Cinema News Specials Stories

காந்த குரலரசன் சங்கர் மகாதேவன்!

தனது தனித்துவமான குரலினால் பல ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த சங்கர் மகாதேவனின் பிறந்த நாள் இன்று. இவரது பாடல்களின்றி அமையாது நமது Playlist, என சொல்லும் வகையில் பல உணர்வுப்பூர்வமான பாடல்களை சங்கர் மகாதேவன் பாடியுள்ளார்.

1994ஆம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி என பல்வேறு மொழிகளில் 7000-ற்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையில் சங்கர் மகாதேவன் பாடும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது.

ஹீரோ intro பாடல்கள், மெலடி பாடல்கள், motivation பாடல்கள், பக்தி பாடல்கள் என எந்த Genre பாடலாக இருந்தாலும் அதை சங்கர் மகாதேவன் குரலில் கேட்கும் போது ஒரு புது வித தாக்கம் நம்மில் ஏற்படும் என்றே கூறலாம். அந்த தாக்கமே நம்மை சங்கர் மகாதேவனின் ரசிகர்களுள் ஒருவராய் உருமாற்றும் என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழ் சினிமாவிலும் சரி, மற்ற மொழி சினிமாவிலும் சரி முன்னனி நடிகர்கள் அனைவருக்குமே சங்கரின் குரல் திரையில் பாடல்களுக்கு எடுப்பாக இருக்கும். இவரது கலைப்பணியை பாராட்டும் விதத்தில் இந்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. அதுமட்டுமின்றி “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” திரைப்படத்தில் இவர் பாடிய ” என்ன சொல்ல போகிறாய்” பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

2011-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையின் Title பாடலை சங்கர் மகாதேவன் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் இன்றும் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் பாடலாக இருந்து வருகிறது. சங்கர் மகாதேவன் மேலும் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாட வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

பத்மஸ்ரீ சங்கர் மகாதேவன் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.