தமிழ் சினிமால ஒரு ஹீரோயின் ரொம்ப பிரபலமாகிட்டா அவங்க முன்னணி கதாநாயகர்கள் எல்லார் கூடவும் ஒரு படத்துல நடிச்சு ஒரு ரவுண்ட் வந்துருவாங்க. அதுக்கு பிறகு அவங்க அதே நிலைல நீடிக்கிறது அப்படிங்குறது ரொம்ப கஷ்டமான விஷயமா இருக்கும். ஆனா அதுக்கு நயன்தாரா மாதிரி ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்கு.
அந்த வரிசைல இப்ப த்ரிஷா இருக்காங்க. ஒரு கட்டத்துல எல்லா முன்னணி ஹீரோக்கள் கூடவும் நடிச்ச பின்னாடி ஒரு வருசத்துக்கு ஒன்னு ரெண்டு படங்கள் மட்டும் நடிச்சிட்டு இருந்தாங்க. அப்பவும் கதாநாயகியா மட்டுமே நடிச்சாங்க. Double Heroine கதைகள்ல கூட நடிக்க மாட்டேனு சொல்லிட்டாங்க. அதனால தான் சாமி 2 படத்துல கூட நடிக்கல. Multi Heroine படமான பொன்னியின் செல்வன்ல குந்தவைங்குற முக்கியமான கதாபாத்திரம் கொடுத்ததால நடிச்சாங்க.
எப்படி ஹீரோக்களுக்கு தனித்தனியா ஆடியன்ஸ் குரூப் இருக்கோ, அது மாதிரி த்ரிஷாவுக்குனு ஒரு தனி ஆடியன்ஸ் குரூப் இருக்கு. அதனால தான் அவங்க இன்னைக்கும் முன்னணி நாயகியா வலம் வராங்க. 96 படத்த தியேட்டர்ல பாத்தப்போ த்ரிஷா Entry Scene-அ ஹீரோ அறிமுகமாகுற சீன் மாதிரி ஆடியன்ஸ் விசிலடிச்சு கத்தி Celebrate பண்ணாங்க. பொன்னியின் செல்வன்ல குந்தவை வர காட்சிகளும் அப்படித்தான் இருந்துச்சு.
இப்போ அடுத்த கட்டமா விஜய், அஜித் 2 பேரோடயும் ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரே சமயத்துல ஜோடி சேர்ந்துருக்காங்க த்ரிஷா. விஜய் கூட ஏற்கனவே கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவினு 4 படங்கள் நடிச்சிருக்க த்ரிஷா 5வதா இப்போ லியோ படத்துல கதாநாயகியா நடிச்சுட்டு இருக்காங்க.
அதே மாதிரி அஜித் கூட ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால்னு 4 படங்கள் நடிச்சிருக்க த்ரிஷா 5வதா இப்ப விடாமுயற்சி படத்துல ஜோடி சேர்ந்துருக்காங்க. இந்த 2 படங்களும் வெற்றிப்படமா அமைஞ்சு, த்ரிஷா தமிழ் சினிமால இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகள்.