Specials Stories

இந்திய சினிமாவின் Hulk – ராணா டகுபதி !!!

பாகுபலிய கட்டப்பா ஏன் கொன்றார்னு கேட்டா, அந்த கேள்விக்கான பதில் பல்லாலதேவன் கதாபாத்திரத்தை கைக்காட்டும். அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து, அந்த கதாபாத்திரமாவே வருடக்கணக்கில் வாழ்ந்த நடிகர் ராணா டகுபதி.

1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாசம் 14ஆம் தேதி நம்ம சிங்கார சென்னையில் பிறந்த இவர் பள்ளி படிப்படிப்பை முடித்தார். 2010 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவுல இவர் “லீடர்” திரைப்படம் மூலமா கால்தடம் பதித்தார். முதல் படத்திலேயே ஆந்திர மாநில முதல்வரா, கம்பீரமா நடிச்சதுக்காக அவருக்கு விருதுகள் குவிந்தன. 2011 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த “தம் மாரோ தம்” திரைப்படம் ராணாவுக்கு பாலிவுட் கதவுகளை திறந்துவிட்டது. அங்கயும் விருதுகள் கிடைத்தன.

South star Rana Daggubati appears before ED in Tollywood drugs case |  Regional News | Zee News

ஆனா, இந்த விருதுகள் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. அதுக்கு பின்னாடி ஒரு பெரிய போராட்டம் இருந்தது. தன்னோட 14 வயதில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பார்வையை மீட்டெடுக்க முயற்சி செய்தனர், ஆனால் அது பலனளிக்கவில்லை. இந்த விஷயத்தை 2016 ஆம் ஆண்டு தான் அவர் வெளியிட்டார். இதைவிட கடினமான ஒரு சவால் அவருக்காக பாகுபலி திரைப்படத்தில் காத்திருந்தது.

ஒரு நடிகரோட வாழ்க்கையில ஒரு கதாபாத்திரத்துக்காக 5 வருஷம் ஒதுக்குறதுன்றது ஒரு பெரிய Risk. ஆனா பாகுபலி திரைப்பத்தோட இரண்டு பாகங்களுக்காக அந்த 5 வருஷத்த அற்பணிச்சாரு. அந்த திரைப்படத்துல 250 நாட்கள் நடிச்சதுக்கு பலனா இந்தியாவோட மிகப்பெரும் Blockbuster திரைப்படமா வெற்றி கொடி நாட்டியது.

இந்த பல்லாலதேவன் கதாபாத்திரத்துக்கு, ராணா உலகநாயகன் கமல்ஹாசனின் நாயகன் படத்தில் இருந்து சில விஷயங்களை உள்வாங்கி நடிச்சதாவும், அவர் உலக நாயகனோட தீவிர விசிறின்னு சொல்லியும் பெருமைப்பட்டாரு. அந்த ராஜா கதாபாத்திரத்துல கோபப்பட்டு தன்னோட கால்களைச் சிம்மாசனத்துக்கு கீழ இருக்குற கல்லுல ஓங்கி மிதிக்கிறப்ப அது உடையிற மாதிரி ஒரு காட்சி வரும். அவரோட உடல் மொழியால அது உண்மைனே நம்ப வைச்சவரு ராணா.

அதுனால அவர Hulk of Tollywoodன்னு பெருமையா அழைக்கிறாங்க. அவருக்கு பாகுபலி இரண்டாம் பாகத்துக்காக சிறந்த வில்லன் நந்தி விருதும் இன்னும் ஒரு அரை டசன் விருதும் கிடைச்சது.
அவஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படத்தோட தெலுங்கு டப்பிங்ல வில்லன் தானோஸ்க்கு டப்பிங் செஞ்சவரும் ராணா தான். இந்தியாவுல முதன்முறையா முழுக்க முழுக்க நீருக்கடியில் எடுத்த படம் Ghazi Attack. திரைப்பத்துல முக்கிய கதாபாத்திரத்துலயும், காடன் திரைப்படத்துல Forest Man of Indiaன்னு ஒரு பெரும் கதாபாத்திரத்தையும் மிக சிறப்பா கையாண்டாரு ராணா.

Idea is to find stories that are unique: Rana Daggubati's avatar as  producer | The News Minute

இந்த திரைப்படத்துக்காக 30 கிலோ உடல் எடையையும் குறைச்சி இருந்தாரு. அவரோட திரைப்படங்கள்ல வர சண்டைக்காட்சிகளை அவரே தான் செய்யணும்ன்னு அடம்பிடிச்சி செய்வாராம்.

இப்படி சினிமா மேல தீரா காதல் கொண்டு இருக்குற நடிகர் ராணா டகுபதிக்கு சூரியன் FM-ன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Article by RJ Jae