Specials Stories

இந்த குதிரை ஓடிக்கிட்டே தான் இருக்கும் ! ரஜினி எனும் காந்தம் !

தாதா சாகேப் பால்கே விருது..இந்திய திரைத்துறையின் உயரிய விருது..

43 வருஷத்திற்கு முன்னாடி இந்த உயரிய விருதை தொட முடியும்னு banglore-ல பஸ் கண்டக்ட்ரா வேலை பாத்த ஒரு மனுசனால நினைச்சு கூட பாத்திருக்க முடியாதுல..

தியாகராஜ பாகவதர்,பி.யு.சின்னப்பா,எம்.ஜி.ஆர், சிவாஜி-ன்னு தக தகன்னு மின்னுற ஹீரோக்கள் சினிமாவை ஆண்ட காலங்களுக்கு, யாரால வேணாலும் சினிமாவ ஆள முடியும்னு அபூர்வ ராகங்கள் மூலமா ஸ்டைலா Gate-அ தொறந்து காட்டுனாரு..1975ல இருந்து இன்னைக்கு வரைக்கும் அந்த gate தொறந்தே தான் இருக்கு.

Happy birthday thalaiva: Cigarette stunt hero Rajinikanth who asked fans to  quit smoking - Photos News , Firstpost

தமிழ் சினிமாவின் வரலாறு ரஜினிகாந்த் என்கிற பெயர், சூப்பர்ஸ்டார் என்கிற டைட்டில் இல்லாம என்னைக்கும் முழுமை அடையாது….

சிவாஜி ராவ்..இளமை பருவத்துல பெங்களூர் பஸ் கண்டக்டர். பஸ் கண்டக்டரா இருந்த ஒருத்தர் சூப்பர்ஸ்டாரா ஆனாருனு ஒரு வரி motivation-க்காக சொல்லுவோம். ஆனா அந்த ஒரு வரிக்கு பின்னாடி அத்தனை அவமானம், தோல்வி, கடின உழைப்புன்னு பல கலவை இருக்கு.

Rajinikanth decides to dissolve Rajini Makkal Mandram | Chennai News -  Times of India

கண்டக்டரா இருந்தவரு பல மேடை நாடகங்கள்ல நடிச்சுட்டு இருந்தப்ப அவர் திறமையும், ஸ்டைலையும் பாத்த அவரோட நண்பர்கள், “நீ நடிப்பு கத்துக்க..அதுக்காக போய் படி”-ன்னு அவங்க செலவுக்கு பணம் கொடுத்து madras film institute அனுப்பி படிக்க வைச்சாங்க. நல்ல நண்பர்களால தான் நான் இந்த நிலைமைக்கு வர காரணம்னு அவர் நிறைய மேடைகள்ல சொன்னதுண்டு.

நாடகங்கள்ல தொடர்ந்து நடிச்சுட்டு இருந்த சிவாஜி ராவ் இயக்குனர் இமயம் பாலச்சந்தர் அவர்களால சினிமாவுல ரஜினிகாந்தாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

அபூர்வ ராகங்கள், அவர்கள், மூன்று முடிச்சுனு வில்லன் கதாபாத்திரத்துல கலக்கிட்டு இருந்த ரஜினிகாந்தை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது 16 வயதினிலே பரட்டை character தான். பத்த வச்சிட்டியே பரட்டை-ன்ற வசனத்துக்கு ஏத்த மாதிரி அவர் சினிமா வாழ்க்கையோட வெற்றி பத்திக்க ஆரம்பிச்சது.

ரஜினிகாந்த் முழு ஹீரோவா அறிமுகமான படம் பைரவி. பைரவி படத்துக்கு தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினிகாந்துக்கு கொடுத்தார் கலைப்புலி தாணு.

