Cinema News Stories Trending

வரலாறு படைத்த விஸ்வாசம் !!!

தல அஜித் நடித்து வெளிவந்த வெற்றிப்படமான விஸ்வாசம் திரைப்படத்தின் பாடல்கள் ஆல்பம் Youtube-ல் 50 கோடி View-களை பெற்று சாதனை புரிந்துள்ளது. தல ரசிகர்கள் இந்த சாதனையை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

டி.இமானின் இசையில் இப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே ரசிகர்களின் Playlist-ஐ ஆள்கிறது என்றே சொல்லலாம். இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த 7 பாடல்களின் வீடியோ version மற்றும் lyric வீடியோக்கள் இணைந்து 50 கோடி பார்வைகளை நேற்று (Nov 22, 2020) கடந்துள்ளது. குறிப்பாக இப்படத்தின் கண்ணான கண்ணே பாடலின் lyric வீடியோ 138 மில்லியன் பார்வைகளை பெற்று மெகாஹிட் பாடலாக வலம் வருகிறது.

கண்ணான கண்ணே பாடலை பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ளார். இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பொதுவாக சித் ஸ்ரீராம் பாடும் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆவது வழக்கமே. அந்த வகையில் இப்பாடலும் அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்தது. தந்தைக்கும் மகளுக்கும் உண்டான உறவை உருக உருக வர்ணிக்கும் பாடலாக இப்பாடலின் வரிகள் அமைந்திருக்கும்.

மெலடிக்கு கண்ணான கண்ணே மற்றும் வானே வானே பாடல் இருக்க, ரசிகர்களை துள்ளாட்டம் போட வைக்க வேட்டிக்கட்டு, அடிச்சித்தூக்கு, டங்கா டங்கா போன்ற பாடல்கள் விஸ்வாசம் திரைப்படத்தில் அமைந்திருக்கும். ஷங்கர் மஹாதேவன் குரலில் ஒலிக்கும் வேட்டிக்கட்டு பாடலும், இமானின் குரலில் அமைந்த அடிச்சித்தூக்கு பாடலும் பட்டி தொட்டியெல்லாம் Bumper ஹிட்டான பாடல்களாக அமைந்தது.

இப்படத்தின் இயக்குனரான சிறுத்தை சிவா-வே இப்படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளது மேலும் இப்படத்தின் ஆல்பத்திற்கு பலம். தூக்குதுறை theme என்று சொல்லப்படும் Rise Up Theme-ல் வரும் வரிகளை சிவா எழுதியிருப்பார். ஆகமொத்தத்தில் தல ரசிகர்களையும், இசை ரசிகர்களையும் திருப்தி படுத்தும் வகையில் இமானின் விஸ்வாசம் ஆல்பம் அமைந்ததே பாடல்களின் வெற்றிக்கு காரணம்.

தல அஜித்தின் வலிமை பட Update-க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த விஸ்வாசம் ஆல்பம் சாதனை ஒரு ஆறுதல் அளித்துள்ளது. தல Fans Happy அண்ணாச்சி !!!!