இந்த உலகம் தோன்றியதிலிருந்து பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் தோன்றியுள்ளன. அதில் பல உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியடைந்து காலத்திற்கேற்ப தனது தகவமைப்புகளை மாற்றிக் கொண்டு தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றன.
அதே சமயம் பல உயிரினங்கள் உலகத்தில் நிகழ்ந்த பல்வேறு இயற்கை மற்றும் செயற்கை மாற்றங்கள் காரணமாக அழிந்தும் போயுள்ளன. மேலும் இதுவரை மக்கள் பார்த்திடாத புதிய உயிரினங்களும் அவ்வப்போது கண்டறியப்பட்டு வருகின்றன.
அப்படி புதிதாக கண்டறியப்பட்ட நாம் பார்த்திடாத சில புதிய உயிரினங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
- இப்போது நாம் பார்க்கும் பட்டாம்பூச்சியின் இறகுகள் கண்ணாடி போன்று காட்சியளிக்கக் கூடியது. எனவே இவை The glass wing Butterfly என அழைக்கப்படுகின்றன.
இது பொதுவாக வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது, இருப்பினும் மற்ற சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் வாழக் கூடியது.
- இந்த புதிய வகை நத்தை 2010 இல் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வகை பெண் நத்தைகள் கால்சியம் கார்பனேட் மற்றும் ஹார்மோன்களை தனது இணையை ஈர்ப்பதற்காக அதன் மீது வீசுகின்றன. எனவே இவை “Ninja Snails” என்று அழைக்கப்படுகின்றன.
- The striped tenrec (Hemicentetes) பாலூட்டி வகையை சேர்ந்த உயிரினமாகும். இவை மடகாஸ்கரில் வாழ்ந்து வருகிறது.
இவை பார்ப்பதற்கு தேனீ போன்று உடையணிந்த முள்ளம்பன்றியை போல் இருக்கும். அதே சமயம் வித்தியாசமான மூஞ்சுறு எலியை போன்ற தோற்றத்தையும் கொண்டிருக்கிறது.
- கண்ணாடி தவளைகள் (Glass frogs) தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டவை. இவற்றில் பெரும்பாலானவை வெளிர் பச்சை நிற முதுகுடன் காணப்படுகின்றன.
மேலும் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சில தவளைகள் கண்ணாடி போன்ற தோல் பகுதியை கொண்டுள்ளன. இதனால் இவற்றின் இதயம், கல்லீரல், வயிறு மற்றும் குடல் போன்ற உள் உறுப்புகள் அனைத்தையும் நாம் சாதரணமாகவே காணலாம்.
- Burmese Snub-Nosed Monkey… இந்த வகை குரங்குகள் முதன் முதலில் 2010 இல் தான் விஞ்ஞானிகள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குரங்குகள் மழை நாட்களில் உட்கார்ந்தபடி கால்களுக்கு இடையில் தனது தலையை வைத்துக் கொள்கிறது.
அப்படி உட்கராமல் இருந்தால் மழைநீர் அதன் மூக்கில் நுழைந்து விடுகிறது. இப்படி மழைநீர் மூக்கினுள் செல்லும் சமயங்களில் இவை தண்ணீர் வெளியேறுவதற்காக தொடர்ந்து தும்முகிறது.
- Tube-Nosed Bats – இவை 2009 இல் செய்யப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 200 இனங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டது.
இவை ஒரு வகை வெளவால் இனமாகும். மூக்கு துவாரங்கள் குழாய் போன்று அமைந்திருப்பதால் Tube-Nosed Bats என அழைக்கப்படுகிறது. மற்ற வெளவால்களைப் போல உணவின் ஒரு பகுதியாக பழங்களின் விதைகளை சாப்பிடுகிறது.
- Aye-Ayes… மடகாஸ்கர் தீவில் வாழும் தனித்துவமான உயிரினமாகும். இவை லெமூர் இனத்தை சேர்ந்த மிகச்சிறிய பாலூட்டி விலங்கு.
இந்த விசித்திரமான விலங்குகள் சிம்பன்சிகள், குரங்குகள் மற்றும் மனிதர்களுடன் தொடர்புடையவை. அய்-அய் விலங்கின் கைகளில் உள்ள நடு விரல்கள் மற்ற விரல்களை காட்டிலும் மிக நீளமானதாக இருக்கும். இது பூச்சிகளின் லார்வாக்களைப் பிரித்தெடுக்கவும் மரங்களின் பட்டைகளை உரித்தெடுக்கவும் பயன்படுகிறது.
இதே போன்று நம்மை வியக்க வைக்கும் மேலும் சில வித்தியாசமான புதிய உயிரினங்கள் குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.