தளபதி 65 திரைப்படத்தின் Update-க்காக கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்கள் மீது விழி வைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு சன் பிச்சர்ஸ் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தளபதி விஜயும் சன் பிச்சர்ஸும் இணைந்தாலே அது வெள்ளி விழா காணும் வெற்றிப்படமாக தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சர்கார் திரைப்படத்திற்கு பின் தளபதியின் 65-வது படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்கவுள்ளனர். விஜயின் 64-வது படமான மாஸ்டர் திரைப்படமே திரைக்கு வராத நிலையில் அவரது 65-வது படத்திற்கும் எதிர்பார்ப்பு எகுறியுள்ளது.
இப்படத்தில் எந்தெந்த நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர் என்ற Update-ம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (dec 10) காலையில் இருந்தே சன் பிச்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் ஒரு மெகா Update வரவுள்ளது என்பதை கூறிவந்த நிலையில், அது மாபெரும் மாஸ் update-ஆக அமைந்துள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கியுள்ள நெல்சன் தளபதியுடன் முதன் முறையாக இணைய உள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் மூன்றாவது முறையாக தளபதி விஜயின் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே கத்தி, மாஸ்டர் படங்களின் பாடல்கள் வேற லெவல் ஹிட் ஆன நிலையில் தளபதி 65-ன் பாடல்களும் வெறித்தனமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. சன் பிச்சர்ஸின் மெகா Update-ன் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.