Cinema News Stories Trending

Instagram-ல் கெத்து காட்டிய #Valimai !!!

இரண்டு வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை திரைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் தினமும் பல பதிவுகள் பகிரப்படுகிறது. அந்த வகையில் Instagram தளத்தில் #valimai எனும் Tag-ல் ஒரு மில்லியன் பதிவுகள் பகிரப்பட்டுள்ளது.

ஒரு மில்லியன் பதிவுகள் #Valimai tag-ல் பகிரப்பட்டுள்ளதை தல அஜித் ரசிகர்கள் Instagram-ல் மட்டுமின்றி அனைத்து சமூக வலைதளங்களிலும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு சாதனைகளை சமூக வலைதளங்களில் செய்யும் தல ரசிகர்களுக்கு இது ஒரு புதுவிதமான சாதனையாகும்.

Image

சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் First லுக் மற்றும் “நாங்க வேற மாரி” Single பாடல் வெளியானதிலிருந்து படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு மேலும் ஒரு படி ஏறியுள்ளது என்றே கூறலாம். இப்படத்தை குறித்த எந்த Update-ம் வெளிவராதபோதே தல ரசிகர்கள் அவ்வப்போது #Valimai என்ற tag-ஐ trend செய்து வந்தனர்.

விரைவில் வலிமை திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தல அஜித்தை திரையில் காண இரண்டு வருடங்களுக்கும் மேல் காத்திருக்கும் ரசிகர்களுக்கு வலிமை திரைப்படம் விரைவில் திரையில் விருந்தாய் அமையும் என எதிர்பார்க்கலாம்.

https://www.instagram.com/explore/tags/valimai/

Valimai Instagram-ல் ஒரு மில்லியன் Post-களை பெற்றுள்ளதை அடுத்து டுவிட்டரில் தல ரசிகர்கள் #1MInstaPostsforValimai எனும் tag-ஐ trend செய்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வலிமை திரைப்படம் வெற்றி அடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

About the author

alex lew