Cinema News Specials Stories

2022 ஆம் ஆண்டின் சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள்!

இந்த வருஷம் நம்ம தமிழ் சினிமா ரொம்ப செழிப்பா இருக்க காரணம் 2022-ல ரிலீஸ் ஆன திரைப்படங்கள் தான், அதுல நம்ம மனசுக்கு நெருக்கமான 10 தமிழ் படங்கள சொல்றேன். இந்த 10 படங்களுமே நாம எத்தனை வாட்டி பார்த்தாலும் Bore அடிக்காத திரைப்படங்கள் தான். வெளியான தேதிப்படி வரிசையா சொல்றேன்.

1. இந்த படத்தோட அப்டேட்-காக நாம என்னலாம் பண்ணோம் யார்கிட்டலாம் கேட்டோம். இன்னும் சொல்ல போனா அப்டேட்-ன்ற வார்த்தைக்கு ஒரு அர்த்தம் கொடுத்த திரைப்படம் தான் நம்ம அஜித் குமார் நடிப்புல H வினோத் இயக்க போனி கபூர் தயாரிச்சு வெளிவந்த திரைப்படம் வலிமை. பிப்ரவரி 24 ரிலீஸ் பண்ணிருந்தாங்க. இந்த திரைப்படத்துக்கு நாம எவ்ளோ நாள் காத்திருந்துருப்போம், நம்மளோட காத்திருப்புக்கு பலனா தான் இந்த படத்தோட வெற்றியை நாம கொண்டாடுனோம்.

2. அடுத்ததா மார்ச்ல ஒரு அசத்தலான திரைப்படம் வெளியிட்ருந்தாங்க, இந்த படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே இந்த படத்தோட பாட்டுலாம் ஹிட், இயக்குநர் பாண்டி ராஜ் அவர்கள் எழுதி இயக்க சூர்யா, ப்ரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய் நடிப்புல வெளி வந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தான் அது. இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் நடிகர் சூர்யா அவர்களோட கூட்டணி வெற்றிக் கூட்டணியாகவே அமைஞ்சிடுஞ்சு.

3. எதற்கும் துணிந்தவனோட வெற்றியை தொடர்ந்து ஏப்ரல் மாதமும் ஒரு வெற்றித் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொடுத்துருந்தாங்க. அது தான் Beast திரைப்படம். இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருத், நம்ம தளபதி விஜய் ஒன்றிணைந்த இந்த திரைப்படம் Box Office Hit கொடுத்திருந்துது. ஏப்ரல் 13 ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் Theatre-ல பல நாட்கள் Housefull-ஆ இருந்தது குறிப்பிடத்தக்கது.

4. அடுத்து அதே மாதம் எல்லாருக்கும் பிடித்த ஒரு காதல் திரைப்படம் வெளிவந்துச்சு. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்புல, நயன்தாரா கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்துல உருவான காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படம் எல்லாருக்குமே பிடிக்க காரணம் இந்த படத்தோட கதைக்களம். ஏப்ரல் 28 ரிலீஸ் ஆன இந்த படம் பெரிய வெற்றி பெற்று படத்துல வேலை பார்த்த எல்லாருக்கும் சந்தோஷத்தையும் பேருக்கேத்த மாதிரி ரெண்டு மடங்கா கொடுத்துச்சு.

5. அடுத்ததா ஆர்பாட்டமே இல்லாம வந்து கலக்கு கலக்குனு கலக்குன நம்ம சிவகார்த்திகேயனோட டான் திரைப்படம் தான். மே 13 ரிலீஸ் பண்ணிருந்தாங்க. இந்த படத்த குடும்பமா பாத்து கண்கலங்காம வந்தவங்க ரொம்ப கம்மி பேருதான். டான் படத்துல கல்லூரில நடக்குற ஒரு சண்ட மட்டும் தான் இருக்கும், மத்தபடி ரொம்ப ஆக்ரோஷமான படம் இல்ல.

Sivakarthikeyan

நம்ம கனவு என்னனு தேடுற வயசுல நம்ம சிவகார்த்திகேயன் ரொம்பா அழகா நடிச்சு நம்மயும் நமக்கும் நம்ம அப்பாக்கும் நடுல இன்னும் ஒரு படி அதிக நெருக்கத்த உணர வச்சிருப்பாரு. அப்படிப்பட்ட ஒரு மேஜிக்கல் திரைப்படம் தான் டான். இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இந்த படத்துக்கு அப்பறம் நம்ம எல்லாருக்கும் பரிட்சயமான இயக்குநரா மாறியிருக்காரு.

6. அடுத்த படத்துல, நம்ம ஹீரோக்கு ஆரம்பிக்கலாங்ளா அப்படின்ற ஒரே ஒரு வார்த்தைய மட்டும் தான் Dialogue-ஆ First Half-ல வச்சிருப்பாரு நம்ம லோகேஷ் கனகராஜ். நா சொன்ன உடனே நீங்க கண்டுபிடிச்சிருப்பிங்க. ஜூன் 9 ரிலீஸ் ஆன நம்ம உலகநாயகன் நடிச்ச விக்ரம் திரைப்படம் தான். LCU-னு லோகேஷ் கனகராஜ் தனக்கு ஒரு அடையாளத்த இந்த படத்துல உருவாக்குனாரு. LCU அப்படினா லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்.

