Specials Stories

9.58 நொடிகளில் உலகை வென்ற போல்ட் !!

திரைப்படங்கள்ல Iron Man, Spiderman, Captain America-னு நிறைய கதாபாத்திரங்கள் Super Powers ஒட இருக்குற மாதிரி, நிஜ வாழ்க்கையிலையும், பலருக்கு பலவிதமான சக்திகள் இருக்கு. ஆனா, அது எல்லாம், ஏதோ ஒரு நொடில கிடைக்கிற விஷயம் இல்லைங்க. அதுக்காக அவங்களோட வாழ்க்கையே ஒரு பயிற்சி களம், போர்க்களம்ன்னு மாத்திக்குவாங்க.

அப்படி தாங்க இவரும் ‘மின்னல் மனிதன்’. இந்த பட்டம் பெற தன்னோட வாழ்க்கையில பல ஆண்டுகளைப் பயிற்சி, பயிற்சி, பயிற்சின்னு அதுக்காகவே அற்பணிச்சு உலகத்தையே பிரமிக்க வைக்குற சாதனை செஞ்சு இந்த பட்டத்த வாங்கி இருக்காரு. அவர் தாங்க ஜமைக்கா நாட்டு விளையாட்டு வீரர் உசைன் போல்ட். உலகத்துல எங்க போனாலும் திறமைக்கு மதிப்பு உண்டுன்றது உண்மைன்னு நிரூப்பிக்க இன்னோரு சான்று இவரோட வெற்றி.

Athletics-Who can fill the 'Bolt-hole'? | Reuters

ஒரு குட்டி தீவு, பேரு ஜமைக்கா. உலக அரங்குல அந்த நாட்டோட பேர பிரபலபடுத்துன சிலர்ல உசைன் போல்டும் ஒருவர். இவர் தடகள விளையாட்டுகள்ல நின்னு ஜெயிச்சி பல சாதனைகள் படைச்சு இருக்காரு. இவர தனிக்காட்டு ராஜான்னு பெருமையா சொல்லுவாங்க. அவரோட இந்த சாதனைய உலகம் தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி அவரோட அயராத உழைப்பு இருக்கே, என்ன சொல்ல? சாப்பிட கூட காசு இல்லாம பல கஷ்டங்கள் பட்டு இருக்காரு.

Chris Gayle, Andre Russell மாதிரி ஜமைக்கா நாட்டுல இருந்து உலக அளவுல பிரபலம் அடைஞ்ச கிரிக்கெட் வீரர்களா ஆகணும்ன்னு இளைஞர்கள் பலரும் கனவு கண்டுக்கிட்டு இருக்கும் போது, உசைன் போல்டும் கூட பள்ளிக்கூட காலத்துல தன்னோட உத்வேகத்தையும், திறமையையும் கிரிக்கெட்ல வெளிப்படுத்திக்கிட்டு இருந்தாரு. ஒரு முறை அவர் பங்கேற்ற தடகள போட்டிய பார்த்த ஆசிரியர் ஒருவர், அவரோட உணவுக்கு ஒரு வழி செய்றதா சொல்லி தடகள விளையாட்டுகள்ல பங்கேற்க வைச்சாரு.

உசைன் போல்டும் ஆர்வத்தோட பங்கேற்று முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றார். அதுக்கு பிறகு நடந்தது எல்லாமே வரலாறுங்க. 300 போட்டிகள்ல தொடர்ந்து வெற்றி, வெற்றி, வெற்றி தாங்க. சின்ன சின்ன போட்டிகள்ல தொடங்கி, சர்வதேச அளவிலான போட்டிகள் வரை வெற்றி பெற்று வீடு நிறைய கோப்பைகள் குவிய, 1996வது வருஷம் அட்லாண்டா ஒலிம்பிக்ஸ்-ல மைக்கேல் ஜான்சனால பின்னுக்கு தள்ளப்பட்டார்.

ஆனா, அதுக்கு பிறகு அவர் எடுத்த விஷ்வரூபம் இருக்கே… 15 வயசுல சர்வதேச ஜூனியர் தடகளத்துல 200 மீட்டரை 20.61 நொடிகள்ல கடந்து உலக சாதனை. இந்த சாதனைய அவர் நிகழ்த்தும் போது அரங்கம் முழுவதும் போல்ட் போல்ட் லைட்னிங் போல்ட்ன்னு இடி முழக்கம் போல ஒலிச்சுது.

ஆனா 2004 முதல் 2006 வரை அவரோட வாழ்க்கையில ஒரு பெரிய பிரச்சனை, அவர ஓட விடாம செஞ்சது. ஆனா, அது திடீர்ன்னு உருவான பிரச்சனை இல்லங்க. பிறவியிலயே அவருக்கு ஸ்கோலியோசிஸ்-ன்ற நெளிமுதுகு நோய் இருந்து இருக்கு. இந்த பிரச்சனையால 200 மீட்டர் தடகள ஓட்டத்துல கூட ஓட முடியாம கஷ்டப்பட்டாரு.

Usain Bolt - Wikipedia

இதுக்கு என்ன தான் தீர்வுன்னு யோசிக்கும் போது அவரோட பயிற்சியாளர் 100 மீட்டர் தடகள ஓட்டங்கள்ல பங்கேற்கலாம்ன்னு யோசனை சொல்ல, 2007 ஜமைக்கன் சாம்பியன்ஷிப்ல கலந்து கொண்டு 10.03 நொடிகள்ல ஓடி வெற்றி பெற்றார். அதுக்கு பிறகு ‘போல்டு கால வைச்சா அது ராங்கா போறதில்ல’, இந்த பாட்டு தாங்க பாடல, ஆனா எல்லா விளையாட்டு போட்டிகள்லையும் தங்கம் மெடல் தான்.

2008 பீஜீங் ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர், 200 மீட்டர், 4×100 மீட்டர்ல தங்க மெடல். வேற லெவல். இதுக்கு எல்லாம் மேல 100 மீட்டர் ஓட்டத்துல அவரோட சாதனைய அவரே முறியடிச்சது தாங்க highlight. 2009 ஆகஸ்ட் மாசம் பெர்லின்ல நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டில 100 மீட்டர் ஓட்டத்த வெறும் 9.58 நொடிகள்ல ஓடி தெறிக்கவிட்டாரு.

இப்படி எல்லா போட்டிகள்லையும் வெற்றி பெற்று இருக்குறாரு உசைன் போல்ட். இது வரைக்கும், மொத்தம் 8 ஒலிம்பிக் தங்கங்கள் வென்று இருக்காரு. ”என்னால என்ன செய்ய முடியும்ன்னு தெரியும், அதுனால நான் என்ன சந்தேகப்படுறதே இல்ல” இந்த ஒரு விஷயத்த உசைன் போல்ட் மனசுல வைச்சி இருக்குறதால தாங்க, அவர் சாதனைகளை சரித்திர பொன்னேட்டுகள்ல பதிச்சிக்கிட்டே இருக்காரு.

இவர போல நாமும் சிந்திக்கலாம், தலை நிமிர்ந்து, முதல் அடி எடுத்து வைக்கலாம். துறைகள் மாறலாம், ஆனா துணிச்சல் ஒண்ணுதான்.

உசைன் போல்ட் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By : RJ Bavya