Specials Stories

கேரளாவில் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் Water Bell முறை!

‘நீரின்றி அமையாது உலகு’ அப்படினு சொல்லுவாங்க. தண்ணீர் நம்ம உலகத்துக்கே அடிப்படையான விஷயம். ஒரு நாளைக்கு நீங்க எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்குறீங்க? நம்ம உடம்பு மேல நமக்கே அக்கறை இல்லை… இதெல்லாம் சரியா ?

சரி விஷயத்துக்கு வரோம். பள்ளி மாணவர்களுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க கேரள அரசு தண்ணீர் மணி எனும் திட்டத்தை கொண்டுவருகிறது. கேரள பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும்
வகையில் ஒரு நாளைக்கு மூன்று முறை தண்ணீர் மணியை அடிக்க வேண்டும் என்பது பள்ளிகளுக்கு விதியாக மாற்றிள்ளது.

பள்ளி மாணவர்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்க கேரள அரசு இந்த நடவடிக்கை எடுக்கிறது. இந்த மணி அடித்தால் மாணவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். நீரேற்றத்துடன் இருக்க மாணவர்களுக்கு நினைவூட்டுவதற்காக ஒரு நாளைக்கு மூன்று முறை மணி அடிக்கும்.

கேரளாவின் முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் எஸ் சுரேஷ் குமார் செய்தியாளர் சந்திப்பில், கேரள அரசு பள்ளிகளில் தண்ணீர் மணி அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதிப்படுத்தினார். தண்ணீர் மணியின் நேரங்கள் மற்றும் திட்டத்தின் படி, தண்ணீர் மணி ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலை 10:35 மணிக்கு முதல் மணியும், மதியம் 12 மணிக்கு இரண்டாவது மணியும், பிற்பகல் 2 மணிக்கு மூன்றாவது மணியும் அடிக்கப்படும்.

தண்ணீர் இடைவெளி 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும். அதற்குள் மாணவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குறைவாக உட்கொள்வதால் மக்கள் மத்தியில் நோய்கள் அதிகரித்து வருவதால் தண்ணீர் மணி எனும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாவட்டம் உப்பினகடியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளி ஏற்கனவே இந்த செயல்முறையைத் தொடங்கியுள்ளது மற்றும் மாணவருக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை 30 நிமிடங்கள் தண்ணீர் இடைவேளையை வழங்கி வருகிறது. இது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், கல்லூரிகள், நிறுவனங்கள் என அனைத்து இடங்களில் இருப்பவர்களுக்கும் இதை செயல்முறைப்படுத்த வேண்டும்.

உடம்பு முக்கியம் இல்லையா? தண்ணிக்கு நீங்களே ஞாபகம் வச்சி ALARM வைக்கலாம்! நேரத்துக்கு தண்ணி குடிக்குறது நம்ம கட்டாயம்னு அத அவசியமாக்கனும். இது குறித்து உங்கள் கருத்துக்களை COMMENTல சொல்லுங்க.

அப்றம் இன்னொரு விஷயம் தண்ணீர் கிடைக்குதே-னு அதை WASTE பண்ணாதீங்க. நம்ம அடுத்த தலைமுறைக்கு அதை சேமிச்சு வைக்கணும் என்பதை மறக்க வேண்டாம். உன் உயிரை சேமிக்க வழி இருந்தால் என்ன செய்வாயோ ?
அதையே உலகிற்கு செய், உலகின் உயிர் தண்ணீர்!

Article By Tamilanda Ramesh