Cinema News Specials Stories

வடசென்னை-2 ரிலீஸ் எப்போ?!

#VadaChennai2 இந்த ஹேஷ்டேக் தான் இப்போ சோசியல் மீடியாக்கள் முழுக்க ட்ரெண்டிங். என்ன காரணம்னு தெரியுமா?

Recent-ஆ வெளியான பா.ரஞ்சித்தோட நேர்காணல்ல சார்பட்டா பரம்பரை பார்ட்-2 வர வாய்ப்பு இருக்குமானு கேட்டுருக்காங்க. அதுக்கு அவர் ஆமா, அது ஒரு மிகப்பெரிய படமா இருக்கும் அப்டினு சொல்லியிருக்காரு. இதனால சார்பட்டா பரம்பரையோட இரண்டாவது பாகம் வரப்போகுதுனு உறுதியான செய்தி வெளியாகி வைரலாச்சு. ஆனா அது சார்பட்டா பரம்பரை படத்துக்கு முன்னாடி நடக்குற கதையா, இல்ல பின்னாடி நடக்கப் போற கதையா அப்படிங்குறத பத்திலாம் எதுவுமே சொல்லல. மொத்தத்துல சார்பட்டா பரம்பரை ஒரு மிகப்பெரிய படமா உருவாகிட்டு இருக்குங்குறது மட்டும் இப்போதைக்கு Confirm.

இப்போ இந்த செய்திய பாத்த தனுஷ் ரசிகர்கள் எல்லாம் வடசென்னை படத்தோட இரண்டாம் பாகத்த பத்தி சமூகவலைதளங்கள்ல பேசி ட்ரெண்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. தனுஷ் நடிப்பில் வரக்கூடிய இரண்டாம் பாகங்களான ஆயிரத்தில் ஒருவன், வட சென்னை இந்த 2 படங்களோட அறிவிப்பும் முன்னாடியே வெளியாகியிருந்தாலும் அதுக்கு அப்புறமா அத பத்தின செய்திகள் எதுவும் இன்னைக்கு வரைக்கும் வெளிவரல.

வாத்தி படத்தோட Audio Launch-ல கூட தனுஷ், வட சென்னை 2ஆம் பாகம் நிச்சயம் வரும். ஆனா எப்ப வரும்னு தான் தெரில. வெற்றி மாறன் ஆபிஸ்ல இந்த சத்தம் கேக்கட்டும்னு சொல்லிருப்பாரு. அதே மாதிரி ஐஸ்வர்யா ராஜேஷ் கூட சமீபத்துல ஒரு பேட்டில நிச்சயம் வடசென்னை-2 வரும் வெற்றிமாறன் சார் தான் முடிவு பண்ணனும்னு சொல்லிருக்காங்க. அடுத்து ஆண்ட்ரியா, அடுத்தடுத்து வடசென்னைல நடிச்ச நடிகர்கள்னு எல்லாரும் சொல்ல இதே டயலாக்க சொல்ல ஆரம்பிச்சுருவாங்க போல.

இந்த சூழ்நிலைல எதிர்பாராம வெளியான சார்பட்டா பரம்பரை 2ஆம் பாகம் பத்தின அறிவிப்புனால, தனுஷ் ரசிகர்கள் எல்லாம் வடசென்னை 2ஆம் பாகம் பத்தி பேச ஆரம்பிச்சு தொடர்ந்து பேசிட்டு இருக்காங்க. இத்தனைக்கும் 2ஆம் பாகத்துக்கு தேவையான 40 நிமிஷம் ஏற்கனவே வடசென்னை முதல் பாகம் சூட்டிங் பண்ணப்போவே எடுத்து வச்சிருக்குறதாவும் ஆல்ரெடி சொல்லியிருக்காங்க.

அதுமட்டுமில்லாம இன்னொரு இண்டர்வியூல வடசென்னை படத்த தொடர்ந்து எடுத்துட்டு இருந்த சமயத்துல வெற்றிமாறன், எனக்கு இதுலருந்து ப்ரேக் வேணும்னு கேட்டதாவும், வேற கதைக்களத்துல கொஞ்ச நாள் வேலை பார்க்கனும்னு கேட்டதாவும் தனுஷ் சொல்லியிருக்காரு. அதனால நான் அதுக்கு ஒத்துகிட்டேன்.

வெற்றிமாறன் மாதிரியான வித்தியாசமான சினிமா இயக்குநர்கள் ரொம்ப வித்தியாசமானவங்க. சினிமாவ நேசிச்சு பண்றவங்க. அவங்க அந்த மாதிரி கேட்ட சமயத்துல ஒரு நடிகனா, சகோதரனா அதுக்கு ஒத்துழைக்க வேண்டியது என்னோட கடமை. அவர் சீக்கிரம் வடசென்னை 2 பண்ணுவாரு. மொத்த டீமும் அதுக்காக காத்திருக்கோம்னும் சொல்லியிருக்காரு.

இப்படி எல்லா டீடெய்லும் தெரிஞ்சு வச்சுகிட்டு வடசென்னை 2 அறிவிப்பு எப்போ வெளிவரும்னு வருஷக்கணக்கா காத்திருந்த வெற்றிமாறன், தனுஷ் ரசிகர்கள் எல்லாரும் இப்போ கொதிச்செழுந்து சீக்கிரமே படத்த ஆரம்பிங்கனு சொல்லிட்டு இருக்காங்க.

சார்பட்டா பரம்பரை 2ஆம் பாகம் வந்தா நான் என்னடா பண்ணடா பண்ண முடியும் அப்படினு வெற்றி மாறன் சொல்ற மாதிரி மட்டுமில்லாம இன்னும் இது சம்மந்தமா நிறைய மீம்ஸும் இப்போ வைரலாகிட்டு இருக்கு.

விட்டா வெற்றிமாறன் ஆபிஸுக்கே போய் அப்டேட் கேப்பாங்க போல. பாப்போம். என்னைக்கு வடசென்னை 2 அறிவிப்பு வருதுனு… அப்படி சீக்கிரம் அறிவிப்பு வரனும்னா இந்த வீடியோவ வெற்றிமாறன் கிட்ட கொண்டு போய் சேர்த்துடுங்க. மறக்காம வடசென்னை, வடசென்னை 2 பத்தின உங்க கருத்துக்கள கமெண்ட்ல சொல்லுங்க.

Article By MaNo