The Rajini effect

பைரவியிலேயே பட்டம் கொடுக்கப்பட்டாலும், “நான் போட்ட சவால்” படத்துல தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-ன்ற டைட்டில் screenல உதிக்க ஆரம்பிச்சது.

commercial ஹீரோவா உருவெடுத்தவருக்கு, அடுத்த படமா அமைஞ்சது முள்ளும் மலரும்…நடிப்புனு வந்துட்டா கெட்ட பய சார் அவன்னு ரஜினி காட்டுன கிளாஸ் தான் முள்ளும் மலரும்..இன்னைக்கு வரைக்கும் ரஜினியோட LIFETIME class-ஆ இருக்கு அந்த படம்..

1978ல 20 படங்களுக்கு மேல நடிச்ச ரஜினிக்கு முள்ளும் மலரும்-க்கு அப்புறம் ஒரு இறக்கம். படங்கள் பெருசா போகல, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகுறாரு..மறுபடியும் second ஹீரோவா களமிறங்குறாரு. கமல்ஹாசனோட “நினைத்தாலே இனிக்கும்”. அதுக்கப்பறம் ரஜினி கமல் எனும் இரு துருவங்கள் அடுத்து இணையவே இல்லை.

1980 ரஜினி மாஸ் ஹீரோவா உருவெடுத்த ஆண்டு. பில்லா படத்தின் மூலம் மாஸ் ஹீரோவா மாறின ரஜினி பொல்லாதவன்,முரட்டு காளை, தீ, கழுகு-னு மாஸ் சரவெடியா வெடிச்சுட்டு இருந்தப்ப திடீர்னு ஒரு break..

அப்பத்தான் தில்லு முள்ளு வெளி வந்தது..மாஸ் மட்டும் இல்ல எனக்கு காமெடியும் வரும்னு சிரிப்பு சரவெடிய கொளுத்தின படம் தில்லு முள்ளு..இன்னைக்கு வரைக்கும் ரஜினியோட evergreen காமெடி படம்.

அதுக்கப்பறம் தன்னோட பாணிய மாத்திக்கிட்ட ரஜினி, தொடர்ந்து மாஸ், செண்டிமெண்ட் கலந்த கிளாஸ் படம்னு வரிசயா குடுக்க ஆரம்பிச்சாரு..நடுவுல அப்பப்போ காமெடியா குரு சிஷ்யன், ராஜா சின்ன ரோஜா, அதிசய பிறவி-னு 90 வரைக்கும் போயிட்டு இருந்தது..90கள் வரைக்கும் flop-களும் இருந்தது.

1990-க்கு அப்புறம் ரஜினியின் திரை பயணம் இன்னும் உச்சத்தை தொட ஆரம்பித்த கால கட்டம்.. மற்ற நடிகர்கள் நெருங்க முடியாத அளவுக்கான உச்சம் அது.

மணிரத்னம் கூட கை கோர்த்த ரஜினி, தளபதி படம் மூலமா அடுத்த மாஸ் உச்சத்தை தொட ஆரமிச்சாரு..blockbusterஆக மாறிய தளபதிக்கு அப்புறம் ரஜினிக்கு blockbuster மோகம் தான் அதிகமா இருந்தது.

அண்ணாமலை ரஜினிக்கான ever mass opening..அதுல வந்த டைட்டில் கார்டும் மியூசிக்கும் ரஜினியோட Mass-ஐ இன்னும் மாஸ் ஆக்குச்சு….இப்போ வரை எல்லாரோட favorite ஆகவும் இருக்கு..

அண்ணாமலை வெற்றி கூட்டணியான சுரேஷ் கிருஷ்ணாவோட இணைஞ்சு வீரா படம் வெளியானது. அடுத்த படமும் சுரேஷ் கிரிஷ்ணாவோட தான், பேரு பாட்ஷான்னு அறிவிச்சாரு ரஜினி..

எல்லாருக்கும் பயங்கர ஷாக்,..என்னடா மறுபடியும் அதே டைரக்டர்னு..ஆனா பாட்ஷா இமாலய வெற்றியா தொட்டுச்சு..அதோட வெற்றி, அத விட பயங்கர ஷாக்க கொடுத்தது..ரஜினியோட evergreen மாஸ் படம் பாட்ஷா.

