Specials Stories

இந்திய சினிமாவின் Darling பிரபாஸ் !!!

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்-னு சின்ன வயசுல நம்ம பாட்டியோ தாத்தாவோ கதை சொல்லும் போது அந்த ராஜா ஆறடி உயரத்துல, பார்க்க கம்பீரமா, முகத்துல ஒரு தேஜஸோட இருப்பாருனு சொல்லிருப்பாங்க. நம்மளும் பல விதமா கற்பனை பண்ணி அந்த தோற்றத்தை உருவகப்படுத்திருப்போம், ஆனா இப்போல்லாம் அப்படி விளக்கம் கொடுக்கணும்னு அவசியம் இல்ல. அந்த ராஜா பார்க்க நடிகர் பிரபாஸ் மாதிரி இருப்பாருனு Simple-ஆ சொல்லிறலாம்.

ஏன்னா பாகுபலிக்கு பிறகு ராஜானாலே அது பிரபாஸ் தான். பார்க்க மட்டும் இல்ல நடிப்புலையும் ஒரு ராஜாவா குறிப்பா பொண்ணுங்க மனசுல ஒரு ” காதல்” இளவரசனா இன்னைக்கு வரைக்கும் தனி இடம் இவருக்கு உண்டு. முறையா நடிப்பு பயிற்சி எடுத்துக்கிட்ட பிரபாஸோட முதல் படம் 2002 ல தெலுங்குல வெளிவந்த “ஈஸ்வர்”.

Prabhas to fly UK for a body test?

அதுக்கப்புறம் நம்ம த்ரிஷாவோட ஜோடி சேர்ந்த “வர்ஷம்”-ன்ற தெலுங்கு படம் தான் இவருக்கு நல்ல Break கொடுத்துச்சு. பிரபாஸும் நடிப்புல மிளிர ஆரம்பிச்சாரு. அப்புறம் சத்ரபதி, பில்லா, மிர்ச்சி-னு பல Blockbuster இவரு கொடுத்தாலும் நம்ம தமிழ் நெஞ்சங்களுக்கு இவர் “பாகுபலி”யா தான் அறிமுகம் ஆனாரு. திரைதுறையில ஒரு நடிகருக்கு நாலு வருஷ காலம்-ன்றது மிக பெரிய விஷயம். ஆனா அந்த நாலு வருஷத்த பிரபாஸ் பாகுபலிக்காக கொடுத்து உழைச்சு பாகுபலியாவே வாழ்ந்திருப்பாரு.

பாகுபலி ” தி பிகினிங் ” பார்த்துட்டு இரண்டாம் பாதிக்காக மக்கள் ரொம்ப நாள் wait பன்னாங்கன்னா அதுக்கு பிரபாஸும் ஒரு காரணம்னே சொல்லலாம். குறிப்பா சிவ லிங்கத்தை தூக்கும் போது, யானையை control பண்ணும்போது , தென்னைமரத்தையே கோட்டைக்குள்ள நுழைய ஒரு வழியா உபயோகிக்கிறதுனு எல்லா காட்சிகள்லையும் இப்படிலாம் ஒருத்தரால பண்ண முடியுமானு மக்களை யோசிக்க வைக்காம பாகுபலியால முடியும்னு நம்ப வச்சதுதான் பிரபாஸோட வெற்றி.

இந்த ஒரு படத்துக்காக கிட்ட்த்தட்ட 105 கிலோ வா தன்னோட எடையை அதிகரிச்சாராம் பிரபாஸ். அந்த அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் தான் மக்கள் மனசுல பிரபாஸ்-ஐ ஒரு நடிகரா Distinction-ல பாஸ் பண்ண வச்சுருக்கு. இன்னைக்கு வரைக்கும் தன்னோட ரசிகர்களுக்கு ஒரு fitness ரோல் மாடலா இருக்கக்கூடிய பிரபாஸ் ஒரு Volley Ball Player-ஆம். 2019 ஆம் ஆண்டு அதிகம் கூகிள்-ல தேடப்பட்ட, அதிக அளவு பெண் ரசிகைகளை கொண்ட பிரபாஸ்க்கு இதுவரைக்கும் எந்த நடிகருக்கும் இல்லாத அளவுக்கு பாங்காங்-ல இருக்குற Museum-ல அமரேந்திர பாகுபலியா அந்த போர்க்கள உடையோட ஒரு மெழுகு சிலை அமைக்கப்பட்டிருக்கு.

இந்தியா சினிமாவின் இந்திர பாகுபலியான பிரபாஸ் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

Article By : RJ Dharshini