Specials Stories Trending

திரையுலகின் தளபதி 28 !!!

தலைமுறைகளை தாண்டி திரையுலகின் தளபதியாய் திகழும் நடிகர் விஜய் சினிமாவிற்கு வந்து இன்றுடன் (dec 4) 28 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை தளபதி ரசிகர்கள் ட்ரெண்டிங் திருவிழாவாய் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன் இருந்தே தளபதி ரசிகர்களின் கொண்டாட்டம் இணையத்தில் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1992-ல் இதே நாளில் விஜய் கதாநாயகனாக நடித்த முதல் படமான “நாளைய தீர்ப்பு” வெளியானது. தன் திரையுலக வாழ்க்கையின் தொடக்கத்தில் சில தடங்கல்களையும், தோல்விகளையும் விஜய் சந்தித்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை தனது விடாமுயற்சியால் அமைத்து வந்தார்.

அவமானங்களை கடந்து, தடைகளை தகர்த்து தளபதியாக முத்திரை பதிப்பது சாதாரண விஷயம் என எவராலும் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அது அனைவராலும் எளிதில் எட்ட முடியாத உயரமாகும். அதிரடி, நடனம், காமெடி, செண்டிமெண்ட், காதல் என நடிப்பின் All in all அங்கங்களிலும் தன் அழகான நடிப்பை விஜய் வெளிப்படுத்தியுள்ளார்.

காதலுக்கு மரியாதை, லவ் டுடே, ஒன்ஸ் மோர், குஷி, பிரியமானவளே போன்ற காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து 90s-ன் காதல் நாயகனாக இருந்த விஜய் திருமலை திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே Action ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவரால் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடிக்க முடியுமா??.. என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அந்த கேள்விக்கு பதிலை சொல்லி அடித்தது தளபதியின் கில்லி திரைப்படம்.

கில்லி திரைப்படம் விஜயின் திரையுலக வாழ்க்கையில் தரமான twist-ஆக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மதுர, திருப்பாச்சி, சிவகாசி என முழு நேர ஆக்ஷன் ஹீரோவாக ஆக்ஷன் படங்களில் விஜய் நடிக்கத் தொடங்கினார். 2012-ஆம் ஆண்டு வெளிவந்த துப்பாக்கி திரைப்படம் உச்சத்திலிருந்த விஜயை இன்னொரு step உயர்த்தி Box Office King-ஆக மாற்றியது.

அதன் பின் அவர் நடிக்கும் படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று தளபதியை வசூல் மன்னனாக வலம் வர வைத்தது. “எவரும் உழைத்தால் உயந்திடலாம் என்று எடுத்துக்காட்டியது சினிமா தான்” என்ற பாடல் வரிகளுக்கு எடுத்துக்காட்டாக தளபதியின் வளர்ச்சி பார்க்கப்படுகிறது. தளபதி விஜயின் 28 ஆண்டு கால சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக #28YearsOfBeIovedVlJAY என்ற Tag-ஐ ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பிரத்யேகமாக Mash Up வீடியோக்களையும், பல Common DP-களையும் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் மேலும் பல வெற்றிப்படங்களை கொடுத்து அவரது ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என சூரியன் FM சார்பில் வாழ்த்துகிறோம்.