இந்த உலகத்துல ஆண்களுக்கு நிகரா பெண்களும் எல்லாத்துறையிலும் சாதனை பண்ணிட்டு வராங்க. பெண்களால் சாதிக்க முடியாத ஒரு துறை அப்படினு எதுவுமே இல்லைங்கறத எல்லாரும் ஏத்துக்கிட்டாங்க.
ஆனாலும் சினிமா துறைய பொருத்தவரைக்கும் பெண்களுடைய சாதனை அப்படிங்குறது நடிப்பிலும் பாடுவதிலும் தான் இருக்கு. அதைத் தாண்டி சினிமாவுல பெண்களோட சாதனை ரொம்ப கம்மி. அதுலயும் பெண் இயக்குனர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்குதான் இந்திய சினிமால இருக்காங்க. எண்ணிக்கையில் கம்மியா இருந்தாலும் திறமையில் பெண்கள் குறைவானவங்க இல்ல அப்படிங்கறத பெண் இயக்குனர்கள் அவங்களுடைய திரைப்படத்தின் மூலமா நிரூபித்துக் காட்டியிருக்காங்க. அதில் முக்கியமான ஒருவர் சுதா கொங்கரா.
இந்திய சினிமாவின் மிகப் பெரிய இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் அவர்களிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்தார் சுதா கொங்கரா. துணை இயக்குனராக இருந்தாலும் திரைக்கதை அமைப்பதில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 2002-ல் வெளிவந்த இந்திய ஆங்கிலப் படமான Mitr My Friend.
பிறகு 2010ஆம் ஆண்டு தமிழில் துரோகி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2016-ல் தமிழ், இந்தி என்று 2 மொழிகளிலும் இறுதிச்சுற்று படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றிப் படமாக்கினார் சுதா கொங்கரா. இந்தப் படம் அவருடைய கேரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படமாய் இருந்தது.
அடுத்ததாக 2017ஆம் ஆண்டு இறுதிச்சுற்று படத்தை தெலுங்கில் குரு என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த வெற்றியை தொடர்ந்து 2020-ல் சூர்யாவை வைத்து ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கினார். உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட அந்தப் படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இப்படியாக இன்று இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் சுதா கொங்கரா. பின்வரும் நாட்களிலும் இவர் இயக்கப் போகும் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர் ‘சுதா கொங்கரா’விற்கு சூரியன் FM சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்