர் “பசுபதி”

ஒரு நடிகனாக தனது நடிப்பை அடுத்தடுத்த படங்களில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து கொண்டு போவதில் வல்லவர் இந்த “விருமாண்டி பசுபதி”. சமூகத்தின் முக்கியமான விஷயங்களை தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ஆழமாக பதிய வைப்பதில் கெட்டிக்காரர்.

விருமாண்டியில் தொடங்கிய சிறந்த வில்லத்தனத்திற்கான நடிப்பு ,திருப்பாச்சி, தூள், சுள்ளான், அருள் படங்களில் மூலம் வில்லத்தனத்தையும் வித்தியாசமாக வெளிப்படுத்தியவர்.இன்றளவும் சகமனிதர்களின் நட்புகளை நினைவு படுத்தும் விதமாக அமைந்தது சூப்பர் ஸ்டாருடன் குசேலன் படத்தில் இவர் நடித்த நண்பன் கதாபாத்திரம்.

Virumandi (2004)

வெயில் ,வெடிகுண்டு முருகேசன் படத்தில் “அண்ணனாக “, இதற்கு தானே ஆசை பட்டாய் பாலா குமாரா படத்தில் நகைச்சுவை நடிகராக, பன்முகங்களில் தனது நடிப்பை கட்சிதமாக வெளிப்படுத்தியவர்.
மஜா, ஈ,அரவான், படங்களின் மூலம் சிறந்த குணச்சித்திர நடிகர் ஆகவும் தனது நடிப்பை பதிவு செய்தார்.

நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் சிறந்த வில்லத்தனம் மற்றும் தனது நடிப்பால் திரை உலகில் தனி முத்திரையை பதித்துள்ளார். தமிழ் சினிமா கண்ட திறமையான கலைஞர்களுள் ஒருவர் இந்த “பட்டாசு பாலு பசுபதி” என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நடிகர் பசுபதி அவர்கள் மேலும் பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என வேண்டி சூரியன் FM சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article by RJ Vigithra

Tags

About the author

shafin

உங்களில் ஒருவன்