Specials Stories

தமிழனுக்கு தெரிந்து இருக்கவேண்டிய 53 எழுத்துக்களின் அர்த்தம்!

“பிறந்து சிறந்த மொழிகளுக்கிடையில் சிறந்தே பிறந்த மொழி நம் தமிழ் மொழி” – என்பது வெறும் வீரமாக மட்டும் நாம் சொல்லாமல். அதற்கான காரணத்தையும் நாம் தெரிந்துகொள்வது நம் கடைமை!

தமிழ் ‘ஓர் எழுத்தும்’ பொருள் தர வல்லது. இவ்வகைச் சொற்களுக்கு ஓரெழுத்து ஒரு மொழி என்று பெயர். தமிழில் மொத்தம் 246 எழுத்துக்களில் 53 எழுத்துக்களுக்கு தனியே பொருள் உண்டு. அந்த 53 எழுத்துக்களின் விவரமும் அதன் அகராதி பொருட்களும் தெரிந்துகொள்ளுங்கள்.

 • உயிர் இனம் – 9
  அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ
  அ- ஆறாம் வேற்றுமை உருபிடைச்சொல், சாரியை இடைச்சொல்
  ஆ – பசு, எருது, ஆச்சா மரம்
  இ- சாந்தம், சுட்டிடைச்சொல்
  ஈ – பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு
  உ- சுட்டு
  ஊ – இறைச்சி, உணவு, விகுதி.
  ஏ – அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு
  ஐ – அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்
  ஓ – சென்று தாக்குதல், மதகு நீர், ஒழிவு, தங்கும் பலகை
 • ம இனம் – 6
  மா, மீ, மு, மே, மை, மோ
  மா – பெரிய, நிலம், விலங்கு, மாமரம்
  மீ – மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு
  மூ – மூப்பு (முதுமை), மூன்று
  மே – மேல், மேன்மை
  மை – கண்மை (கருமை), இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்.
  மோ – முகர்தல்
 • த இனம் – 5
  தா, தீ, தூ, தே, தை
  தா – கொடு, குறை, கேடு, குற்றம், பகை
  தீ – நெருப்பு, இனிமை, அறிவு, இடம்
  தூ – வெண்மை, இறைச்சி, பறவை இறகு
  தே – கடவுள்
  தை – தமிழ்மாதம், தையல், திங்கள்
 • ப இனம் – 6
  பா, பீ, பூ, பே, பை, போ
  பா – அழகு, பாட்டு, நிழல்
  பீ – பவ்வீ
  பூ – மலர், சூதகம்
  பே – அச்சம், நுரை, வேகம்
  பை – கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை
  போ – செல்
 • ந இனம் – 7
  ந, நா, நி, நீ,நே,நை,நோ
  ந – இன்மை, அன்மை
  நா – நாக்கு, தீயின் சுவாலை
  நி – செலுத்தலென்னும் பொருட்டு
  நீ – நீ
  நை – வருந்து, இகழ்ச்சி
  நோ – நோவு, துன்பம், வலி
 • க இனம் – 7
  க, கா, கீ, கு, கூ, கை, கோ
  க – வான், பிரமன், தலை
  கா – சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்
  கீ – கிளிக்குரல்
  கு – பூவுலகு
  கூ – பூமி, ஏவல், கூழ், கூவு
  கை – உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள், கைமரம்
  கோ – வேந்தன், தலைவன், இறைவன், அரசன்
 • வ இனம் – 4
  வா,வீ,வை,வெ
  வா – வருகை
  வீ – மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு
  வை – வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்
  வெ- வவ்வுதல் அல்லாது கெவ்வுதல் (ஒலிக்குறிப்பு)
 • ச இனம் – 6
  ச, சா, சீ, சு, சே, சோ
  ச – கூடிய
  சா – சாதல், சோர்தல், பேய், மரணம்
  சீ – வெறுப்புச்சொல் அல்லது நீத்தல், சீழ், சளி, இலக்குமி, அடக்கம், நித்திரை
  சு – நன்மை
  சே – சிவப்பு, எருது, அழிஞ்சல் மரம்
  சோ – மதில், அரண்
 • யா – 1
  யா – ஒரு வகை மரம், யாவை, அசைச்சொல்
 • நொ -1
  நொ – வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு
 • து-1
  து – உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்

  ஆக ஓரெழுத்து ஒரு மொழி மொத்தம் 53 ஆகும்.