வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் title லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டர் வெளியீடு சம்பந்தமான செய்தி வந்ததிலிருந்தே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் #VaadivaasalTitleLook என்ற Tag-ஐ டிரெண்ட் செய்து வந்தனர். தற்போது வெளியாகியுள்ள போஸ்டரை ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
பொதுவாக வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுவது மட்டுமின்றி பல விருதுகளையும் வாங்கிக் குவிக்கும் படங்களாகவே அமையும். அந்த வகையில் தமிழ் சினிமாவின் ஒரு சிறந்த இயக்குனரான வெற்றிமாறனும், ஒரு சிறந்த நடிகரான சூர்யாவும் இணையும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே நிலவி வருகிறது.
வெற்றிமாறனும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாரும் இணைந்து பல வெற்றிப் பாடல்களையும் சிலிர்ப்பூட்டும் பின்னணி இசையையும் கொடுத்துள்ளனர். வாடிவாசல் திரைப்படத்திற்கும் ஜி.வி பிரகாஷ் தான் இசை அமைக்கிறார்.
வெளியான டைட்டில் லுக் போஸ்டரை வைத்து பார்க்கும்போது இப்படம் வெற்றிமாறனின் Cult Classic திரைப்படங்களின் வரிசையில் மீண்டும் ஒரு வெற்றிப்படமாக முத்திரை பதிக்கும் என தோன்றுகிறது. ஜல்லிக்கட்டு காளை பொருந்திய ஒரு உடைந்த பழங்கால நாணயம் இந்த டைட்டில் லுக் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. அதை சுற்றி மனிதர்களின் கால் தடங்களும் ஆங்காங்கே இருக்கிறது .
இப்படத்தை குறித்த அடுத்தடுத்த Update-கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிவாசல் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். வாடிவாசல் Title Look போஸ்டரை கீழே காணுங்கள்.