Specials Stories

வில்லனாக வந்து சூப்பர் ஹீரோவாக மாறிய சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்

1954ஆம் வருடம் நம் நாட்டின் தலைநகரமான புது டெல்லியில் ராமநாதன்,புஷ்பவல்லி தம்பதியினருக்கு பிறந்தவர் தான் நம்ம “புரட்சித் திலகம்”. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று சொல்லுவாங்க, அந்த பழமொழிக்கு ஏத்த மாதிரியே இவர் பள்ளிப் பருவம் முதலே கால்பந்து ,மட்டைப்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் உடையவராக இருந்து வருகிறார். (1970 )இல் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் என்சிசி மாணவனாக கலந்து கொண்டார்.

பின்னர் சென்னை நியூ காலேஜில் B.Sc. Maths படிக்கும் போது “மிஸ்டர் மெட்ராஸ் யூனிவர்சிட்டி 1974” பட்டத்தையும் வென்றார். பின்பு பெங்களூருவில் அப்போது தொடங்கப்பட்ட தினகரன் தமிழ் பத்திரிகையில் இணைந்தார். Distribution Boy மட்டத்தில் இருந்து பின்னர் ரிப்போர்ட்டராக மாறி அத்துறையில் அவரது விடாமுயற்சியின் காரணத்தால் பல பேர் பேசும் படி ஆனார்.

Sarathkumar reveals Chiranjeevi's huge gesture and turns emotional! - Tamil  News - IndiaGlitz.com

பல புதுமுகங்களின் அறிமுகம் கிடைத்தது, மெல்ல பாதையும் புரிந்தது .இது என் இலக்கு இல்லையே என புரிந்து கொண்ட அவர் சென்னையில் டிராவல் ஏஜென்சி ஒன்றை தொடங்கினார். 1986 ஆம் வருடம் திரைத்துறை அவரை அன்போடடு வரவேற்றது. அவ்வருடத்தில் “செம்மண் ஜாலோ ஸ்திரி” என்ற தெலுங்கு திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்திருப்பார், பின்பு சினிமா மீதான அன்பு அதிகரிக்க இவரின் சினிமா பயணம் இனிதே தொடங்குகிறது.

தமிழ் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் அன்றிருந்த முன்னணி நடிகர்கள் விஜயகாந்த், சத்யராஜ் போன்ற பலருக்கு வில்லனாய் வலம் வந்தார். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர் பல அவார்டுகளை வாங்கி குவித்துள்ளார். அப்போது தான் இந்த தமிழ் சினிமா உணருகிறது, இவர் வெறும் வில்லன் மட்டும் அல்ல இவர் ஒரு ஹீரோ என்று.

படிப் படியாக பல படங்களில் இவர் நடித்துவர “சூரியன்” திரைப்படத்தில் இவரது எதார்த்த நடிப்பால் பிரகாசமான ஒளி இவர் மேல் படத்தொடங்கியது. தெடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர், அக்காலக்கட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றார். நாட்டாமை, சிம்மராசி, சூரியவம்சம் போன்ற திரைப்படங்கள் இன்றிறுக்கும் 2k கிட்ஸ்களுக்கும் Favorite ஆகவே உள்ளது.

மேலும் பல வித்தியாசமான முறையில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த இவருக்கு விருதுகள் வந்து குவியத்தொடங்கின. இன்றைய மீம்ஸ் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் “if double action is an art, then sarath Kumar is a Picaso of it”. ஒரே ஸ்கிரினில் இரு கதாப்பாத்திரத்திரங்களை அன்றிருந்த தொழில்நுட்பத்தை கொண்டு அருமையாக நம் கண் முன்னே காட்டியதற்கு நாம் நன்றி கூறியே ஆகவேண்டும்.

BB3: Kollywood actor Sarath Kumar to play a villain in Nandamuri  Balakrishna film? | Telugu Movie News - Times of India

காஞ்சனா படத்துல தேவையான நேரத்துல அழவெச்சு அலறவும் வெச்சாரு. இப்போ வலம் வர்ற Revenge பேய்களுக்கெல்லாம் மூதாதையர் இவர் தான். அதுமட்டும் இல்லாம தென்னிந்திய நடிகர் சங்க தலைவராவும் இவர் இருந்து இருக்கிறார்.

முன்னாள் பாடிபில்டர், பத்திரிக்கையாளர், இந்திய திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர், ஸ்கிரீன்பிளே ரைடர், தயாரிப்பாளர், … அம்மாடியோ…! இவ்வாறு பல முகங்கள் கொண்டு நம் தமிழ் சினிமாவில் ஒரு தசாவதானி ஆக இருக்கும் நம் சரத்குமார் அவர்களுக்கு சூரியன் FM சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article by Pondicherry Suryan FM