சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 65-வது படத்தின் பூஜை இன்று சன் TV ஸ்டுடியோவில் நடைபெற்றது. இன்று காலை முதலே பூஜை குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல பதிவுகளை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தளபதி 65-ன் பிரத்யேக பூஜை புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே தளபதி 65 குறித்த முதல் அறிவிப்பு வீடியோ வெளியான போதே, சமூக வலைத்தளங்களில் தளபதி ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர். கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலிப் குமார் தளபதியுடன் முதல் முறையாக இணையவுள்ளார். அவர் இயக்கியுள்ள டாக்டர் திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள சமயத்தில் தளபதி விஜயை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என தெரிந்ததும், கோலிவுட்டின் மொத்த கவனமும் நெல்சன் பக்கம் திரும்பியது.
தளபதி விஜயின் சமீப சூப்பர்ஹிட் படமான மாஸ்டர் திரைப்படத்திற்கு இசையமைத்த Rockstar அனிருத் தான் தளபதி 65-க்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் சன் பிக்சர்ஸ், தளபதி விஜய், நெல்சன், அனிருத் என மாபெரும் கோலிவுட் படையுடன் பிரபல நடிகை பூஜா ஹெக்டேவும் இணைந்துள்ளார்.
இன்று நடைபெற்ற பூஜையில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என ட்விட்டரில் பதிவிட்ட இவர், தான் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் தனது நினைப்பு மொத்தமும் அங்கு (பூஜையில்) தான் இருக்கிறது என பதிவிட்டுள்ளார். பூஜாவின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜயின் திரையுலக வாழ்வில் இந்த தளபதி 65 ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்பதே தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தளபதி 65 பூஜையின் பிரத்யேக புகைப்படங்களுடன் கூடிய சன் பிக்சர்ஸ்-ன் ட்விட்டர் பதிவுகளை கீழே காணுங்கள்.