இந்த படத்துக்கும் நம்ம ராக் ஸ்டார் அனிருத் தான் மியூசிக். விக்ரம் படம் நம்ம தமிழ் சினிமால ரொம்ப நாள் கழிச்சி ஓடுன ஒரு Mega Blockbuster திரைப்படம். சுமார் 500 கோடிக்கு மேல Collection எடுத்த திரைப்படம். இந்த படத்துல சூர்யாவ ரோலெக்ஸ் கதாபாத்திரத்துல பாக்கும்போது தியேட்டரே அதிர்ந்துச்சுனு தான் சொல்லனும்.

7. விக்ரம் படத்துக்கு பிறகு தியேட்டர்ல கொண்டாடுற மாதிரி திரைப்படம் வர கொஞ்சம் லேட் ஆச்சு. லேட் ஆனாலும் லேட்டஸ்டா வந்தாரு திருச்சிற்றம்பலம். ஆகஸ்ட் 18, மித்ரன் ஜவஹர் இயக்கத்துல, தனுஷ், அனிருத் காம்பினேஷன்ல ரிலீஸ் ஆச்சு. இந்த படத்துல நடிச்ச எல்லாருமே நம்ம மனசுக்கு ரொம்ப நெருக்கமான கதாபாத்திரங்களா மாறிட்டாங்கனு தான் சொல்லனும். சீனியர் பழம் கதாபாத்திரத்துல நடிச்ச நம்ம இயக்குநர் பாரதிராஜா, அப்றம் அப்பா கதாபாத்திரத்துல நடிச்ச நம்ம பிரகாஷ் ராஜ், ஷோபனா கதாபாத்திரத்துல நடிச்ச நித்யா மேனன்னு எல்லாருமே ரொம்ப அற்புதமா நடிச்சிருந்தாங்க.

மித்ரன் ஜவஹர் என்ன விஷயங்கள மனசுல வச்சு எழுதினாரோ அது எல்லாமே படத்துல ஒர்க் ஆகிருந்துது. மொத்தமா திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றி கொண்ட வேங்கை தான். இந்த படத்தோட வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னோட Hat Trick வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

8. தனுஷ் அவர்களுக்கு திருச்சிற்றம்பலம் எப்படி வெற்றி கொடுத்துதோ அதே மாதிரியான இன்னொரு திரைப்படம் தான் நானே வருவேன். நம்ம இயக்குனர் செல்வராகவன், தனுஷ் , யுவன் இவங்க ஒன்னு சேர்ந்தா அந்த இடம் எப்படி இருக்கும்னு நாம 2006-ல Release ஆனா புதுப்பேட்டை, அதுக்கு முன்ன காதல் கொண்டேன் படங்கள்-லயே பாத்தோம். அதே மாதிரி இந்த படத்துலயும் இந்த Combination சூப்பரா ஒர்க் அவுட் ஆகிருந்துது.

Image

நம்ம தனுஷ் கொடி திரைப்படத்துக்கப்பறம் எதுலயும் டபுள் ஆக்ஷன் பண்ணல. நானே வருவேன் படத்துல டபுள் ஆக்ஷன் மட்டுமில்லாமே அதுல ஒரு கதாபாத்திரத்துல வில்லனாவும் பண்ணிருந்தாரு. இந்த படம் செப்டம்பர் 29 வெளிவந்து ஹிட் ஆச்சு.

9. நானே வருவேன் திரைப்படம் ரிலீஸ் ஆன அடுத்த நாளே செப்டம்பர் 30 ரிலீஸ் பண்ண திரைப்படம் தான் நம்ம மணிரத்னம் AR ரஹ்மான் கூட்டணில வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1. இந்த படத்துல நம்ம தமிழ் திரையுலகத்தை சேர்ந்த பலர் நடிச்சிருக்காங்க.

குறிப்பா சொல்லனும்னா நம்ம நடிகர் கார்த்தி, சீயான் விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் இவங்கலாம் அவங்களோட நடிப்பு திறமைய நமக்கு காட்டி நம்மள மயக்கவச்சிட்டாங்கனு தான் சொல்லணும் . இந்த படம் தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்த்த ஒரு திரைப்படம். வரலாற்று சிறப்புமிக்க இந்த படத்துக்காக நம்ம தமிழ் சினிமா கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

10. Last But Not Least நவம்பர் 4 வெளிவந்த லவ் டுடே திரைப்படம். கோமாளி திரைப்படத்தோட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் எழுதி இயக்கி நடிச்சு நம்ம யுவன் சங்கர் ராஜா இசைல ரிலீஸ் ஆனா படம் தான் லவ் டுடே. இதே பெயர் கொண்ட படத்தை தளபதி ரசிகர்கள் மறந்திட மாட்டாங்க, 1997 தளபதி விஜய், சுவலட்சுமி நடிப்புல வெளிவந்துருந்துச்சு.

இப்போ இந்த 2k காலத்துல வெளிவந்த இந்த லவ்டுடே 2K கிட்ஸ்க்கு மட்டும் இல்ல எல்லாருக்குமே ரொம்ப புடிச்சிருந்துச்சு. நம்ம பிரதீப் ரங்கநாதன் ஒரு லட்சியவாதி. நெனச்சா என்ன வேணா சாதிக்கமுடியும்னு இந்த படத்துல நிரூபிச்சிட்டாருனு தாங்க சொல்லணும். இந்த படத்துல நடிச்ச எல்லாருக்குமே சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கு. அதனாலயே இந்த படம் ஒரு வெற்றி படமா உருவெடுத்துருக்கு.

Article By RJ Jae

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.