Cinema News Specials Stories

Ever Green Beauty த்ரிஷா!

Trisha

“I get what I want… அந்த Fire எப்பவும் எனக்குள்ள இருக்கும்” இத சொன்னது வேற யாருமில்ல Ever Green Beauty த்ரிஷா தான்.

இது எந்த அளவுக்கு உண்மைனு த்ரிஷாவோட படங்கள Rewind பண்ணி பாத்தாலே தெரியும். 1999-ல் வெளியான ஜோடி திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் த்ரிஷா. வரும் காலத்தில் சிம்ரனை போல தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரும் நடிகையாக த்ரிஷா வலம் வருவார் என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கதாநாயகியாவதற்கான கடும் முயற்சிகளின் பலனாய் 2002 ஆம் ஆண்டில் அவரது நடிப்பில் வெளியாகிறது ‘மெளனம் பேசியதே’. அழகான அத்தை மகளாய் தமிழ் ரசிகர்கள் அனைவரது மனதிலும் தடம் பதித்தார் த்ரிஷா. படம் மாபெரும் வெற்றி பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடியது. தொடர்ந்து த்ரிஷா நடித்த படங்கள் ஒரு பக்கம் வெற்றி பெற படத்தை தாண்டி பாடல்களும் மாபெரும் வெற்றியடைந்தன.

2003 ஆம் ஆண்டில் மனசெல்லாம், லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18, சாமி உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அதே சமயத்தில் ‘எனக்கு 20 உனக்கு 18’ திரைப்படம் தெலுங்கிலும் வெளியானது. வெற்றிக்குதிரையில் பயணிக்கத் தொடங்கினார் த்ரிஷா.

தொடர்ச்சியாக தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். 2004-ல் கில்லி திரைப்படமும், 2005-ல் திருப்பாச்சி, ஜி படங்களும் வெளியானது. அதே போல் தெலுங்கிலும் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கத் தொடங்கினார் த்ரிஷா.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விக்ரம், விஜய், அஜித், தனுஷ், சிம்பு என அனைவருடனும் நடித்து ஹிட் கொடுத்த கதாநாயகி த்ரிஷா. கிட்டத்தட்ட 1999 முதல் தற்போது 2022 வரை தமிழ் சினிமாவில் தனது இடத்தை அப்படியே தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

வயதாக வயதாக அழகு கூடிக் கொண்டிருக்கும் கதாநாயகிகளில் த்ரிஷாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் அறிமுகமான போது எப்படி இருந்தாரோ அப்படியே இப்போதும் இருக்கிறார். ஒரு நடிகராக நமது உடலை, தோற்றத்தை நல்லபடியாக பார்த்துக் கொள்வது தான் நமது முக்கியமான வேலை என நடிகர் விஜய் ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அது த்ரிஷாவுக்கு முற்றிலும்1 பொருந்திப் போகிறது. அதுவே அவரது வெற்றிக்கான ரகசியமாகவும் இருக்கலாம்.

2018-ல் மலையாளத்தில் வெளியான ‘Hey Jude’ மலையாளத்தில் த்ரிஷாவின் முதல் படமாகும். திரைப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். நடிப்பிற்காக பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.

அடுத்து தமிழ் சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் விரைவில் வெளியாகவுள்ள வரலாற்றுப் புனைவான பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவையனைத்தையும் தாண்டி த்ரிஷா என்றதுமே நம் தமிழ் ரசிகர்களுக்கு நினைவில் வருவது ஜெஸ்ஸி, ஜானு இந்த 2 கதாபாத்திரங்கள் தான். இந்த 2 கதாபாத்திரங்களும் தமிழ் சினிமா உள்ள வரை, காதல் உள்ள வரை கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கும் என்றால் மிகையாகாது.

த்ரிஷா அறிமுகமாகி 23 ஆண்டுகள் ஆகி விட்டது என்றால் நமக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவருக்கு இதில் ஆச்சரியம் எதுவும் இருக்காது. “I get what I want… அந்த Fire எப்பவும் எனக்குள்ள இருக்கும்” என அவர் சொன்னதை தான் இத்தனை வருடங்களில் செய்துகாட்டிக் கொண்டிருக்கிறார். இனி வரும் வருடங்களிலும் செய்து காட்டுவார்.

Ever Green Beauty த்ரிஷாவுக்கு சூரியன் FM சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By MaNo

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.