Specials Stories

முரட்டு சிங்கிள்ஸ்ன் குலசாமி Premji Amaran..!

Premgi-Amaren

Google ல போயிட்டு Premji Amaran னு type பண்ணா, Google நமக்கு “People also Ask”னு காமிக்குற கேள்விகள் ,
Why is Premji Not getting married?
What happened to Premji?
Is really venkat prabhu is own brother of Premji?
அடப்பாவிகளா..!

அப்படி தான் பிரேம்ஜி பற்றி நம் தமிழ் கூறும் நல்லுலகத்தோட புரிதல் இருக்கு, ஆனா அவரும் அதுக்கு சளைச்சவர் இல்ல, முரட்டு சிங்கள்களின் கூட்டத்துக்கு solo சிங்கமா ஒரு தனி அன்பு சாம்ராஜ்யமே நடத்திட்டு இருக்கார். கல்யாணத்த விட கேரியர் முக்கியம்னு நெனைக்கற முக்கால்வாசி இளைஞர்கள் பிரேம்-அ மனசுல Frame போட்டு வச்சிருக்காங்க.

தமிழகத்தின் மிகப்பெரிய இசை பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ, இவரின் இசை திறமை பலருக்கும் தெரியாமலே போனது. யுவனின் இசையில் Rap பாடத் துவங்கிய பிரேம்ஜி பல அற்புதமான பாடல்களை பிற்காலத்தில் compose செய்தார். இசை சுனாமினு ஜாலியா சொன்னாலும் பிரேம்ஜி நிச்சயமா ஒரு இசை ஊற்று தான்.

ஆரம்பத்துல சிறிய வேடங்களில் நடிக்கத் துவங்கி பலரின் கவனத்தை ஈர்த்த பிரேம்ஜி, வெங்கட் பிரபுவின் படங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டு முழுநேர காமெடியனாக மாறினார். மக்களை ‘இசை’யூட்டியோ ‘நகை’யூட்டியோ ரசிக்க வைக்க தவறியதில்லை.

எல்லோருக்குள்ளும் எப்போதும் ஒரு குழந்தை உண்டு. பலர் அதை மறச்சுடுறோம், சிலர் அந்த குழந்தை தனத்தோட மகிழ்ச்சியா வாழ்றோம். எல்லோராலும் எப்போதும் குழந்தை மனசோட இருந்திட முடியாது. பிரேம்ஜி அப்படி ரொம்ப இயல்பா வாழறார்.

கோவிலுக்கு போனா, Social Media-ல போட்டோ எடுத்து போட்டு #BlessingsfromGod னு போடுறார், 11:11 மணிக்கு Good Luck message போஸ்ட் பன்றார். “சின்னபுள்ளத்தனமா இருக்கியே டா” னு யாராவது பெரிய மனுசங்க கமெண்ட் போட்டா, ரொம்ப இயல்பா “ஹா ஹா” ரியாக்ட் பண்றார்.

எப்போதும் போல பிரேம்ஜி கமிட் ஆகிட்டார்னு இப்போதும் ஒரு செய்தி சுத்திட்டிருக்கு, பிரேம்ஜி சிங்கிளாக இருப்பதும், கமிட் ஆவதும் அவரின் தனிப்பட்ட விஷயம். ஆனா “கல்யாணம் பண்ணலேன்னா கஷ்டம் டா கடைசி வரைக்கும்”, அப்டினு எந்த boomer uncle நம்ம கிட்ட cringe செய்தாலும், ஒரு முரட்டு single சந்தோசமா வாழ முடியும்னு single களின் குலசாமியா வாழ்ந்து காண்பிக்கும் Premji அவர்களுக்கு சூரியன் FM சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Article by a Devotee Single, Roopan Kanna.