தமிழ் சினிமாவுல எந்த don கதை வந்தாலும் பாட்ஷாவோடு ஒப்பிட்டு பாக்குற அளவுக்கு இருந்தது அந்த படம்..
மறுபடியும் முத்து, அருணாச்சலம்-னு அடுத்தடுத்த blockbuster கொடுத்த ரஜினிக்கு அடுத்து ஒரு வருஷம் படமே வரல.

Rajinikanth Wiki, Age, Height, Wife, Children, Family, Biography & More –  WikiBio

திரும்ப 1999-ல் வந்தது படையப்பா..அப்படி ஊஞ்சல இழுத்துட்டு கால் மேல கால் போட்டு இன்னுமும் மாஸ்னா நாந்தான்னு உட்கார்ந்திருக்காரு ரஜினி..

அதுக்கப்புறம் ஒரு வருஷம் படம் வரல…பாபா படம் அறிவிச்சாரு..அது வெற்றி பெற்றா அது தான் என்னோட கடைசி படமா இருக்கும்னு கூட அறிவிச்சாரு.

அவளவு தான் ரஜினி முடிஞ்சுட்டாருன்னு எல்லா இடத்துலயும் பேச்சு..மூணு வருஷம் அப்பறம் வந்துச்சு சந்திரமுகி..வேட்டைய மன்னன் கதைல மறுபடியும் box office-அ வேட்டையாடுனாரு சூப்பர்ஸ்டார்..தமிழ் சினிமாவோட அதிக வசூல் படமா மாறுச்சு சந்திரமுகி..

மறுபடியும் சிவாஜி, எந்திரன்-னு தொடர்ச்சியான blockbuster..

அடுத்து 2011 உடல்நிலை சரி இல்லாததால downfall..

மறுபடியும்..என்ன…?? அவ்வளவுதான் ரஜினி முடிஞ்சுட்டாரு ஆனா அங்கதான் Repeat-uu..ரெண்டு வருசம் அப்புறம்….திரும்ப வந்துட்டேன்னு சொல்லுன்னு கபாலியா வந்து நின்னாரு…Mass ஆன Comeback கொடுத்த படம் தான் பேட்ட.

பேட்டைல மறுபடியும் மாஸ் காட்டுன ரஜினி..தர்பார், அண்ணாதன்னு அடுத்தடுத்து படங்கள் கொடுத்தாரு..

Black and white, ஈஸ்ட்மென் கலர், கலர் படம், அனிமேஷன், 3d-ன்னு 5 பரிமாணங்கள்ல நடிச்ச ஒரே நடிகர் சூப்பர்ஸ்டார் தான்.

ரஜினின்ற style icon என்னைக்கும் நிரந்திரமான ஒன்னு…சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கான நிறந்தரமானவரும் ரஜினி தான்..

Flop கொடுத்தாலும்…ரஜினி முடிஞ்சுட்டாருன்னு பேசுனாலும்..திரும்ப திரும்ப வந்துட்டே தான் இருந்தாரு..
அவர் சொல்ற மாதிரி டக்குன்னு எந்திரிக்கிற குதிரை…!

40 வருசமா இந்த குதிரை ஓடிட்டே தான் இருக்கு.

தமிழ் சினிமா வரலாற 1975க்கு அப்பறம் எடுத்து பாத்தா எங்கும் ரஜினி, எதிலும் ரஜினின்ற மாஸ் அழுத்தமா எழுதப்பட்டிருக்கும்..

கண்டக்ட்ரா இருந்த ஒருத்தர் தாதா சாகேப் விருது பெற்றது இந்த inspirational பயணத்தால தான்!..

திரைத்துறைய பொறுத்த வரை…style, மாஸ் தாண்டி என்றும் a common man to superstar என்கிற inspiration தான் ரஜினிகாந்த்!

Article by Siva Balan