Specials Stories

ஹாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் – Will Smith !!!

நம்ம எல்லாருக்கும் இவர தெரியும், ஆனா அவர் நமக்கு அறிமுகமான விதம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒரு Super Hero-வா, ஒரு Secret Agent-ஆ, ஒரு Genie-யா, ஒரு தந்தை கதாபாத்திரமா இப்படி பல விதங்கள்ல நமக்கு அறிமுகமானவர், இவர் பெயர் Will Smith.

அவருக்கு இந்த வருஷம் 53 வயசு முழுமையாகுது, நம்பவே முடியல! நீங்க நம்பலனாலும் அதாங்க நெசம். அவரோட புகைப்படங்களைப் பார்க்கும்போதே அது உங்களுக்கு புரியும். இவரோட பையனும் கூட ஒரு நடிகர் தாங்க. நம்ம எல்லாருக்கும் Karate Kid-ஆ அறிமுகமான Jaden Smith தான் அது.

Independence Day 2: Why Will Smith Isn't in the Sequel | Time

Will Smith அமெரிக்காவுல ஒரு Rapper-ஆ தன்னோட வாழ்க்கைய ஆரம்பிச்சவரு, இப்போ ஒரு ஹாலிவுட் நடிகரா, தயாரிப்பாளரா உருமாறி அவருக்குனு ஒரு தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்காருன்னு தான் சொல்லனும். அதுக்கு காரணம் அவரோட கடின உழைப்பும், அந்த உழைப்பை எப்பவுமே கை விடாம இருக்குறதும் தான். அதுனால தான் தன்னோட 18 வயசுலயே ஒரு “Millionaire”-ஆ ஜொலிச்சாரு.

1990-கள் நம்ம Will Smith-க்கு ஒரு பொற்காலாமா இருந்துச்சு-னு தாங்க சொல்லணும். High School படிக்கும் போது இவருக்கு Prince Charming-ன்னு ஒரு செல்ல பெயர் இருந்ததாம், அத கொஞ்சம் மாத்தி The Fresh Prince of Bel-Air அப்புடிங்குற ஒரு தொலைக்காட்சி தொடர்ல நடிச்சாரு. 1996ல இந்த தொடர் முடியும் போது இவருக்கு Hollywood கதவுகள் திறந்தது. ஹாலிவுட்-ல தன்னோட கால் தடத்தை ரெண்டு Blockbuster திரைப்படங்கள் மூலமா பதிச்சாரு, அதுதான் The Independence Day (1996) மற்றும் Men In Black (1997). இதுல Men In Black, Will Smith- ஓட Trademark-னு கூட சொல்லலாம். அந்த “Agent-J” கதாபாத்திரத்தை அவர விட வேற யாராலையும் சிறப்பா, நகைச்சுவை கலந்த Action காட்சிகள்ல நடிச்சிருக்க முடியாது.

அங்க ஆரம்பிச்சு 2001-ம் ஆண்டு “Ali” திரைப்படம் மூலமா நம்ம எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச குத்துசண்டை வீரரான “Mohammad Ali”-ஆ நடிச்சு, அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து, நம்ம கண்ணு கிட்ட கொண்டு வந்து நிறுத்துனாரு. இந்த திரைப்படத்துக்காக Academy Awards மற்றும் Golden Globe Awards-ல சிறந்த நடிகரா Nominate செய்யப்பட்டாரு.

நம்ம Will Smith நடிச்சதுலையே காலத்தால அழிக்க முடியாத, மேலும் இனி வரும் தலைமுறைகள் கூட சலிக்காம திரும்பத் திரும்ப ஒரு படம் பார்த்து கண்ணீர் விட முடியும்-னா, அது 2006-ல வெளிவந்த “The Pursuit of Happiness”-தாங்க.

Chris Gardner அப்புடிங்குற ஒரு தனி நபரோடா வாழக்கை பயணத்த, அந்த கதாபாத்திரமாவே வாழ்ந்து, “நம்ம வாழக்கை ஒரு வழியை அடைச்சா; இன்னொரு வழியை திறக்கும்”-னு புரிய வச்சது மட்டும் இல்லாம, ஒரு தந்தை எவ்ளோ கஷ்டத்துல இருந்தாலும் தன் மகனை எப்படியாச்சும் சந்தோஷமா வளர்க்கணும்-னு உதாரணம் காமிச்சு நம்ம மனச உறைய வச்சிட்டாருங்க. அது படம் இல்ல நம்ம எல்லாருக்குமான பாடம்.

Will Smith film departs Georgia over voting restrictions | PBS NewsHour

அதுவும் கிளைமாக்ஸ் காட்சில கண்ணீரோட அவரு கூட்டத்துல கை தட்டும் போது, நம்மள அறியாம அதே கண்ணீரோட நாமளும் கை தட்டுவோம். ஏதோ நம்மலே ஜெயிச்ச மாதிரி ஒரு உணர்வு. இந்த படத்துக்காக சிறந்த நடிகர் விருதும் கிடைச்சது Will Smith-க்கு. அத விட சிறப்பு என்னனா, இந்த காட்சில inspire ஆகி சில இயக்குனர்கள் தங்களோட படத்துல இந்த காட்சிய பயன்படுத்தி இருக்காங்க.

இப்படி Will Smith நம்மள சிந்திக்க தூண்டுற கதைகளை மட்டும் Select பண்ணி நடிக்கலைங்க, விழுந்து விழுந்து சிரிக்கவும் வச்சிருக்காரு, 1995-ல வெளிவந்த “Bad Boys” திரைப்படம் Action கலந்த காமெடி-ஓட நம்மள ஒரே அடியா குதூகலிக்க வைத்தது.

Make Will Smith great again! | Collateral Beauty | The Guardian

இப்படி இவர பத்தி நிறைய விஷயங்கள் சொல்லிக்கிட்டே போகலாம். அமெரிக்காவுல தொடர்ச்சியா 8 Blockbuster படம் கொடுத்த ஒரே நடிகர் நம்ம Will Smith-தாங்க. ஒவ்வொரு படமும் வசூல்-ல மில்லியின்களை சம்பாதிச்சுது.

அந்த மில்லியன்களோட நம்ம மனங்களையும் கூடவே சேர்த்து சாம்பாதிச்சுது. இந்த அன்போட நடிகர் Will Smith-க்கு சூரியன் FM-ன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • Article by RJ Karthik